Friday 31 January 2014

"ஆலையடிவேம்பில் பட்டதாரிப் பயிலுனர்களுக்கு மூன்றாவது கட்டமாக நிரந்தர நியமனங்கள் வழங்கிவைப்பு"


ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குக் கடந்த 2012 ஆம் வருடம் ஜூன், ஜூலை மாதங்களில் பட்டதாரிப் பயிலுனர்களாக இணைக்கப்பட்டவர்களில் மேலும் 29 பேருக்கு மூன்றாம்கட்டமாக நிரந்தர நியமனங்கள் வழங்கும் வைபவம் 29.01.2014, புதன்கிழமையன்று நடைபெற்றது.

பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.திலகராணி கிருபைராஜா, நிருவாக உத்தியோகத்தர் கே.எல்.ஏ.எம்.ரஹ்மத்துல்லா மற்றும் கிராமசேவகர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஈ.குலசேகரன், பதவிநிலை உதவியாளர் ஏ.எல்.எம்.பஸீல் மற்றும் பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.சசீந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பிரதேச செயலாளருடன் இணைந்து நியமனங்களை வழங்கிவைத்தார்கள்.

இந்நிகழ்வு குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதேச செயலாளர், கடந்த 28.10.2013 மற்றும் 04.12.2013 ஆகிய தினங்களில் நடாத்தப்பட்ட முன்னைய இரண்டு நிகழ்வுகளிலும் முறையே 39 மற்றும் 14 பட்டதாரிப் பயிலுனர்கள் தங்களுக்கான நிரந்தர நியமனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், இதுவரையில் நிரந்தர நியமனங்கள் கிடைக்கப்பெறாதுள்ள மேலும் 15 பட்டதாரிப் பயிலுனர்களுக்கு அவற்றை உடனடியாகப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

"கவடாப்பிட்டி கிராமத்தில் பொதுக்கிணறுக்கான அடிக்கல் நாட்டிவைப்பும் துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பும்"



சுவிற்சர்லாந்து நாட்டில் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்த இந்துக்களால் நிருவகிக்கப்படும் பொதுத்தொண்டு அமைப்புக்களான சூரிச் நகர அருள்மிகு சிவன் ஆலய அன்பே சிவம் சைவத்தமிழ்ச் சங்கம் மற்றும் துர்க்கா தமிழர் கலை கலாசார மன்றம் ஆகியவற்றுடன் சுவிஸில் வசிக்கும் அமரத்துவமடைந்த திருமதி.செல்லப்பா பார்வதி அவர்களுடைய குடும்பத்தாரின் அனுசரணைகளுடன் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள குடியேற்றக் கிராமமான கவடாப்பிட்டியில் வாழும் 37 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கியுள்ள குடிநீர்ப் பிரச்சனைக்குத் தீர்வுகாணும்வகையில் அமைக்கப்படவுள்ள பொதுக்கிணற்றுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு மற்றும் அக்கிராமத்திலுள்ள 7 வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு என்பன 28-01-2014, செவ்வாய்க்கிழமை காலை அன்பே சிவம் சைவத்தமிழ்ச் சங்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் சண்முகம் கார்த்திக் தலைமையில் இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் பிரதேச செயலாளரது வெகுஜனத் தொடர்பு உத்தியோகத்தர் எஸ்.ஜே.பிரேம் ஆனந்த், கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஈ.குலசேகரன், கிராமசேவை உத்தியோகத்தர்களான ஏ.தர்மதாச, ஆர்.கோகுல்ராஜ், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.சுதர்சினி, கண்ணகிகிராமம் கண்ணகி வித்தியாலய அதிபர் எஸ்.சுரேஸ் ஸ்டீபன்சன், ஆலையடிவேம்பு இந்து மாமன்றத்தின் தலைவர் வி.சந்திரசேகரம் ஆகியோருடன் அன்பே சிவம் சைவத்தமிழ்ச் சங்கத்தின் உத்தியோகத்தர்களும் பங்குபற்றினர்.

இங்கு இந்துமதப் பாரம்பரியத்துடனான விசேட பூஜை நிகழ்வுடன் பிரதேச செயலாளரும் ஏனைய பிரமுகர்களும் பொதுக்கிணற்றுக்கான அடிக்கற்களை நாட்டிவைத்ததுடன், கண்ணகிகிராமம் கண்ணகி வித்தியாலயத்தில் பயிலும் 7 மாணவர்களுக்குத் துவிச்சக்கரவண்டிகளையும் வழங்கிவைத்து உரையாற்றினர்.
"கஞ்சிகுடியாறில் மீனவர்சங்கக் கட்டடத் திறப்புவிழா"

தேசத்திற்கு மகுடம் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்கீழ் மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரட்னவின் நிதி ஒதுக்கீட்டின்கீழ் கஞ்சிகுடியாறு கிராமிய மீனவர் சங்கத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத்தின் திறப்புவிழா 27-01-2014, திங்கட்கிழமை காலை கஞ்சிகுடியாறு மீனவர் அமைப்பின் அலுவலகத்தில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

சமயத்தலைவர்களின் ஆசியுடன் நடைபெற்ற இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக அமைச்சர் ராஜித சேனாரட்ன, விசேட அதிதியாக அமைச்சர் சரத் வீரசேகர, கௌரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன, சிறப்பு அதிதிகளாக மீன்பிடி அமைச்சின் செயலாளர் ஜயந்த சந்திரசோம, மேலதிக செயலாளர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்த்தன, அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபர் எஸ்.விமலநாதன் மற்றும் மேஜர் உபுல் வீரசிங்க ஆகியோரும் பிரதேச மீனவர் சங்கங்களின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின்போது மீன்பிடி அமைச்சினால் மீனவர்களுக்கு 6 தோணிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டதுடன் இந்திய காப் வர்க்கத்தினைச் சேர்ந்த சுமார் ஒரு இலட்சம் ரோகு மற்றும் கட்லா இன மீன் குஞ்சுகள் கஞ்சிகுடியாறு குளத்தில் அதிதிகளால் விடப்பட்டன.

"இந்துமாமன்றத்தினால் நாவலர் பாலர் பாடசாலை அங்குரார்ப்பணம்"



ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் அனுசரணையுடன் நடாத்தப்படவுள்ள நாவலர் பாலர் பாடசாலையின் அங்குரார்ப்பண வைபவம் இன்று 20-01-2014, திங்கட்கிழமை நண்பகல் அதன் தலைவர் வி.சந்திரசேகரம் தலைமையில் இந்துமாமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பாலர் பாடசாலையினை அங்குரார்ப்பணம் செய்துவைத்த இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட செயலகத்தின் பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் எஸ்.கனகரெத்தினம், அம்பாறை மாவட்ட முன்பள்ளிக் கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் ஜனாப்.இப்றாஹிம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் திருக்கோவில் வலயக்கல்விப் பணிமனையின் முன்பள்ளி இணைப்பாளர் எஸ்.தர்மபாலன், இறைபணிச் செம்மல் ரி.கைலாயபிள்ளை, ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்பிள்ளைப்பராய அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன், கலாசார உத்தியோகத்தர் திருமதி.என்.தேவராஜ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

இதன்போது பனங்காடு, அருள்மிகு பாசுபதேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ க.லோகநாதன் குருக்களால் சம்பிரதாயபூர்வ சமயச்சடங்குகளும் ஆசியுரையும் வழங்கப்பட்டதுடன், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரால் பாலர்களுக்கு அப்பியாசக்கொப்பிகளும் ஒருதொகை புத்தகங்களும் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டன.
 

Monday 13 January 2014

அனைத்து இனையபாவனையாளர்களுக்கும் 

எமது panakadu.com நிறுவன தித்திக்கும் பொங்கல்
நல்வாழ்த்துக்கள்

எமது நிறுவன ஸ்தாபகர் நடராஜன் ஹரன் 
அவர்களின் வாழ்த்துச்செய்தி- மலர்ந்திருக்கும் பொங்கல்
 அனைவருக்கும் வளமான நிகழ்காலத்தைஉங்களுக்கு இனிமையையும்சுபீட்சத்தினையும்வெற்றியையும் ஏற்படுத்தும் புத்தாண்டாக அமைய இனிய  நல்வாழ்த்துக்கள் வாழ்துகிறேன். 



ஆலையடிவேம்பு பிரதேசலாளர் வீ.ஜெகதீசன் 


அவர்களின் வாழ்த்துச்செய்தி- எமது பிரதேச வாழ் அனைத்து மக்களதும் வாழ்வாதாரத்தில் சுபிட்ஷத்தை ஏற்படுத்தும் ஆண்டாக அமைய வாழ்த்துகின்றேன்






சொண்ட் நிறுவுனர் செந்துராஜா 
அவர்களின் வாழ்த்துச்செய்தி-

எமது தமிழ் மக்களினது சந்தோஷம் நிலைக்கும் நிம்மதி நிறைந்த ஆண்டாக இன்றுகாலை உதிக்கின்ர சூரியனின் பிரகாசம்போல் மக்கள் அனைவரும் நட்பல நன்மைகள் பெற்று வாழ்வில் ஒளிபிரகாசிக்கட்டும் வாழ்த்துகின்றேன்


உங்கள் வாழ்த்துக்களையும் இந்த பகுதியில் தெரிவிக்க  
              
கீழுள்ள comment ல் TIPE செய்யுங்கள் அல்லது sms அனுப்புக 0777514279 அல்லது e-mailஅனுப்புங்கள்

haran139@gmail.com அல்லது panankadu.com@gmail.com