Friday 27 April 2018

கண்காணிப்பு வேலைத்திட்டம் இன்று முதல் அமுலுக்கு

வெசாக் நோன்மதி தினத்தை முன்னிட்ட காலப்பகுதியில் நாடு முழுவதிலும் உள்ளடக்கிய வகையில் மது தொடர்பான குற்ற செயல் மற்றும் கலால் திணைக்களத்தினால் அனுமதி பெற்ற நிலையங்களினால் இடம் பெறும் முறைக்கேடுகளை தவிர்ப்பதற்கு விசேட கண்காணிப்பு வேலைத்திட்டம் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது என்று இலங்கை மது வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

Tuesday 24 April 2018

ஆலையடிவேம்பு பிரதேச செயலக சித்திரைப் புதுவருட ஒன்றுகூடல்



ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் வருடாந்தம் நடைபெறுகின்ற தமிழ் – சிங்கள சித்திரைப் புதுவருட ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று (23) நண்பகல் 12.00 மணிக்கு பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்றது.

Sunday 22 April 2018

செயலமர்வு

(சித்தா)
பட்டிருப்பு கல்வி வலயத்தில் அனைத்து மாணவர்களும் பாண்டித்திய மட்டத்தை அடைவதற்கான (யுஊஊஊடு) செயலமர்வு கடந்த ஏப்ரல் 20,21,22 ஆகிய மூன்று நாட்களும் பட்டிருப்பு கல்வி வலயத்தில் தரம் ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான அனைத்து மாணவர்களும் பாண்டித்திய மட்டத்தை அடைவதற்கான (ACCCL) செயலமர்வு மட் / பட் / பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் பட்டிருப்பு கல்வி வலய ஆரம்பக் கல்விப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பா.வரதராஜன் தலைமையில் நடைபெற்றது.

முச்சக்கரவண்டி திருட்டுக்கும்பல் கைது

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அண்மைக்காலமாக முச்சக்கரவண்டிகளைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட, 5 சந்தேகநபர்களையும், எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எச்.எம். நஸீல் நேற்றைய தினம் (21) உத்தரவிட்டுள்ளார்.

Thursday 19 April 2018

ஆலையடிவேம்பு சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா



ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் வருடந்தோறும் நடாத்தப்படுகின்ற மாபெரும் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா இம்முறை எதிர்வரும் 27-04-2018, வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் அக்கரைப்பற்று - 7/4, தருமசங்கரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

Monday 16 April 2018

பாலியல் துஸ்பிரயோகம்

10 வயது மாணவியை பாடசாலையில் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த  அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Sunday 15 April 2018

சிறுமியர் மீதான துஷ்பிரயோகங்களைத் தடுக்க முடியாதிருக்கிறது.

haran
ஒருவர் தன்னை எத்தகைய நோக்கத்துடன் தொட்டுப் பேசுகிறார் என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர் புரிய வைப்பது அவசியம். இது தொடர்பாக பெற்றோர், சிறுவர்,- சிறுமிகள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன.

திடீரென எரிந்து சேதமடைந்துள்ள சம்பவம்


தேற்றாத்தீவில் ஓடிக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென எரிந்து சேதமடைந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

Tuesday 10 April 2018

மாடுகளை கடத்தியவர கைது

சட்டவிரோதமான முறையில் காயமடைந்த மாடுகளை கடத்தியவரை மிருகவதைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிசிர பண்டார தெரிவித்துள்ளார்.


Monday 9 April 2018

டெங்கு ஒழிப்பு


மட்டக்களப்பில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் பாரிய டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் இன்று (9) ஒசானம் நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டது.

மின்னல்

haran

(செ.துஜியந்தன்)
கல்முனை தமிழ்ப் பிரிவிலுள்ள சேனைக்குடியிருப்பு கிராமத்தில் நேற்றிரவு
11 மணியளவில் மின்னல் தாக்கத்தினால் பல வீடுகளிலுள்ள பெறுமதியான வீட்டு மின் உபகரணங்கள் சேதமடைந்துள்ளது.

Saturday 7 April 2018

பட்டதாரி ,நேர்முகப்பரீட்சை இம்மாதம் 16 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை

தொழிலற்ற பட்டதாரிகளை பயிற்சிக்காக இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இரட்டைச் சகோதரர்கள் வரலாற்றுச் சாதனை

haran

(சா.நடனசபேசன்)
வெளியான  சாதாரணதரப் பரீட்சையில் சம்மாந்துறை கல்விவலயத்தில் உள்ள வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் இரட்டைச் சகோதரர்கள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். இம் மாணவர்களுக்கு வேப்பையடியைச் சேர்ந்த தாமோதரம் யோகேஸ்வரன் அவர்களால் துவிச்சக்கரவண்டி ஒன்று அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

ஆலயங்களின் புனரமைப்புக்காக நிதிகள்


(சிவம்)

சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சினால் மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களில் யுத்தகாலத்தில் பாதிக்கப்பட்ட ஆலயங்களின் புனரமைப்புக்காக வருடாந்தம் நிதிகள் வழங்கும் நிகழ்வு இன்று (07) நாவற்குடா இந்து கலாசார நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

Friday 6 April 2018

முதலாம் தவணை விடுமுறை இன்று ஆரம்பமாகிறது


அரசாங்க மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கான முதலாம் தவணை விடுமுறை இன்று ஆரம்பமாகிறது.

Thursday 5 April 2018

சிறுமி ஒருவரின் சடலம் நேற்று (05) மீட்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு - ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள நெல்லூர் கிராமத்தில் சிறுமி ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

Wednesday 4 April 2018

ஆலையடிவேம்பில் இடம்பெற்ற முன்பிள்ளைப் பருவ சிறார்களின் சிந்தனைக் காட்சியும் பரிசளிப்பு வைபவமும்



பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அனுசரணையோடு தேசிய சிறுவர் செயலகத்தினால் ஆலையடிவேம்பு பிரதேச முன்பள்ளி மாணவர்களின் ஆக்கத்திறனை மேம்படுத்தும் நோக்கோடு முன்பள்ளி மட்டங்களில் நடாத்தப்பட்ட சித்திரப் போட்டிகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 70 மாணவர்களிலிருந்து இவ்வாண்டுக்கான இறுதி வெற்றியாளர்களைத் தெரிவுசெய்யும் வகையிலான சித்திரப் போட்டியும் பரிசளிப்பு வைபவமும் நேற்று (03) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.

Tuesday 3 April 2018

பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ள தெரிவு


இவ்வருடம் லண்டனில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்டம் கோரளைப்பற்று பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த செல்வி.தாட்சாயிணி நிமலேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Sunday 1 April 2018

தீயில் எரிந்து நாசம் , சுமார் ஒரு கோடி பெறுமதி

haran
மட்டக்களப்பு, திருகோணமலை பிரதான வீதி ஊரணி பகுதியிலுள்ள வாகன திருத்துமிடம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்த்தான தீர்த்தோற்சவம்


தீர்த்தோற்சவம்..

அக்கரைப்பற்று பனங்காடு ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்த்தான  வருடாந்த அலங்கார  திருவிழாவின் இறுதி நாள் தீர்த்தோற்சவ நிகழ்வு இன்று   (30) ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ  மூர்த்தி ஸ்வரக் குருக்களினால்   திர்த்தக் கேனியில் இடம் பெறுவதையும், தீர்த்தமாடும  பக்த்தர்களையும் படங்களில் காணலாம் 
haran