Monday 25 April 2016

புத்தாண்டு விளையாட்டு விழா – 2016

 பிரதேச செயலக
சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா – 2016
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் வருடாந்தம் நடாத்தப்படுகின்ற மாபெரும் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா இம்முறை எதிர்வரும் 29-04-2016, வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் கண்ணகிகிராமம், கனகர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

கடந்த வருடங்களைப்போன்று இவ்வருடமும் தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள், சுவாரசியமான நிகழ்வுகள் பலவற்றை உள்ளடக்கியதாக இவ்விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்கதாக,
01. சைக்கிளோட்டம்.
02. மரதன் ஓட்டம்.
03. படகோட்டம்.
04. வழுக்கு மரமேறுதல்.
05. தலையணைச் சமர்.
06. கண்கட்டி முட்டியுடைத்தல்.
07. யானைக்குக் கண் வைத்தல்.
08. நகரங்களுக்கிடையில் குண்டு போடுதல்.
09. கிடுகு இழைத்தல்.
10. சங்கீதக் கதிரை.
11. தேங்காய் துருவுதல்.
12. முட்டை மாற்றுதல்.
13. கயிறிழுத்தல்.
14. சாக்கோட்டம்.
15. தொப்பி எறிதல்.
16. சமநிலை ஓட்டம் (சிறார்களுக்கானது).
17. வினோத உடைப் போட்டி (சிறார்களுக்கானது).
18. பலூன் உடைத்தல் (சிறார்களுக்கானது).
ஆகிய போட்டிகள் அன்றைய தினம் நடைபெறவுள்ளதுடன், போட்டிகளின் முடிவில் பரிசளிப்பு வைபவமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் சைக்கிளோட்டம், மரதன் ஓட்டம் ஆகியவை காலை 6.00 மணிக்கு பிரதேச செயலக முன்றலில் ஆரம்பமாகவுள்ளதுடன், படகோட்டப் போட்டியானது பனங்காடு பாலத்தடி, தில்லையாற்றில் காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகும்.
இப்போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றவிரும்பும் போட்டியாளர்களும் சிறுவர்களும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் அழகையா ரிஷந்தன் அவர்களை 077 2483312 என்ற இலக்கத்தோடு தொடர்புகொண்டு முன்கூட்டியே தமது பெயர்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இயன்றவரை இத்தகவலை முகநூலில் பகிர்ந்து இப்போட்டி நிகழ்ச்சிகளுக்கு உங்களது ஆதரவினை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்

No comments: