Tuesday 26 May 2015

குற்றத்தை ஒப்புக்கொண்ட நபருக்கு ஒரு வருட கடூழிய சிறை

வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகை திருடிய குற்றத்தை ஒப்புக்கொண்ட நபருக்கு, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட் பஸீல், திங்கட்கிழமை (25)  ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அத்துடன், அந்நபருக்கு மூவாயிரம் ரூபாய் தண்டமும் விதித்தார்.அவருக்கு எதிரான வழக்குகள் இடம்பெற்று வந்த நிலையில், திங்கட்கிழமை(25) மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டது.
பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த நபரெருவர், அக்கரைப்பற்று இசங்காணிச்சீமை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சம்பளத்துக்கு வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி அந்த வீட்டிலிருந்த நகைகளை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளர் அப்போது அக்கரைப்பற்று பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் குறித்த நபரை கைது செய்திருந்தனர்.

No comments: