Wednesday 29 April 2015

சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கோளாவில் – 1, அமரர் தியாயப்பன் – பாலாத்தை ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில், கடந்த 25-04-2015 சனிக்கிழமை பிற்பகல் பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் மிகப் பிரமாண்டமான முறையில் இவ்வாண்டுக்கான பாரம்பரிய கலாசார விளையாட்டு நிகழ்வுகளுடனான சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவானது இடம்பெற்றது.





அம்பாறை மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஜி.வி.சிந்தன உதார நாணயக்கார, அம்பாறை மாவட்ட திவிநெகும செயலகப் பணிப்பாளர் யு.பி.எஸ்.அனுருத்த பியதாச ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும், ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கணக்காளர் கே.கேசகன்,பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. திலகராணி கிருபைராஜா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

தேசியக்கொடி, மாகாணக்கொடி மற்றும் பிரதேச செயலகக் கொடிகளையேற்றி, தேசியகீதமிசைத்து ஆரம்பித்துவைக்கப்பட்ட மைதானப் போட்டி நிகழ்வுகள் பாரம்பரிய முறைப்படி மங்கல விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்தோடு தமிழர் பெருமக்களின் பாரம்பரியத்தினைப் பறைசாற்றும் வழுக்கு மரமேறுதல், தலையணைச் சமர், கயிறிழுத்தல், கண்கட்டி முட்டியுடைத்தல், கிடுகிழைத்தல், தேங்காய் துருவுதல், முட்டை மாற்றுதல் ஆகிய போட்டி நிகழ்வுகள் வளர்ந்தோருக்கும், யானைக்குக் கண் வைத்தல், சாக்கோட்டம், சமநிலை ஓட்டம், வினோத உடை, பலூன் ஊதியுடைத்தல், காசு பொறுக்குதல், மிட்டாய் பொறுக்குதல் போன்ற போட்டி நிகழ்வுகள் சிறுவர்களுக்கும் நடாத்தப்பட்டதுடன் ஒவ்வொரு போட்டி நிகழ்ச்சிகளையும் அதிதிகள் பார்வையிட்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தனர்.

இவ்விளையாட்டு விழாவின்போது அண்மையில் இடம்பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச விளையாட்டுப் போட்டிகளின்போது உதைபந்தாட்டத்தில் இரண்டாமிடத்தைப் பெற்ற கண்ணகிகிராமம் கனகர் விளையாட்டுக் கழக வீரர்களுக்குப் பாதணிகள் பிரதேச செயலாளரால் அன்பளிப்புச் செய்யப்பட்டதுடன், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சேமிப்பு ஊக்குவிப்பில் சிறப்பான சாதனைகளைப் புரிந்த ஆலையடிவேம்பு பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்களும் கிராமமட்ட மாதர் சங்க உறுப்பினர்களும் பரிசுகள், சான்றிதழ்கள் என்பன வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். இறுதியாக இவ்விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய வீர, வீராங்கனைகளுக்கான பரிசில்கள் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டன

Sunday 26 April 2015

ஆலையடிவேம்பு பிரதேச செயலக சித்திரைப் புதுவருட ஒன்றுகூடல்

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் வருடாந்தம் நடைபெறுகின்ற தமிழ் – சிங்கள சித்திரைப் புதுவருட ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று, 22-04-2015 புதன்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்றது.




பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் மூவினங்களையும் சேர்ந்த உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்ததுடன், பிறந்திருக்கும் மன்மத தமிழ் வருடத்தினைச் சிறப்பிக்கும் வகையிலான பதவிநிலை உத்தியோகத்தர்களின் சிறப்புரைகளும், அலுவலக உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் வாழ்த்துரைகளும் இடம்பெற்றன.

நிகழ்வின் இறுதியில் அனைத்து உத்தியோகத்தர்களும் பங்கெடுத்த மதியபோசன விருந்துபசார நிகழ்வும் இடம்பெற்றிருந்தது

திவிநெகும பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவிபெறும் வறிய மக்களுக்கு வாழ்வாதார உதவிப்பொருட்களை வழங்கிவைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் நேற்று, 22-04-2015 புதன்கிழமை பி.ப. 3.00 மணிக்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதேச செயலாளரது அழைப்பினை ஏற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரி.கலையரசன், நீர்ப்பாசனப் பிரதியமைச்சர் திருமதி.அனோமா கமகேயின் இணைப்பாளர் எம்.எம்.நிசாம், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச இணைப்பாளர் எஸ்.மோகன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.





ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நூறுநாள் துரித அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாழும் திவிநெகும பயனாளிகளின் வாழ்வாதாரச் சிறுதொழில் முயற்சிகளை ஊக்குவித்து, அவர்களது வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றும்பொருட்டு ஆலையடிவேம்பு பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்களால் தெரிவுசெய்யப்பட்ட 189 குடும்பங்களுக்கு குறித்த உதவிப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர், இவ் உதவிப் பொருட்களை உரிய மக்களுக்கு வழங்குவதில் கடந்தகாலங்களில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நிலவிய அரசியல் பாகுபாடுகள், முறையற்ற வீண் விரயங்களைத் தவிர்த்து தற்போது முற்றுமுழுதாக வாழ்வின் எழுச்சி அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்களின் சரியான தெரிவுகளின் அடிப்படையிலேயே குறித்த பொருட்கள் விநியோகிக்கப்படுவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர் திருமதி.அனோமா கமகேயின் இணைப்பாளர், பிரதி அமைச்சரின் சிபாரிசுகளின்பேரில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக விளக்கமளித்தார்

கண்காட்சி நிகழ்வு

அக்கரைப்பற்றில் செயற்படும் அரசுசாரா அமைப்பான பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினால் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நடாத்தப்பட்டுவரும் பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவச் சிறார்கள் இணைந்து நடாத்தும் கைப்பணிப் பொருட்களின் கண்காட்சி நிகழ்வு நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.





இக்கண்காட்சி நிகழ்வுக்கு அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்த ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன், திருக்கோவில் கல்வி வலய ஆரம்பப் பாடசாலைகளுக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.தர்மபாலன், ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன், அம்பாறை மாவட்ட அரசுசாரா அமைப்புக்களின் இணையத் தலைவர் வி.பரமசிங்கம், சேவ் த சில்ரன் அமைப்பின் பிரதிநிதி மற்றும் பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் தலைவி திருமதி. காந்திமதி ஜோய் ஆகியோர் இணைந்து அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்கள்.

ஆலையடிவேம்பு, கோபால் கடை வீதியிலுள்ள பாலர் பாடசாலையில் இடம்பெறும் குறித்த கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த கைப்பணிப் பொருட்களை அதிதிகள் பார்வையிட்டதைத் தொடர்ந்து நிகழ்வுக்கு வருகை தந்திருந்த பாலர் பாடசாலை மாணவர்களும் பெற்றோரும் பொதுமக்களும் பார்வையிட்டனர்.

பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினால் நடாத்தப்பட்டுவரும் பாலர் பாடசாலைகளான விவேகானந்தா, கனகாம்பிகை, கனகதுர்க்கா, விநாயகர் மற்றும் அம்பாள் பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களது கூட்டுமுயற்சியில் ஒழுங்குசெய்யப்பட்ட குறித்த கண்காட்சியில், தமது அன்றாட வாழ்க்கைச் சூழலில் பயன்படுத்தப்படும் பொருட்களை மூலப்பொருட்களாகக் கொண்டு அழகிய முறையிலும் கண்களைக் கவரும் வகையிலும் உருவாக்கப்பட்டிருந்த கைப்பணிப் பொருட்கள் சிறப்பிடம் பெற்றிருந்தன.
அத்துடன் குறித்த கண்காட்சியானது எதிர்வரும் 25-04-2015, சனிக்கிழமை வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Thursday 23 April 2015

விவேகானந்தர் இளைஞர் கழக சித்திரை விளையாட்டுப்போட்டிகள்

அக்கரைப்பற்று – 8, விவேகானந்தர் இளைஞர் கழகம் நடாத்திய சிறுவர்களுக்கான சித்திரை விளையாட்டுப்போட்டிகள் கடந்த 17-04-2015, வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.



ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாகவும் இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் கே.பிரபாகரன் சிறப்பு அதிதியாகவும், கிராம உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீதாசன் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்ட இவ்விளையாட்டு போட்டிகளில் சிறுவர் விளையாட்டுக்களான யானைக்குக் கண் வைத்தல், போத்தலில் நீர் நிரப்புதல், வினோத உடைப்போட்டி, மிட்டாய் பொறுக்குதல் உட்படப் பல போட்டி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டதுடன், வெற்றிபெற்ற சிறார்களுக்குப் பிரதேச செயலாளர் தலைமையிலான அதிதிகளால் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண விளையாட்டலுவல்கள் திணைக்களமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய இவ்வருடத்திற்கான ஆலையடிவேம்பு பிரதேசமட்ட விளையாட்டுப்போட்டிகளின்

கிழக்கு மாகாண விளையாட்டலுவல்கள் திணைக்களமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய இவ்வருடத்திற்கான ஆலையடிவேம்பு பிரதேசமட்ட விளையாட்டுப்போட்டிகளின் தொடர்ச்சியாக, உதைபந்தாட்டப்போட்டியின் மாபெரும் இறுதிப்போட்டி கடந்த 17-04-2015, வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.





ஆலையடிவேம்பு பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.ரிஷந்தனின் ஏற்பாட்டில் கோளாவில் – 2, அமரர் தியாகப்பன் – பாலாத்தை ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் ஆலையடிவேம்பு உதயம் அணியும், கண்ணகிகிராமம் கனகர் அணியும் மோதிய இந்த இறுதிப்போட்டிக்குப் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனும், சிறப்பு அதிதியாக அம்பாறை மாவட்ட உதவி விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.சப்றி நசாரும் கலந்து சிறப்பித்தனர்.

தேசியக்கொடியேற்றல், வீரர்கள் அறிமுக வைபவங்களைத் தொடர்ந்து ஆரம்பம் முதல் இறுதிவரை மிக விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இடம்பெற்ற இப்போட்டியில் ஆலையடிவேம்பு உதயம் அணி 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அபாரமாக ஆடி வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்தது.

போட்டியினைத் தொடர்ந்து இடம்பெற்ற பரிசளிப்பு வைபவத்தில் உரையாற்றிய அதிதிகள் இரண்டு அணி வீரர்களது திறமையையும் மைதான ஒழுக்கத்தையும் பாராட்டிப் பேசியதோடு, பிரதேச செயலாளர் உதயம் அணியினருக்கு வெற்றிக்கிண்ணத்தை வழங்கிவைத்தார். இதன்போது உதைபந்தாட்டப் பயிற்சிகளுக்கான அடிப்படை வசதிகள் மிகக்குறைந்த நிலையிலும் தமது அதீத திறமையால் இறுதிப்போட்டிவரை முன்னேறிய கண்ணகிகிராமம் கனகர் அணி வீரர்களைப் பாராட்டியதுடன், அவர்களுக்கான குறிப்பிட்ட சில வசதிகள் விரைவில் செய்து தரப்படும் எனவும் உறுதியளித்தார்.

இப்பரிசளிப்பு வைபவத்தில் நடைபெற்றுமுடிந்த ஆலையடிவேம்பு பிரதேசமட்ட போட்டிகளில் மென்பந்து கிரிக்கட் போட்டிகளில் சாம்பியனான யங்க் பிளவர்ஸ் கழகம், கரப்பந்தாட்டம் மற்றும் கூடைப்பந்து போட்டிகளில் சாம்பியனான ஜொலி போய்ஸ் கழகம் மற்றும் எல்லே போட்டிகளில் சாம்பியனான கனகர் கழகம் என்பனவற்றின் தலைவர்கள் தமது அணிக்கான வெற்றிக்கிண்ணங்களை அதிதிகளிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
Regards,

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷணைப் பொருட்களை வழங்கிவைக்கும் நிகழ்வு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சினால் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷணைப் பொருட்களை வழங்கிவைக்கும் நிகழ்வுகளில் ஆலையடிவேம்பிற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு கடந்த 17-04-2015, வெள்ளிக்கிழமை பி.ப. 3.00 மணிக்கு ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக திட்டமிடல் பிரிவும் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்விற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.முனவ்வரின் அழைப்பின்பேரில் பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல்.அலாவுதீனும், சிறப்பு அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனும் கலந்து சிறப்பித்தார்கள்.

முதற்கட்டமாக ஆலையடிவேம்பு பிரதேசத்தின் 7 கிராமசேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 119 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இதன்போது போஷணைப் பொருட்கள் அடங்கிய பொதிகள் அதிதிகளால் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டன. இப்பொதிகளில் அரிசி, சிவப்புப் பருப்பு, சோயா, டின்மீன், முட்டை, நெத்தலிக் கருவாடு, குரக்கன், நிலக்கடலை, உழுந்து, கௌப்பி மற்றும் கடலை என்பன உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், இவற்றுக்கு மேலதிகமாக குறித்த கர்ப்பிணித் தாய்மார்கள் பச்சைக் கீரைவகை மற்றும் தூய பசும்பால் என்பவற்றையும் தமது அன்றாட உணவோடு அவசியம் சேர்த்துக்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.



ஆலையடிவேம்பு பிரதேசத்தின் ஏனைய கிராமசேவகர் 15 பிரிவுகளைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷணைப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கும் நிகழ்வுகள் கடந்த 18-04-2015, சனிக்கிழமை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்ததோடு மொத்தமாக 246 கர்ப்பவதிகள் இப்பொதிகளைப் பெற்றுக்கொண்டனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.



Saturday 18 April 2015

பொத்துவில் ஆதார வைத்திய சாலையின் குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்...

 
அம்பாரை பொத்துவில் ஆதாரவைத்தியசாலையில் காணப்படும் பௌதீக வளங்கள் மற்றும் ஆளணி வளங்களை நிவர்த்தி செய்து பொத்துவில் பிரதேசத்தில் காணப்படும் முஸ்லிம்,தமிழ் சிங்கள மக்களுக்கு சிறப்பான சேவையினை வழங்குமாறு கோரி இன்று 18ம் திகதி சனிக்கிழமை பொத்துவில் பொது மக்கள் வைத்தியசாலைக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை செய்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் கோரிக்கை அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு கோசங்கள் எழுப்பி பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில் பொத்துவில் வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக 2007ம் ஆண்டு தரம் உயர்த்திய நிலையில் ஆதார வைத்தியசாலைக்கு தேவையான வசதிகள் எதுவும் வழங்கப்படாத நிலையில் இவ. வைத்தியசாலை இயங்கி வருகின்றது.


மேலும் இவ்வைத்தியசாலைக்கு விசேட வைத்திய நிபுணர் ஒருவர் நியமிக்கப்படவில்லை மேலும் மயக்க மருந்து வழங்கும் விசேட வைத்திய நிபுணர் இல்லாமை அத்துடன் சத்திர சிகிச்சைக் கூடத்திற்கு தேவையான வைத்திய உபகரணங்களை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளதுடன் தற்போது பணி புரியும் மகப்பேற்று வைத்தியரின் இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு கோரியும் கிழக்கு மாகாண சபையால் முடியாமல் விட்டால் பொத்துவில் ஆதார வைத்தியசாலையை பெயருக்காக வைத்திருக்காமல் மத்திய அரசிடம் கையளிக்குமாறும் கோரியும் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இவ் வினைத்திறன் அற்ற வைத்தியசாலையின் அபிவிருத்தியில் பங்கு பற்றாத தற்போதய அபிவிருத்தி குழுவை கலைத்து புதிய குழுவை அமைக்கும் படியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பொத்துவில் பிரதேசத்தை அரசியல் வாதிகள் வாக்கு வங்கியாக மட்டும் கருதாது இங்கு மக்கள் வாழ்கின்றார்கள் அவர்களையும் கருத்தி கொள்வதடன் 
அன்மையில் பொத்தவில் ஆதார வைத்தியசாலையில் இரத்த வங்கி திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது சுகாதார இராஜங்க அமைச்சர் ஹஸன் அலி தெரிவித்ததாவது இவ் வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதாக தெரிவித்திருந்தும் 
இதுவரையில் வாக்குறிதியை நிவர்த்தி செய்து கொடுக்காது கல்முனையில் இரண்டு ஆதார வைத்தியசாலைகள் இருக்கின்ற நிலையில் அதற்கு அண்மையில் நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலையை தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் விசனம்  திவித்துள்ளனர்.


ஆர்ப்பாட்டத்தில் பொது மக்கள் ஏந்திய கோசங்களாவன ஆளணி பற்றாக்குறையை நிவர்த்திசெய், சுகாதார உதவியாளர்களை உடன் நியமி,நிரந்தர விபியை நியமி,ஈ.சி.ஜீ யை நியமி வைத்தியசாலை குறைபாடுகளை நிவர்த்தி செய் மற்றும் மகப் பேற்று வைத்திய நிபுணரின் இடமாற்றத்தை உடனடியாக நிவர்த்தி செய் போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இருந்துடன் பொத்துவில் பௌத்த விகாராதிபதியும்  கலந்து கொண்டிருந்துடன் பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன் இடம் வைத்தியசாலையின் தேவைகள் அடங்கிய மகஜரியை சுகாதார அமைச்சரிடம் வழக்குமாறு தெரிவித்து பொது மக்களால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Wednesday 15 April 2015

கூடுதலான சேமிப்பை வைப்பு செய்த அங்கத்தவருக்கு பரிசுப்பொருளும், கை விஷேசமும்... மகாசக்தி

ஆலையடிவேம்பு பிரதேசம் அக்கரைப்பற்று வரைவுள்ள மகாசக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கமானது தமிழ் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நிலையான சேமிப்புத்திட்டத்தை 15ம் திகதி முதல்முறையாக ஆரம்பித்துள்ளது.


கூடுதலான சேமிப்பை வைப்பு செய்த அங்கத்தவருக்கு பரிசுப்பொருளும், கை விஷேசமும் மகாசக்தி அமைப்பின் தலைவர் திரு.க.சோமசுந்தரம் அவர்கள் வழங்கி வைப்பதையும், அருகில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்  கோ.காந்தரூபன்;, உபதலைவர் திருமதி. துளசிமணி மனோகரராஜா , செயலாளர் திரு.ச.திலகராஜன் , இயக்குனர் சபை உறுப்பினர்களும், பணியாளர்களும்  காணப்படுகின்றனர்.

Tuesday 14 April 2015

அனைத்து இனையபாவனையாளர்களுக்கும் எமது panakadu.com நிறுவன தித்திக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


ஆலையடிவேம்பு பிரதேசலாளர் வீ.ஜெகதீசன்


அவர்களின் வாழ்த்துச் செய்தி- 
மலர்ந்திருக்கும் சித்திரைப்புத்தாண்டு அனைவருக்கும் வளமான நிகழ்காலத்தைஉங்களுக்கு இனிமையையும்சுபீட்சத்தினையும்வெற்றியையும் ஏற்படுத்தும் புத்தாண்டாக அமைய இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . 
 இச் சித்திரைப்புத்தாண்டு எமது பிரதேச வாழ் அனைத்து மக்களதும் வாழ்வாதாரத்தில் சுபிட்ஷத்தை ஏற்படுத்தும் ஆண்டாக அமைய வாழ்த்துகின்றேன்



எமது  இனைய ஸ்தாபகர் நடராஜன் ஹரன் 
அவர்களின் வாழ்த்துச்செய்தி- பிறந்திருக்கும் மன்மத வருடம் எனும் நாமத்தினைக் கொண்ட இத் தமிழ் சிங்களப் புத்தாண்டு அனைத்து மக்கள் வாழ்விலும் சுபிட்சம் ஏற்பட்டு புதுயுகம் மலர வேண்டும் எமது மக்களின் மனம்களில் மகிழ்ச்சியும் புத்தொளியும் மன அமைதியும் சமாதானத்துடன் கூடிய ஆரோக்கியச் சூழலும் தொடர வாழ்த்துகின்றேன்









இனையப் பக்கத்தில் உங்களது படங்களுடன் வாழ்த்துக்களைத் தெரிவிக்க கீழுள்ள comment ல் TIPE செய்யுங்கள் அல்லது  sms (or) MMS ஊடாக  send - 89000020 (or) +94 777 51 42 79 இலக்கத்திற்கு உங்கள் புகைப் படம் + வாழ்த்துக்களை   அல்லது
 email – haran139@gmail.com (or) panankadu.com@gmail.com ஊடாக அனுப்பலாம் 

Thursday 9 April 2015

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரனை செய்யும் ஜனாதிபதி ஆனைக்குழுவின் இரண்டாவது நாள் அமர்வுகள்....

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரனை செய்யும் ஜனாதிபதி ஆனைக்குழுவின் இரண்டாவது நாள் அமர்வுகள் 09ம் திகதி வியாழக்கிழமை



 நிந்தவூர்,இறக்காமம், அக்கரைப்பற்று பொதுமக்களுக்கானதாக  ஆலையடிவேம்பு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன் மேற்பார்வையில் இடம் பெறுவதை படத்தில் காணலாம்

Wednesday 8 April 2015

சர்வ தேச தரத்திலான விசாரணை வேண்டாம், சர்வதேச விசாரணையே வேண்டும் - ஆலையடிவேம்பில் ஆர்ப்பாட்டம்

சர்வ தேச தரத்திலான விசாரணை வேண்டாம், சர்வதேச விசாரணையே வேண்டும் - ஆலையடிவேம்பில் ஆர்ப்பாட்டம் 



Tuesday 7 April 2015

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் 08, 09 இரு தினங்களிலும் ஆலையடிவேம்ப பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில்...

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் 08-04-2015, 09-04-2015 ஆகிய இரு தினங்களிலும் ஆலையடிவேம்ப பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடாத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது


மேற்குறிப்பிடப்பட்ட பொதுசன அமர்வுகள் முதல்நாள் 08-04-2015 அன்று ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, திருக்கோவில் மற்றும் காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், மறுநாள் 09-04-2015 அன்று அக்கரைப்பற்று, நிந்தவூர் மற்றும் இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் பாதிப்பிற்குள்ளான மக்களுக்காகவும் நடாத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகாசக்தி சிக்கன கூட்டுறவு சங்கத்தின் 40வது விவசாய கடன் வழங்கும் நிகழ்வில்...

அக்கரைப்பற்று மகாசக்தி சிக்கன கூட்டுறவு சங்கத்தின் 40வது விவசாய கடன் வழங்கும் நிகழ்வில்(07) கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரம் நீர்பாசணம் மீன்பிடி விவசாய கூட்டுறவு அமைச்சர் கி.துரைராஜசிங்கம் மற்றும் மாகாணசபை உறுப்பினர் எம்.இராயேஸ்வரன் தலைவர் சோமசுந்தரம் உடன் வழங்கிவைப்பதனையும் கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் காணலாம்