Thursday 7 May 2015

தொழில் நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா காலவரையின்றி பிற்போடப்பட்டது.



முன்னதாக அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்ட தொழில் நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா இன்று(07) நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் நேற்று மாலை அவசரமாக இரத்துச் செய்யப்பட்டது.

தேசிய பாடசாலையின் அதிபர் எம்.கிருபைராஜா தலைமையில் நடைபெறவிருந்த இத்திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதிகளாக பிரதி விவசாய அமைச்சர் அனோமா கமகே மற்றும் ஜக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான தயாகமகே உள்ளிட்டோர் கலந்து கொள்ளவிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நீண்ட காலத்தின் முன்  இக்கட்டடத்தின் நிர்மானப்பணிகள் நிறைவுற்றபோதும் இன்றுவரை மாணவர்களால் முறையாக பயன்படுத்த முடியமால் உள்ளமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அதிபர் தமக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் பிரகாரம் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் மேற்கொண்டதாகவும் திறப்பு விழா பிற்போடப்படுவதாக பின்னர் தமக்கு அறிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

No comments: