Saturday 31 December 2016

ஆண்டிறுதி விழா

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கடமையாற்றி இவ்வருடத்தில் (2016) இடமாற்றம் பெற்று வேறு அரச அலுவலகங்களுக்குச் சென்ற மற்றும் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்களின் சேவைகளைக் கௌரவிக்கும் நிகழ்வும் ஆண்டிறுதி விழாவும் இன்று (31) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.

Monday 19 December 2016

மழை வேண்டி விசேட பூஜை

மழை வேண்டி விசேட பூஜை  வெள்ளிக்கிழமை 



அம்பாறை மாவடடத்தில் தற்போது காணப்படும் மழை அற்ற காலநிலையினை கருத்தில் கொண்டு  ஆலையடிவேம்புப் பிரதேச இந்து மா மன்றத்தால்ஏற்பாடு செய்து நடாத்தப்படும் மழை வேண்டி விசேட பூஜைநிகழ்கவுள் இன்று  வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடி பிள்ளையார் ஆலயத்தில் இடம் பெறவுள்ளது 

Thursday 8 December 2016

அத்துமீறி உட்பிரவேசித 11 கைது

நீதிமன்றினால் தடைசெய்யப்பட்ட பிரதேசத்திற்குள் அத்துமீறி உட்பிரவேசித   கைது


திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டைமடு வனபரிபாலன பிரதேசத்தில் சட்டவிரோதமாக அத்துமீறி உட்பிரவேசித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் 11பேர் நேற்று (05)மாலை கைது செய்யப்பட்டார்கள்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

கிழக்கு மாகாணத்தின் மற்றவர்களின் மத கலாசார உரிமைகளை   மதிக்காத வகையில் செயற்படும் எவராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி

இலட்சக்கணக்கான மக்களின் கதறலும் புரட்சி தலைவியின் சகாப்தம் நிறைவுக்கு வருகின்றது.
-வங்கக் கடலோரம் தமிழக திரை உலகின், அரசியல் அரங்கத்தின் மாபெரும் சகாப்தம் மீளாதுயில் கொள்கிறது
-ஜெயாவின் உடல் வைக்கப்பட்ட சந்தனப்பேழை, சவக்குழிக்குள் இறக்கப்படுகின்றது.

Thursday 1 December 2016

தாழ் அமுக்கம்



அம்பாறை, பொத்துவில் கடல் பிராந்தியத்தில் தாழ் அமுக்கம் நிலை கொண்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின்

Tuesday 29 November 2016

கால்நடை நடமாடும் சேவை

ஆலையடிவேம்பு பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி  டாக்டர் எம்.ஜ.றிஸ்கான் தலைமையில் பிரதேசங்களில் நடமாடும் சேவை இடம் பெற்று  வருகின்றது

Monday 28 November 2016

பாடசாலையின் கல்விக்கு இடையூறு விளைவித்த அரச உத்தியோகத்தர்

திருக்கோவில் கல்வி வலய அக்கரைப்பற்று திருவள்ளுவர் பாடசாலையில் இன்று காலை வழமை  போன்று  கல்வி நடவடிக்கைகள் தொடர்வதற்காக பாடசாலைக்கு வந்த மாணவர்கள் நுழைவாயிலின் தன்மைக்கட்டு முகம் சுழித்துப்போனதுடன் இவ்வாறான நயவஞ்சக  செயலினை செய்தவரைக்கண்டு வியந்து நின்றனர் 

Wednesday 23 November 2016

காரைதீவில் கைக்குண்டு மீட்பு

அம்பாறை, காரைதீவுப் பிரதேசத்தில் வீதியொன்றில் விளம்பரப்பலகை நாட்டுவதற்காக நிலத்தைத் தோண்டியபோது, கைக்குண்டு ஒன்றை, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (22) மாலை மீட்டுள்ளதாக, சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

Friday 18 November 2016

புனர்வாழ்வு அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் கண்ணகிகிராமத்துக்கு விஜயம்


சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் வழிகாட்டலில் கடந்தகால உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்காக நடைமுறைபடுத்தப்பட்டுவரும் வீட்டுத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் வீடுகள், மலசலகூடங்கள், பல்தேவைக் கட்டடம் மற்றும் பாதை சீரமைப்புக்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயும் கள விஜயமொன்று இன்று (18) காலை கண்ணகிகிராமத்தில் இடம்பெற்றது.

Friday 11 November 2016

போதைவஸ்து விழிப்புணர்வு

 துஷி
உலக சிறுவர் நலன் காப்பகத்தின் அனுசரணையோடு யாழ் பல்கலை முகாமைத்துவபீட மாணவர்களினால் அண்மையில்  கிளிநொச்சி தர்மபுரம் சிபிஎ கல்வி நிலையத்தில் மது மற்றும் போதைவஸ்துதொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றிருந்து. 

Tuesday 1 November 2016

அலைபேசி அழைப்புக் கட்டணங்கள் அதிகரிக்கின்றன

15 சதவீத வற் வரி அதிகரிப்பு, செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
அதற்கிணங்க ​​தொலைபேசி, அலைபேசி அழைப்புக் கட்டணங்கள்  அதிகரிக்கின்றன.
80 பொருட்கள் மற்றும் சேவைகள் வற் அதிகரிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அழைப்புக்கட்டணம், தபால் கட்டணம் உள்ளிட்டவை உள்வாங்கப்பட்டுள்ளன.

Friday 28 October 2016

ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் பிரதேச சபையும் இணைந்து நடாத்திய பொது மயான சிரமதானமும் மரநடுகை நிகழ்வும்


ஆலையடிவேம்பு பிரதேச செயலகமானது ஆலையடிவேம்பு பிரதேச சபையோடு இணைந்து ஏற்பாடு செய்திருந்த மாபெரும் சிரமதான நிகழ்வு இன்று (28) காலை 6.00 மணி தொடக்கம் பொத்துவில் வீதி, அக்கரைப்பற்று - 9 கிராம சேவகர் பிரிவிலுள்ள பொது மயானத்தில் இடம்பெற்றது.

Tuesday 25 October 2016

கண்ணகிகிராம மக்களுக்கு விரைவில் காணி உறுதிப்பத்திரங்கள


அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கடந்த 37 வருடங்களாக காணி உறுதிப்பத்திரங்கள் இல்லாது வாழும் கண்ணகிகிராம மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கான உடன் நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் என அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் உறுதி வழங்கியுள்ளார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்துள்ள பொது மயான சிரமதான நிகழ்வு

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் அனுசரணையோடும் 'நாம் வசிக்கும் சுற்றுச் சூழலைத் தூய்மையாக வைத்திருப்போம்எனும் தொனிப்பொருளோடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொத்துவில் வீதி, அக்கரைப்பற்று - 9 கிராம சேவகர் பிரிவிலுள்ள பொது மயானத்தைத் துப்பரவு செய்யும் சிரமதான நிகழ்வு நாளை மறுதினம் 28-10-2016, வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tuesday 18 October 2016

 மரை இறைச்சியுடன் மூவர் கைது

BY - KRISH
075 7196520

108 கிலோகிராம் மரை இறைச்சியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அம்பாறை, சாகாமம் காட்டுப்பகுதியில் மூன்று சந்தேக நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக திருக்கோவில் பிரதேசத்திலுள்ள குளங்களில் நீர் அருந்துவதற்காக அக்குளங்களை நாடி மிருகங்கள் வருகின்றன. இவ்வாறு வரும்  மிருகங்கள் வேட்டையாடப்படுவதாக தகவல் அறிந்த பொலிஸார் இது தொடர்பாக கவனம் செலுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை சாகாமம் விசேட அதிரடிப்படையினருக்கு  கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, காட்டுப்பகுதிக்கு சென்றபோது,  மேற்படி மரை இறைச்சியுடன் மூன்று சந்தேக நபர்களையும் அழைத்து வந்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மூவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்து 108 கிலோ மரை இறைச்சியையும் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, மிருக வேட்டையில் ஈடுபடுவோர் உடனடியாக கைவிட வேண்டும் என்பதுடன் சட்டத்தை மதிக்காது மிருக வேட்டையில் ஈடுபடுவோருக்கு எதிராக  மிக கடுமையாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் கூறினர்.

Friday 14 October 2016

கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

NEWS BY- KIRUSHANTHAN
075 7196520



இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசாரப்பீடம், வர்த்தக முகாமைத்துவப்பீடம், இஸ்லாமிய கற்கைகள் அரபுமொழிப்பீடம் ஆகியவற்றின் இரண்டாம் பருவ கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ.நௌபர், இன்று வெள்ளிக்கிழமை (14) தெரிவித்தார்.
பிரயோக விஞ்ஞானபீடத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 24ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Tuesday 11 October 2016

கேதார கெளரி விரதம் (11) ஆரம்பம்

கேதார கெளரி விரதம் சர்வ மங்களங்களையும் தரும் விரதம் ஆகும். கல்விஉத்தியோகம்வியாபாரம்திருமணம் முதலானவற்றை எமக்குத் தருவதோடு நோய் நொடி அற்ற வாழ்வையும் தரவல்லது.

கேதார கெளரி விரதம் புரட்டாதி மாதம் சுக்கில பக்ஷ தசமி முதல் (இன்று 11 )ஆரம்பமாகி  ஐப்பசி அமாவாசையுடன்  நிறைவுறும் விரதம் ஆகும். 

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற வாணி விழா நிகழ்வுகள்


ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் நடாத்திய இவ்வாண்டுக்கான கலைவாணி விழா மற்றும் வாணி விழா சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வுகள் இன்று (11) மாலை பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றன.

வீரமகா காளியம்மன் ஆலய தீ மிதிப்பு

News By -K.Kirushanthan 
               0778361495
அம்பாறை ,ஆலையடிவேம்பு ஸ்ரீ வீரமகா காளியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் நேற்று (11) பக்தர்கள் பத்தி   ததும்பும்  தீ மிதிப்பதனை  படங்களில் காணலாம் 

Monday 10 October 2016

ஆலையடிவேம்பில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்


ஆலையடிவேம்பு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இவ்வருடத்திற்கான இரண்டாவது கூட்டம் அதன் தலைவரும், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான கவிந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் இன்று (10) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

நிலைபேறான அபிவிருத்தி


இலங்கை கல்வி அபிவிருத்திக் கூட்டமைப்பின் அனுசரனையில் ”நிலைபேறான அபிவிருத்தி எனும் தொனிப்பொருளில்” (09) கிழக்கு மாகாண மட்ட விழிப்புணர்வு செயலமர்வு  அட்டாளைச்சேனை ப.நோ.கூ.கட்டிடத்தில் சி.ஈ.டி. அமைப்பின்  மாவட்ட இனைப்பாளர் எம்.எச்.எம்.உவைஸ் தலமையில் இடம்பெற்றபோது .

நவராத்தி

நவராத்தி தினத்தினை முன்னிட்டு இன்று ஆலையடிவேம்பு வித்தியாலய மாணவர்களது வாணி ஊர்வலத்தினை காணலாம்  

Friday 7 October 2016

குடிநீருக்கான யுத்தங்கள் மூளலாம்...

நேரடி பார்வை அஹலிஹா ,காமிலா 

வளமுள்ள கிழக்கில் வளமற்றுக் கிடக்கும் மொறவேவ


உலகில் மூன்றில் ஒரு பகுதி நிலம் ! மூன்றில் இரண்டு பகுதி நீர் ! அந்த ஒருபகுதி நிலப்பரப்பில் வாழ்வனவற்றுக்கு இந்த நீர் அத்தியாவசியமானது. ஆனால் என்றும் போதமை உள்ளது. எதிர்காலத்தில் குடிநீருக்கான யுத்தங்கள் மூளலாம் என ஆய்வாளர்கள் கூறத்தொடங்கிவிட்டனர்.
எதிர் காலத்தில் அல்ல, இப் பொளுதிலிருந்தே ஆங்காங்கு குடிநீர் பிரச்சினைகள் உருவாகிவிட்டதனை அவதானிக்க முடிகின்றது.



 நெய்னாகாடுப் பிரதேசத்தில் 16 வேலைத்திட்டங்கள்


BY - KRISH

அம்பாறை, நெய்னாகாடுப் பிரதேசத்தில் 16 வேலைத்திட்டங்களை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) முன்னெடுக்கவுள்ளதாக திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு இணைத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் இன்று (07) தெரிவித்தார். 


சம்மாந்துறை பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.றிப்னாஸ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு இந்த வேலைத்திட்டங்கள் யாவும் 52,014,000.00 ரூபாய் நிதியில்  ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். 

Wednesday 5 October 2016

NEWS BY- KIRUSHANTHAN

2016ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள்  செவ்வாய்க்கிழமை (04) இரவு வெளியாகியுள்ள நிலையில் அம்பாறை, அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் கல்வி வலயங்களில் 338 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக அவ்வவ் வலயக் கல்லிப் பணிப்பாளர்கள் தெரிவித்தனர். 

அக்கரைப்பற்றுக் கல்வி வலயத்தில் 228 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர். இந்நிலையில், அக்கரைப்பற்றுக் கோட்டத்தில் 98 பேரும் அட்டாளைச்சேனைக் கோட்டத்தில் 91 பேரும் பொத்துவில் கோட்டத்தில் 39 பேரும் சித்தி பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று  வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாஸீம் தெரிவித்தார். 

அக்கரைப்பற்றுக் கல்வி வலயத்திலுள்ள அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலயத்தைச் மாணவன் முஹம்மட் ஜாபிர் அத்தீக் அஹமட் 187 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளதாக அவ்வித்தியாலய அதிபர் எம்.எஸ்.அப்துல் நயீம் தெரிவித்தார்.   இதேவேளை, திருக்கோவில் கல்வி வலயத்தில்  110 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக அவ்வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் தெரிவித்தார். பொத்துவில் கோட்டத்தில் 14 மாணவர்களும் திருக்கோவில் கோட்டத்தில் 40 மாணவர்களும் ஆலையடிவேம்புக் கோட்டத்தில்; 56 மாணவர்களும் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், இவ்வலயத்தைச் சேர்ந்த தமிழ்மொழி மூலமான 02 மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் 184 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திலுள்ளனர். திருக்கோவில் கோட்டத்திலுள்ள தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தைச் சேர்ந்த கிருபாகரன் புவிராஜனும் ஆலையடிவேம்புக் கோட்டத்திலுள்ள திருவள்ளுவர் பாடசாலையைச் சேர்ந்த கனகராஜ் விதுர்காவுமே 184 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இவ்வலயத்தில் 3 மாணவர்கள் 182 புள்ளிகளைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.  

அக்கரைப்பற்றில் 4 வியாபாரிகளுக்கு எச்சரிக்கை

NEWS BY - KIRUSHANTHAN

அம்பாறை, அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சுகாதாரம் அற்ற முறையில் மரக்கறிகள் மற்றும் உணவுகளை  விற்பனைக்கு வைத்திருந்த வியாபாரிகள்; 07 பேரை எச்சரித்துள்ளதாக  சிரேஷ்ட பொதுச் சுகாதார அதிகாரி ஏ.எம்.பௌமி தெரிவித்தார். குறித்த பகுதியில் பொதுச் சுகாதார அதிகாரிகள் இன்று புதன்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

 இதன்போது பாதையோரத்தில் விற்பனைக்காக வைத்திருந்த வற்றாளைக்கிழங்கு, சின்ன வெங்காயம், கருவாடு ஆகியவற்றைக் கைப்பற்றியதுடன், இவற்றை விற்பனைக்கு வைத்திருந்த 03 பேரை எச்சரித்துள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை, சுகாதாரம் அற்ற முறையில் காணப்பட்ட தேநீர்க் கடை உரிமையாளர்கள் 04 பேரை எச்சரித்துள்ளதுடன், தேநீர்க் கடை ஒன்றில் சுகாதாரம் அற்ற  முறையில் கொத்துரொட்டிக்காக வைக்கப்பட்டிருந்த மாவைக் கைப்பற்றியதாகவும் அவர் கூறினார். 

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வு


கடந்த அக்டோபர், 1 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் கோளாவில் - 1, அம்மன் மற்றும் மறுமலர்ச்சி முன்பள்ளிகளும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சர்வதேச சிறுவர் தின ஒன்றுகூடலும் பரிசளிப்பு வைபவமும் நேற்று (4) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.

Wednesday 28 September 2016

 அம்பாறையில் 167,000 ஏக்கரில் பெரும்போகச் செய்கை


NEWS BY - KRISH
2016 -2017ஆம் ஆண்டுக்கான பெரும்போகச் செய்கையானது அம்பாறை மாவட்டத்தில் 167,000 ஏக்கரில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில், இதற்கான நீர்ப்பாசன வசதியானது சேனநாயக்க சமுத்திரத்திலிருந்து நேரடியாகவும் அச்சமுத்திரத்திலிருந்து சிறிய குளங்கள் மூலமாகவும் செய்து கொடுக்கப்படும் என மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் எல்.எஸ்.சிறிவர்த்தன தெரிவித்தார். விவசாய நீர்ப்பாசனத் திட்டம் தொடர்பான குழுக் கூட்டம், அக்கரைப்பற்றுப் பிரதேச செயலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. சேனநாயக சமுத்திரத்திலிருந்து நேரடியாக 76,140 ஏக்கருக்கும் கல்லோயா வலதுகரைக் குளத்திலிருந்து 24,010 ஏக்கருக்கும் பண்ணல்கம, எக்கல ஓயா, அம்பலா ஓயா, பன்னல ஓயா ஆகிய குளங்களிலிருந்து 19,850 ஏக்கருக்கும் நீர்ப்பாசன வசதி கொடுக்கப்படும்.

 இதற்காக சேனநாயக சமுத்திரத்தில் 8,324 அடிக் நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 47,000 ஏக்கரும் மழை நீரை நம்பிச் செய்கை பண்ணப்படும் எனவும் அவர் கூறினார்.  

Tuesday 27 September 2016

ஆலையடிவேம்பில் வீடமைப்பு உதவியாக சீமெந்துப் பொதிகள் வழங்கிவைப்பு


வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினூடாக சீமெந்துப் பூச்சு வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாழும் வறிய குடும்பங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான சீமெந்துப் பொதிகளை வழங்கிவைக்கும் இரண்டாம் கட்ட வைபவம் இன்று (27) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

Monday 26 September 2016

ஆளில்லா விமானத்தால் பதற்றம்

News By - K.Kirushanthan 

படுகொலை செய்யப்பட்டு, பொரளை கனத்தை மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள, சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலம், ஐந்தரை வருடங்களின் பின்னர், இன்று செவ்வாய்க்கிழமை (27) தோண்டியெடுக்கப்பட்டது. 

 யானை தாக்கியதில் ஒருவர் பலி


NEWS BY - KIRUSHANTHAN

அம்பாறை, உகண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காட்டு யானை ஒன்று தாக்கியதில்  கிராமவாசியான டபிள்யூ.பி.விமலசேன என்பவர் உயிரிழந்துள்ளார். 

இன்று திங்கட்கிழமை அதிகாலை அங்கு வந்த குறித்த யானை, அவ்வீட்டு முன்புறத்தில் வைக்கப்பட்டிருந்த  நெல் மூடையை உடைத்து நெல்லை உட்கொண்டுள்ளது. சத்தம் கேட்டு மேற்படி நபர் வெளியில் வந்தபோதே யானையின் தாக்குதலுக்கு உள்ளானார்.

NEWS BY- KAILAYAPILLAI KIRUSHANTHAN


அம்பாறை, அக்கரைப்பற்று 3ஆம் கட்டை வயல்வெளியிலிருந்து மோட்டார் குண்டு ஒன்றை  ஞாயிற்றுக்கிழமை (25) இரவு பொலிஸார் மீட்டுள்ளனர். 

Sunday 25 September 2016

NEWS BY- KAILAYAPILLAI KIRUSHANTHAN



அம்பாறை, பொத்துவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊறணிப் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பாணமைப் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததுடன், திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பாரிய ஆர்ப்பாட்டம்

பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோமாரி  வைத்தியசாலையை தரமுயர்த்தல் மற்றும் குறைபாடுகளை நிவர்த்திக்கக்கோரி கோமாரி பொதுமக்களால் இன்று(25) பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Friday 23 September 2016

NEWS BY - KIRUSHANTHAN 


பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோமாரி களுகொல்ல எனும் பிரதேசத்தில் நேற்று(22) மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியானதுடன் மேலுமொருவர் படுகாயங்களுடன் கோமாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


பொத்துவில் பிரதேசத்தில் இருந்து திருக்கோவில் பிரதேசத்தை நோக்கி பயணம் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் களுகொல்ல வளைவில் எதிரே வந்த பஸ் வண்டிக்கு வழிவிட முயற்சித்த போதே தடுமாறி தூக்கி வீசப்பட்டுள்ளதாகவும் இதனால் வீதி அருகில் இருந்த கம்பியுடன்  மோதி இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


விபத்தில் படுகாயமடைந்த இருவரும் கோமாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் ஒருவர் மரணமடைந்த நிலையில் படுகாயமடைந்த மேலுமொருவர்  அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு நேற்றிரவு மாற்றப்பட்டார்.


விபத்தில் பலியான இளைஞன் திருக்கோவில் விநாயகபுரத்தை சேர்ந்தவர் என தெரியவருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.


பலியானவரின் சடலம் கோமாரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிசார் ஆரம்பித்துள்ளனா.

சிறந்த ஊடகவியாலாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு

NEWS BY -  KIRUSHANTHAN 


இன்டர் நியூஸ் சர்வதேச ஊடக நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட "வன் சிறிலங்கா ஜேனலிசம் பொலோசிப்" பயிற்சி கற்கை நெறியின்  சிறந்த ஊடகவியாலாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு (20) கொழும்பு-07,   லக்ஸ்மன் கதிர்காமர் சர்வதேச தொடர்புகளுக்கும் உபாயா ஆய்வுக்குமான நிறுவனத்தின் மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்றது
 

நிகழ்வில் அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் சார்பில் பங்கேற்ற ஊடகவியலாளர் வி.சுகிர்தகுமார் தமிழ் மொழி மூலமான வெற்றியாளருக்கான விருதை பெற்றுக் கொண்டதுடன் , சிங்கள மொழி மூலமான வெற்றியாளருக்கான விருதினை ராவய பத்திரிகையின் ஊடகவியலாளர் தரிந்து தனதாக்கி கொண்டார் ,இருவருக்கும் ஸ்மாட் கையடக்க தொலைபேசியும் பரிசாக வழங்கப்பட்டன
 

சமூக பிரச்சினைகள் தொடர்பான சிறந்த கட்டுரைகளை வெளியீடு செய்து சிறப்பாக பயிற்சியினை பூர்த்தி செய்த 8 ஊடகவியலாளர்கள் "மெரிட்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அம்பாரை மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்த தினகரன் பத்திரிகை நிருபர்கள்  என்.ஹரன்,  வசந்தா அருள்ரெட்ணம், யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவம் செய்த சுமித்தி தங்கராசா, எங்கள் தேசம் நிருபர் அபுபக்கர் பாயிஸ், சுடர் ஓளி நிருபர் சனத் , பிபிசி நிருபர் ராகுல். ராவய பத்திரிகையின் நிருபர் இந்துனில், டிலிசா, உள்ளிட்டவர்கள் சிறந்த மெரிட் விருதினை பெற்றுக்  கொண்டதுடன் வவுனியா ச .அகலிகா ,அம்பாறை  மாவடடத்தினை சேர்ந்த ஏ.எல்.எம்.ஸினால் ,யு .எல்.எம்.றியாஸ் சான்றிதழை பெற்றுக் கொண்டனர்   

Thursday 22 September 2016

ஆலையடிவேம்பில் இடம்பெற்ற கரையோர சுத்தம் பேணும் சர்வதேச தின நிகழ்வு


கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத் திணைக்களம் மற்றும் கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை ஆகியவற்றின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வருடத்தின் கரையோர சுத்தம் பேணும் சர்வதேச தின நிகழ்வு உதவிப் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் இன்று (22) காலை இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கரையோரப் பாதுகாப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.எஸ்.பாபுஜியினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இவ்வைபவம் அக்கரைப்பற்று - 9 கிராம சேவகர் பிரிவிலுள்ள சின்னமுகத்துவாரம் தாம்போதியிலிருந்து காலை 7.00 மணியளவில் ஆரம்பமாகி, அக்கரைப்பற்று இந்து மயானத்துக்கு அருகிலுள்ள ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயம் வரையிலான சுமார் 2½ கிலோமீட்டர்கள் நீளமான கடற்கரைப் பிரதேசத்தைச் சுத்தப்படுத்தும் நிகழ்வாக காலை 11.00 மணிவரை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா உள்ளிட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடன் கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர் திருமதி. என்.டி.எஸ்.எல்.செனேவிரத்ன, ஆலையடிவேம்பு பிரதேச மேற்பார்வைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.மகேஸ்வரன், மேஜர் ஜயசேன, மேஜர் அபயசேகர மற்றும் கேணல் தினேஷ் நாணயக்கார உள்ளிட்ட அக்கரைப்பற்று இராணுவ முகாமைச் சேர்ந்த சுமார் 60 இராணுவ வீரர்களும், ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழக உறுப்பினர்கள் 20 பேரும், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் சுமார் 20 பொலிஸ் உத்தியோகத்தர்களும், ஆசிரியர் ரி.சுதாகரன் தலைமையில் கோளாவில் விநாயகர் மகா வித்தியாலய மாணவ, மாணவிகள் 40 பேரும், சின்னமுகத்துவாரம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்களும், கழிவுகளை இடம்மாற்றும் உழவு இயந்திரங்களுடன் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் செயலாளர் திருமதி. விஜயராணி கமலநாதன் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் சுமார் 10 பேரும் பங்குபற்றியிருந்தனர்.

ஆலையடிவேம்பு உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் மற்றும் அக்கரைப்பற்று இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் ஜயசேன ஆகியோரின் இன்றைய கரையோர சுத்தம் பேணும் சர்வதேச தின நிகழ்வு தொடர்பான உரைகளைத் தொடர்ந்து அவர்களால் பாதுகாப்புக் கையுறைகளும், கழிவு சேகரிக்கும் பைகளும் பங்குபற்றுனர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. தகிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது இடம்பெற்ற குறிப்பிட்ட கடற்கரைப் பிரதேசத்தைச் சுத்தமாக்கும் பணிகளுக்கான தாகசாந்தி மற்றும் காலையுணவு வசதிகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந்நிகழ்வின் இறுதியில் தமது அழைப்பை ஏற்று குறித்த பணிகளில் இணைந்துகொண்ட அனைத்து பொதுத்துறை உத்தியோகத்தர்கள், படையினர், இளைஞர் கழக உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் ஆலையடிவேம்பு உதவிப் பிரதேச செயலாளர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.