Sunday 31 July 2016

கோடரியால் கொத்திக் கொலை

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் கிராமத்தில் சனிக்கிழமை (30) இரவு குடும்பஸ்தர் ஒருவர் கோடரியால் கொத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகத்தின் அடிப்படையில் அவரது மனைவி (வயது 46) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


Thursday 28 July 2016

புனித பீட திறப்பு விழா

அம்பாரை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் பழைய மாணவர் ஒருவரால் 20இலட்சம் ரூபா செலவில்  நிர்மாணிக்கப்பட்ட இராமகிருஷ்ணர் புனித பீட திறப்பு விழா இன்று(28) நடைபெற்றது.

பாராடடி கெளரவிக்கும் மகாசக்த்தி

அக்கரைப்பற்று வரைவுள்ள மகாசக்த்தி  சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கத்தினால்  (28) கல்முனை  கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்க்காக  கடமையாற்றி ஒவ்வு பெற்ற 

Friday 22 July 2016

மக்கள் பிரச்சினைகள் உள்வாங்கத் திட்டம்

2017ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி மன்றங்களின் வரவு செலவுத்திட்டத்தில் மக்கள் பிரச்சினைகள் உள்வாங்கத் திட்டம்



பாலியல் துஷ்பிரயோகம்

புத்திசுவாதீனமற்ற 21 வயதுடைய இளைஞர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 44 வயதுடைய முச்சக்கரவண்டிச் சாரதி ஒருவரை அம்பாறை,

விபத்தில் பலி

அம்பாறை, பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (19) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலியாகியதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

Monday 18 July 2016

கதிர்காம தீர்த்தோற்சவம் 21ம் திகதி தீர்த்தோற்சவம்

புனித பூமியான கதிர்காமக் கந்தனின் வடுடாந்த ஆடிவேல்  உற்சவம் ஜூலை  05ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 21ம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.


கதிர்காமத்தினை தமிழில் கதிர் + காமம் என்று விளக்கி கூறுகின்றனர்    இருப்பினும் சிங்களத்தில் கதரகம என்று அழைக்கின்றமையும் கேற்கக் கூடியதாகவுள்ளது இத்தலத்திற்கு இவ்வாறான சிறப்புப் பெயர் வந்தமைக்கான காரணம் ஒரு புதிராகவே உள்ளது
கார்த்திகேய கிராம கஜரகம என்பதன் திரிபே இப் பெயர் வரக் காரணம் என்போரும் ,கதிர் –ஒளி காமம் –அன்பு நிறைந்த இடம், என்பதுடன் கதிரு எனும் சிங்களச் சொல்லின் மருவு என கூறுவோரும் உள்ளனர்.

விபத்தில் பலி

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைக்குடியிருப்பு பிரதான வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற  மோட்டார் சைக்கிள் விபத்தில் சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த இலங்கை மின்சார சபையின் பொத்துவில் அலுவலகத்தில் கடமையாற்றும் 2 பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் தங்கவேல் (42 வயது) பலியாகியுள்ளார்.

Thursday 14 July 2016

அரை மரதன் ஓட்டப் போட்டி




இலங்கை கிறிக்கட் வீரர்கள் பலரும் வெளிநாட்டு உலாசப் பிரயாணிகளும், தேசிய மரதன் ஓட்ட வீர வீராங்கனைகளும் பாடசாலை உயர்தர வகுப்பு மாண மாணவிகளும்  பங்கேற்பு

சர்வதேச ரீதியில் உல்லாச பயணத்துறைக்கு பெயர்பெற்ற பொத்துவில் – அறுகம்பை பிரதேசத்தில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான அரை மரதன் ஓட்டப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை ஆரம்பமாகின்றது.

டொப் ரக சிகரெட்களும் விளக்கமறியலில்

தடைசெய்யப்பட்ட 80 டொப் ரக சிகரெட்களும் மற்றும் 92 கிராம் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அம்பாறை, சாய்ந்தமருது பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட

யானைகளின் தொல்லை

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் மீள்குடியேற்ற கிராமத்துக்குள் நேற்று செவ்வாய்க்கிழமை (12)  இரவு 12 மணியளவில் நுழைந்த காட்டு யானைகள், வீடொன்றை உடைத்து குறித்த வீட்டுக்குள் இருந்த அரிசி மற்றும் உணவுப் பொருட்களை நாசம் செய்துள்ளன.

Friday 8 July 2016

விண்ணப்பம் கோரல்

அம்பாறை வலயக் கல்வி அலுவலகத்தில் வெற்றிடமாகவுள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்; பதவிக்கு, இலங்கை கல்வி நிர்வாக சேவையிலுள்ள தகுதி வாய்ந்த உத்தியோகத்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எச்.ஈ.டபிள்யூ.ஜி. தியாநாயக்க இன்று  வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

Monday 4 July 2016

யானை தாக்கி யது ...

News by - Kailayapillai Kirushanthan
 திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட சாகாமம் குளத்தின் அருகாமையில் மீனவர்கள்  இருந்த வேளை இன்று 4ம் திகதி திங்கட்கிழமை அதிகாலை யானை தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில்  ஒருவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Friday 1 July 2016

முன்பிள்ளைப்பருவ சிறார்களின் ஆற்றல்களை மேம்படுத்தும் சித்திரப் போட்டி நிகழ்ச்சி


தேசிய சிறுவர் செயலகத்தின் அனுசரணையோடு ஆலையடிவேம்பு பிரதேச முன்பிள்ளைப்பருவ சிறார்களின் அழகியற்கலை ஆற்றல்களை மேம்படுத்தும் நோக்கில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட சித்திரப் போட்டி நிகழ்ச்சியொன்று நேற்று (30) இடம்பெற்றிருந்தது.

‪மீண்டும்‬ ‪சிந்தியுங்கள்‬”


மீண்டும்‬ ‪சிந்தியுங்கள்‬”  ” திட்டத்தின் பேரணி நாளை சனிக்கிழமை மாலை களுவாஞ்சிகுடி ஓந்தாச்சிமடத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது...... சக்தி TV சார்பாக எமது ஊடக நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்....

என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள் இலவச போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.... 0777 51 42 79

யாத்திரிகர் கள் மீது காட்டுயானை தாக்கியதில் காயம்....

யாத்திரிகர் கள்  மீது  காட்டுயானை  தாக்கியதில் ஜவர் காயம்
 


கதிர்காம யாத்திரிகர் கள்  மீது  காட்டுயானை  தாக்கியதில் ஜவர் காயமடைந்து மூவர் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் 
கதிர்காமத்திற்கு பாதையாத்திரையாக சென்ற அடியார் குழுவினர் மீது நேற்று 01ம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு  காட்டு யானைகள்  தாக்கியுள்ளதுடன் ஜவர் காயமடைந்த நிலையில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்