Thursday 29 August 2013

வலுவிழந்தோருக்கான வாழ்வாதார கொடுப்பனவு வழங்கல்

(உ.உதயகாந்த்)
“மஹிந்த சிந்தனை” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வலுவிழந்தோருக்கான வாழ்வாதார கொடுப்பனவு வழங்கல் மற்றும் தையல் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த பயிலுனர்களுக்கு சான்றிதழ் வழங்கல் வைபவம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் நவரெட்ணராஜா கலையரங்கில் இன்று 28.08.2013, புதன்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற்றபோது ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன் தனது தலைமை உரையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ் வைபவத்தில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழுகின்ற மாற்றுத் திறனாளிகள் 16 பேர், சமுக சேவைகள் திணைக்களத்தால் மாதாந்தம் வழங்கப்படும் உதவித் தொகைக்கான காசோலைகளை பெற்றுகொண்டதுடன், கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தால் ஆலையடிவேம்பு மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் நடாத்தப்பட்ட ஒரு வருடகால தையல் டிப்ளோமா பயிற்சிநெறியைப் பூர்த்தி செய்த 2011  மற்றும் 2012 ஆம் ஆண்டு பெண் பயிலுனர்கள் 30 பேர் தங்களுக்குரிய சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டனர்.


ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன் அவர்களுடைய தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்திற்கு பிரதம விருந்தினராக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகத்தர் கே.எல்.ஏ.எம்.ரஹ்மத்துல்லா, சமுக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எம்.மொகமட் அமீன், நிகழ்ச்சித்திட்ட உதவியாளர் கே.தெய்வேந்திரன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சி.எம்.ஹனீப், சமுர்த்தி வங்கிச் சங்க முகாமையாளர்களான ரி.பரமானந்தம், திருமதி.கமலப்பிரபா யோகநாதன் ஆகியோர் உட்பட கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.












இந்து எழுச்சி திருத்தல யாத்திரை

{ஹரனி}


அம்பாறை தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் இருந்து திருகோணமலை வெருகல் முருகன் ஆலயம் வரையிலான இந்து எழுச்சி திருத்தல யாத்திரை செவ்வாய்க்கிழமை (27) மாலை 4.00 மணிக்கு சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகியது.

இவ் இந்து எழுச்சி திருத்தல பாதயாத்திரையில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இவர்கள்இ அக்கரைப்பற்றுஇ கல்முனைஇ மட்க்களப்புஇ வாழசை;சேனை வாகரை ஊடாக பயணித்து வெருகல் வரையில் பிரதான வீதிகளில் உள்ள ஆலயங்களை தரிசித்து முருகன் ஆலயத்தை எதிர்வரும் 5ஆம் திகதி சென்றடையவுள்ளனர்.

இந்து சமயஇ கலாசார பண்பாட்டு அன்மீக விழுமியங்களை பேணி பாதுகாத்த இந்துக்களிடையே விழிப்புணர்வை வலுப்படுத்தும் நோக்கத்தோடு இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுகின்றது.







Monday 26 August 2013

சாந்திபுரம் பாதை மற்றும் வடிகான் அமைப்பதற்கான அடிக்கல் நடல் வைபவம்



(எஸ்.ஜே.பிரேம் ஆனந்த்)

'தயட்ட கிருள' அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சாகாம வீதியின் கூளாவடிச் சந்தியிலிருந்து சாந்திபுரம் செல்லும் பாதையினை அப்பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயி
களின் தேவை கருதி 1.5 மில்லியன் ரூபாய் செலவில் சுமார் 800 மீட்டர் நீளத்திற்கு செப்பனிடவும் புதிய வடிகான் அமைப்பதற்குமான அடிக்கல் நடும் வைபவம் 26.08.2013, திங்கட்கிழமை நடைபெற்றது. 

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன், நீத்தை பிரதேச இராணுவ கமாண்டர் கேணல்.நெவில் பெரேரா, அக்கரைப்பற்று பிரதேசப் பண்ணை அமைப்புக்களின் தலைவர் ஏ.அஹமட் மொஹிடீன், தொழில்நுடப உத்தியோகத்தர் ஆர்.ரதன், கிராம சேவை உத்தியோகத்தர் கே.லோகநாதன் ஆகியோரும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.





 

Saturday 24 August 2013

கஞ்சிகுடிச்சாறு, தங்கவேலாயுதபுரம் மக்களுக்கு நீர் பம்பிகள் அன்பளிப்பு.

கஞ்சிகுடிச்சாறு, தங்கவேலாயுதபுரம் மக்களுக்கு நீர் பம்பிகள் அன்பளிப்பு.
கிழக்கு மாகாண சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட உறுப்பினர்களான மு.இராஜேஸ்வரன் மற்றும் த.கலையரசன் ஆகியோரின் வேண்டுகோளின் பிரகாரம் கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அமைச்சினால் 25 நீர் பம்பிகள் தங்கவேலாயுதபுரம் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மாகாண விவசாய,கால்நடை மற்றும் மீன்பிடி அமைச்சரான நஸீர் அஹமட், அமைச்சின் செயலாளர் பத்மநாதன், மாகாண சபை உறுப்பினர்களான மு.இராஜேஸ்வரன் மற்றும் த.கலையரசன் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலாளர் கோபாலரத்தினம், பணிப்பாளர்கள், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் கஞ்சிகுடிச்சாறு, தங்கவேலாயுதபுரம், தாமரை குளம் ஆகிய பிரதேசங்களுக்கு மின்சார வசதியினை பெற்று தருமாறும் மாகாண சபை உறுப்பினர்கள் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டனர்.

அண்மையில் யானையின் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதுடன்,   இப் பிரதேசத்தில் மின்சாரம், குடிநீர், போக்குவரத்து, தொலை தொடர், வைத்தியசாலை, பாடசாலை போன்ற அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலேயே இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இப்பிரதேசங்கள் யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். யுத்த காலத்தின் போது இப்பிரதேசம் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தமை குறிப்பிட தக்கது.












மரம் பறித்தவர் மீது மரம் வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

ஹரனி

அக்கரைப்பற்று பிரதேசத்தில் மரம் அரியும் ஆலை ஒன்றில் லொறியில் இருந்து மரம் பறிக்கும் போது மரம் பறித்தவர் மீது மரம் வீழ்ந்ததில் ஒருவர் பரிதாபகரமா உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவத்தனர்.
இவ்வாறு பாலகம சலிகம கித்துல்கம பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய  கே.எல். பிரதீப். என்பவரே உயிரிழந்துள்ளார்.
அக்கரைப்பற்று பழைய ஆஸ்பத்திரி வீதியில் உள்ள மரம் அரியும் ஆலைஒன்றில் அவிசாவளை பிரதேசத்தில் இருந்து லொறியில் மரங்களை கொண்டுவந்து மரம் அரியும் ஆலையில் சம்பவதினமான நேற்று மாலை 6.00 மணிக்கு லொறியில் இருந்த மரங்களை நிவத்தில் நின்று  பறித்துக் கொண்டிருந்தபோது மரம் ஒன்று தவறி அவர் மீது வீழ்ந்ததையடுத்து சம்பவ இடத்தி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் உயிரிழந்தவரின்; சடலம் அக்கரைப்பற்று ஆhதாரவைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

விநாயகபுரம் ஸ்ரீ பத்திரகாளி கோவில் தீ மிதிப்பு வைபவம்

ஹரனி

திருக்கோவில் விநாயகபுரம் ஸ்ரீ பத்திரகாளி கோவில் தீ மிதிப்பு வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை காலையில் இடம்பெற்றது.
இவ்வாலய வருடாந்த உற்சவம் கடந்த 18 ம்திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி 21ம் திகதி புதன்கிழமை பாற்குடபவனியும் தொடர்ந்து 5 தினங்கள் பூஜைகள் இடம்பெற்று நேற்று வெள்ளிக்கிழமை தீ மிதிப்பும் 8ம் சடங்கு 30.ம் திதி வெள்ளிக்கிழமை இடம்பெற்று வருடாந்த உற்சவம் நிறைவுபெறும்
இவ் தீ மிதிப்பில் நூற்றுக்கனக்காக பெண்கள் ஆண்கள் கலந்துகொண்டு தீ மிதித்தனர்.









ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகன் தேவஸ்த்தான மகாகும்பாபிஷேகம்

ஹரனி

ஆலையடிவேம்பு ஸ்ரீ வள்ளி தேவசேனாசமேத ஸ்ரீ முருகப்பெருமான் தேவஸ்தான மஹாகும்பாபிஷேகம் நேற்று வியாழக்கிழமை வெகுவிமர்சையாக இடம்பெற்றது
இவ் ஆலய மஹாகும்பாபிஷேகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 18 ம் திகதி பிரதிஷ்டா பிரதமகுரு சிவஸ்ரீ.க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் ஆரம்;பமாகி நேற்று புதன்கிழமை எண்ணெய்காப்பு வியாழக்கிழமை சாத்தலும் நேற்று வியாழக்கிழமை பகல் 11. மணியளவில் மஹாகும்பாபிஷேகம்  இடம்பெற்றது.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.ஆ.கோகிலராஜசர்மா, சாவசாதகாசிரியர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள் உட்பட பல குர்மார்கள் கிரிகைகால குருமார்களாக கடமையாற்றினர்  இவ் மஹாகும்பாபிஷேகத்தில் பெரும் திரளான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர்












Wednesday 14 August 2013

நோன்புப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி


ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் முஸ்லிம் உத்தியோகத்தர்களால் வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும் நோன்புப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி இம்முறை 14.08.2013, புதன்கிழமை காலை 11.00 மணிக்கு, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் நவரெட்ணராஜா கலையரங்கில் நடாத்தப்பட்டது.

நிருவாக உத்தியோகத்தர் K.L.A.M.ரஹ்மத்துல்லா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் V.ஜெகதீசன் அவர்கள் கலந்து கொண்டதுடன் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. திலகராணி கிருபைராஜா, கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் E.குலசேகரன், இவர்களுடன் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராமசேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரிப் பயிலுனர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.


பிரதம முகாமைத்துவ உதவியாளர் A.L.M.பசீல் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட இந்நிகழ்வில் “ரமழானின் பெருமை” என்ற தலைப்பில் அபிவிருத்தி இணைப்பு உத்தியோகத்தர் S.L.M.அன்வர் அவர்களால் சிறப்புரை வழங்கப்பட்டது. கலை நிகழ்வுகளாக முகாமைத்துவ உதவியாளர் திருமதி.A.H.நூறுல் ஹினாயா அவர்களால் புனித ரமழான் சிறப்புக் கவிதை வாசிக்கப்பட்டதுடன் முகாமைத்துவ உதவியாளர் V.சுகிர்தராஜா, பட்டதாரிப் பயிலுனர் R.சிவானந்தம் ஆகியோர் பாடல்களையும் வழங்கினர். இவற்றுடன் பட்டதாரிப் பயிலுனர் S.J.பிரேம் ஆனந்த் அவர்களின் நகைச்சுவை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.



 
இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஆகியோரின் உரைகளும் இடம்பெற்றன.

நிகழ்வின் இறுதியில் நன்றி உரையினை பிரதம முகாமைத்துவ உதவியாளர் A.L.M.பசீல் அவர்கள் வழங்கினார்.

Monday 12 August 2013

வரலஷ்மி விரதம்!

16.08.2013 அன்று வரலஷ்மி விரதம்!
கைலாயத்தில் சிவனும் சக்தியும் சொக்கட்டான் ஆடிக்கொண்டு இருந்தார்கள். அப்போது சிவபெருமான் தன் அருகில் இருந்த சிவகணங்களான சித்திரநோமியை பார்த்து, “நான் தானே ஜெயித்தேன்.” என்றார். அதற்கு சிவகணமும் “ஆமாம்” என்றது.

இதை கேட்ட பார்வதிதேவி கோபம் கொண்டு, “நடுநிலையில்லாமல் தீர்ப்பு சொன்ன நீ குஷ்டரோகம் பிடித்து அவதிப்படுவாய்.” என்று சபித்தாள்.

அந்த நிமிடமே அந்த சிவகணத்தின் உடலில் குஷ்டரோகம் பிடித்துக்கொண்டது. தன் தவறை மன்னிக்கும்படி வேண்டினான் சித்திரநோமி.

சிவபெருமானும் சக்தியிடம் சமாதானம் செய்தார். எறும்பு ஊற கல்லும் தேயும் என்பது போல் பார்வதிதேவி சமாதானம் அடைந்து, “சித்திரநோமி… நீ துங்கபத்திரா நதிக்கரையில் கங்கையும் யமுனையும் சங்கமமாகும் நேரத்தில், சூரியன் கடகராசியில் இருக்கும்போது சுக்லபட்ச வெள்ளியன்று சுமங்கலி பெண்கள் பூஜிக்கும் போது, அவர்களின் பார்வையில் நீ படவேண்டும். அவர்கள் உனக்கு வரலஷ்மி பூஜையின் மகிமையை பற்றிச் சொல்லுவார்கள். அதன் பிறகு உன் சாபம் நீங்கும்.” என்றார்.

சிவகணமான சித்திரநோமி, பார்வதி கூறியது போல் அங்கிருந்த பெண்களிடம் ஸ்ரீவரலஷ்மி விரதத்தின் மகிமையை கேட்டவுடன் நோய் நீங்கியது.

இவ்வாறு விரதத்தின் மகிமையை கேட்டாலே மகிமை என்றால் அதை முறையாக செய்தால் என்ன பலன் நமக்கு கிடைக்கும் என்பதை ஒரு அரசரின் சரித்திரத்தை படித்தால் தெரிந்துக் கொள்ளலாம்…மேலும் படிக்க



ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகன் ஆலய தெட்க்கு வாசல் அடிக்கல் நாட்டிவைப்பு

ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகன் ஆலய தெட்க்கு வாசல் அடிக்கல் நாட்டிவைப்பு மாவட்ட  பாராளுமண்ற உறுப்பினர் பி.பியசேன மறறும் ஆலய பிரதம குரு ராயூ சர்மா மறறும் தலைவர் நாட்டிவைத்தனர்