Tuesday 4 June 2019

பாலஸ்தாபனம்



அருள்மிகு மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்த்தான பாலஸ்தாபன கும்பாபிஷேக

நிகழ்வுகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 04ம்  திகதி இடம்பெறவுள்ளது


 கிழக்கிலங்கையில் பிரசித்திபெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் அம்பாறை
மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரே ஒரு சிவஸ்தலம்மாகவும் காணப்படும்
பனங்காடு ஸ்ரீ பாசுபதேஸ்வரர் ஆலய பாலஸ்தாபனம் விகாரி வருடம் வைகாசி மாதம் 21ம்
நாள் செவ்வாய்க்கிழமை மிருகசீரிட நட்சத்திரம் சுபமுகூர்த்த வேளையில் கிரியைகள்
ஆரம்பமாகஉள்ளது

வைகாசி 22ஆம் தேதி அடுத்த நாள் திருவாதிரை நட்சத்திரமும் துதியை திதியும்
கண்டு யோகமும் கூடிய 10.10 மணி மணிமுதல் 11 45 வரை உள்ள சுப முகூர்த்த
நேரத்தில்  சிவபெருமானுக்கும் பரிவாரங்களுக்கும் பாலஸ்தாபனம் இடம்பெற உள்ளது

பாலஸ்தாபன கிரியைகள் யாவும் ஊவா மாகாண இந்து கலாச்சார பிரதம குரு கீர்த்தி
ஸ்ரீ குமரகுரு மணி சிவஸ்ரீ பால குமாரன்
சிவாச்சாரியார் , பண்டாரவளை  சிவசுப்பிரமணிய பிரதம
குருவினால்  இடம்பெறவுள்ளதுடன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மூர்த்தீஸ்வரர்
குருக்களும்  சாதகாசிரியர் பிரியாமணி சிவஸ்ரீ பூரண சந்திரானந்த
குருக்களினாலும  இடம் பெறும்

haran

No comments: