Sunday 19 December 2021

திருவெம்பாவை இன்று

பனங்காட்டு ஶ்ரீ பாசுபதேசுவர தேவஸ்தான இன்றைய நிகழ்வுகள் ...... 


haran

Wednesday 15 December 2021

மார்கழியில் திருவெம்பாவை ஆரம்பம் (11)

ஆர் நடராஜன்  0777 514279

மாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாகவும், அதன் தன்மையை உணர்வதற்குள், மிக வேகமானதாகவும், ஆழ்த்திவிடுவதாகவும் உள்ள படுசுழியான தன் தன்மையைக் காட்டிவிடுகிறது. அதுபோல மயக்கத்தில், செல்லும் திசை தெரியாது ஆழச் செல்லும் உயிர்களை உணர்வூட்டி, "கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே" என்ற பொன்னான வாசகத்தால் கைதூக்கி விடுவன திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும்.

Thursday 2 September 2021

ஊடகவியலாளர் பிரகாஷ் ஞானபிரகாசம், கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்



யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரகாஷ் ஞானபிரகாசம், கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார். இறக்கும் போது வயது 26

Sunday 29 August 2021

கொரோனா மரண எண்ணிக்கையில் சிறிதளவு வீழ்ச்சி

Riya கொரோனா மரண எண்ணிக்கையில் சிறிதளவு வீழ்ச்சி

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 192 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.



அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,775 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 426,169 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 357,598 ஆக அதிகரித்துள்ளது

Friday 27 August 2021

வீடுகளிலேயே துரித அன்டிஜன் பரிசோதனை


வீடுகளிலேயே துரித அன்டிஜன் பரிசோதனைகளை (Rapid Antigen Test) மேற்கொள்ளும் திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல நேற்று இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.




COVID தொற்றினால் உயிரிழப்போரில் 86 வீதமானோர் பல்வேறு நோய்களுக்குள்ளானவர்கள் எனவும், 12 வீதமானோர் ஒரு தடுப்பூசியை மாத்திரம் ஏற்றிக்கொண்டவர்கள் எனவும் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களில் 2.5 வீதமானவர்களே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த சுகாதார அமைச்சர், அவர்களும் ஏனைய நோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் என கூறியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாத நிறைவிற்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசியை ஏற்ற முடியும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்

இலங்கைக்கான கியூப தூதுவரை நேற்று சந்தித்த போதே சுகாதார அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் இரண்டு கொரோனா தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டதன் பின்னர், மூன்றாவது தடுப்பூசி தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்

haran

கொவிட் நோயாளர்களுக்கு

கொவிட் நோயாளர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் இன்றி, எந்தவித நோய் எதிர்ப்புச் சக்தி மருந்துகளையும் கொடுக்க வேண்டாமென மருந்தியல் பேராசிரியர் வைத்தியர் பிரியதர்ஷனி கலப்பத்தி தெரிவித்தார்.

Thursday 19 August 2021

தலைக்கு மேலால் ஓடுகிறது வெள்ளம்



குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு நாட்டை மூடி வைக்குமாறு அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

பணியிலிருந்து விலகிக் கொண்டார்.





அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் யு.எல்.எம்.சகீல் பொதுமகன் ஒருவரால் தாக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பின்மை காரணமாக இன்று(18) அவர் பணியிலிருந்து விலகிக் கொண்டார்.

Friday 18 June 2021

🤬😱மனம் திறந்தார் Dr. சுகுணன்

🤬😱மனம் திறந்தார் 
Dr. சுகுணன் 


🤫உங்கள் உயிர் யார் கையில்.../

🎯 பொலீசுக்கு  மாஸ்க் 😷😷😷
🥶🥶🥶🥶🥶
🥶கொரோனாக்கு மருந்து... 😭😭😭😭😭

😭😭😭யாராலும் காப்பாற்ற  முடியாது....
😇😇😇🥲🥳🤩🤯🤯🤯🤯உங்களை ஏன் ஏமாற்று கின்றீர்கள்...



Plz 👍subscribe 😃🎯


haran

Tuesday 15 June 2021

கல்வியுமில்லை கல்லூரிகளுமில்லை..... கொரோனாவின் பின் இருபது மாதங்களாக.....

haran

இன்றைய செய்திகள் 15 ஜூன் 2021

லீசிங் (LEASING) செலுத்தி வருபவர்களுக்கு நிவாரணங்கள் தேவை

haran


கொரோனா வைரஸ் நிலைமைகளால், வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொண்டவர்கள், லீசிங் (LEASING) செலுத்தி வருபவர்களுக்கு நிவாரணங்கள் தேவை என்றால், அதுதொடர்பில் அந்தந்த நிறுவனங்கள், வங்கிகளுக்கு எழுத்து மூலமாக கோரிக்கை ஒன்றை விடுத்து நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென மத்திய வங்கி

Monday 14 June 2021

மின் துண்டிப்பு

haran


கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.

Wednesday 2 June 2021

Friday 28 May 2021

Tuesday 11 May 2021

பயணக் கட்டுப்பாட்டை விதிக்க

haran



மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகளை நேற்று நள்ளிரவு முதல் இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

Sunday 2 May 2021

கோமாரிக்கிராமமே அச்சத்தில் மூழ்கியுள்ளது

வாணி.... 

உணவுக்காக அதிகாலையில் கூரையை பெயர்த்து யானை அட்டகாசம் செய்துள்ளது.இச்சம்பவம் நேற்று (02)ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3மணியளவில் இடம் பெற்றுள்ளது.

Friday 9 April 2021

குளிக்க சென்றவரை முதலை இழுத்து சென்றது




திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட  இத்திக்குளம் பகுதியில் குளிக்க சென்ற குடும்பஸ்தர் ஒருவரை முதலை

Tuesday 9 March 2021

பொது நூலக திறப்பு விழா.

haran

கோளாவில் மக்கள் அபிவிருத்தி மைய பொது நூலகம் மற்றும் அலுவலக திறப்பு விழா.

தலைமைத்துவம் தாங்கும் பெண்களை கௌரவிக்கும்

haran

பெண்களை தலைவர்களாக கொண்ட அதிகளவான சமுர்த்தி வங்கிகளும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களும் இணைந்து மகளிர் தின கொண்டாட்டங்களை இம்முறை சிறப்பாக கொண்டாடி வருகின்றது.


Thursday 25 February 2021

ஐ.நா உயர் ஸ்தானிகரின் முடிவுகள், பரிந்துரைகளை இலங்கை திட்டவட்டமாக நிராகரிப்பு!!

Riya
இன்று முன்வைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் அறிக்கையில் உள்ள முடிவுகளையும் பரிந்துரைகளையும் இலங்கை திட்டவட்டமாக நிராகரிப்பதாக வெளிநாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளாத பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்...

Riya
க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கு தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்காக ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை காரியாலம் மற்றும் பிராந்திய காரியாலயங்கள் நாளை (26) திறக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday 24 February 2021

புதிய 20 ரூபாய் நினைவு நாணயம் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

Riya

இலங்கை மத்திய வங்கியின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நினைவு நாணயம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன்வினால் 
நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அம்பாறை பிராந்தியத்தில் பொலிஸார் திடீர் சோதனை....

Riya

அம்பாறை பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை கொரோனா அனர்த்தங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட மாவட்ட விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

உழுந்து உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தல்....

Riya

உழுந்து இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், உழுந்து செய்கையாளர்கள் தமது உற்பத்திகளை உடன் சந்தைப்படுத்துமாறு, வவுனியா மாவட்டக் கமக்காரர் ஒழுங்கமைப்புகளின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. 


Tuesday 23 February 2021

வவுனியாவில் சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

சுகாதார ஊழியர்களை புறக்கணிக்காதே எமது உரிமைகளை எமக்கு வழங்கு என தெரிவித்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் ஊழியர் வாயிலின் முன்பாக இன்று (24) காலை 9.00 மணியளவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Riya

சுகாதார ஊழியர்களை புறக்கணிக்காதே எமது உரிமைகளை எமக்கு வழங்கு என தெரிவித்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு தொடர்பில் ஜனாதிபதியின் புதிய அறிவிப்பு

Riya

ஒரு லட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் சுகாதார சேவைகள் திணைக்களத்தில் உள்வாங்கப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆயுதங்களுடன் ஒருவர் கைது

Riya

பாதாள உலகக்குழு தலைவரான மிதிகம சிந்தக என்ற ´ஹரக்கடா´வின் பிரதான உதவியாளர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று (23) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையத்தின் கண்டுபிடிப்புக்களுக்கு பாதுகாப்பு செயலாளர் பாராட்டு

Riya



பாதுகாப்பு செயலாளரும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) பிடிபனையில் உள்ள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்குமான மத்திய நிலையத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டார்.

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்த உயர் மட்ட அதிகாரிகாரிகளை அதன் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரேணுகா ரோவேல் (ஓய்வு) வரவேற்றார்.

முன்பள்ளிக்கு சென்ற மாணவி விபத்தில் படுகாயம்

மட்டக்களப்பு நகரில் இன்று (24) காலை இடம்பெற்ற விபத்தில் முன்பள்ளிக்கு சென்ற மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு நகரில் உள்ள மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் முச்சக்கர வண்டி மீது தனியார் போக்குவரத்து பஸ் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வடமாகாணசபை முன்னாள் முதல்வர்க்கும் இந்திய உயர்ஸ்தானிகர்க்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

Riya


தமிழ்மக்கள் தேசியகூட்டணியின் தலைவரும் வடமாகாணசபை முன்னாள் முதல்வருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இந்திய உயர்ஸ்தானிர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போது இந்திய-இலங்கை உறவு குறித்து கலந்துரையாடப்பட்டது.

வடமாகாணம் உட்பட இலங்கையின் முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தி மீதான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்திய உயர்ஸ்தானிகர் வெளிப்படுத்தினார்.

கின் கங்கையில் குப்பை கூளங்களை அகற்றும் பணிகளில் இலங்கை கடற்படை வீரர்கள்

காலியில் உள்ள கின் கங்கையின்  நீர் ஓட்டத்தை தடைசெய்யும் வக்வெல்ல பாலத்தின் கீழ் தேங்கிய  குப்பை கூளங்களை அகற்றும் பணிகளில் இலங்கை கடற்படை வீரர்கள் அண்மையில் ஈடுபட்டனர்.

இதற்கமைய  பாலத்தின் கீழ் குப்பை கூளங்களால்  ஏற்பட்ட அடைப்பு கடற்படையின் சுழியோடிகள் மற்றும் மரைன் குழுவினரால்  இணைந்து  அகற்றப்பட்டது.

நீரோட்டத்தில் படிப்படியாக முறையற்ற வகையில் சேரும் குப்பைகள், முறிந்து விழுந்த மரங்கள், மூங்கில் புதர்கள் என்பன  பாலத்தின் கீழ் தேங்குவதனால் ஆற்று நீர் தடையின்றி ஓடுவதற்குத் தடை ஏற்படுத்துகிறது.

கிந்தோட்டையில் கடலுடன் சங்கமிக்கும்  கின் கங்கையின் இயல்பான நீரோட்டம் வக்வெல்ல மற்றும் தெமட்டகொட  பாலங்களின் கீழ் தேங்கும் குப்பைகூளங்கள் காரணமாக தடைபடுவதனால் இலங்கை கடற்படையினர் அவ்வப்போது அதனை அகற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி.....

Riya

இன்று (23) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனியார் துறையை விட போட்டி விகிதத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் வாங்குவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இதனை தெரிவித்துள்ளார்.

குளவிக்கொட்டுக்கு இலக்காகிய எட்டு பேர்

 Riya

தலவாகலை கிறேட்வெஸ்டன் கல்பா டிவிசனில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய எட்டு பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்தவர்கள் மீதே இன்று (23) காலை 10 மணியளவில் தேயிலை செடியினுள் இருந்த குளவிக்கூடு கலைந்து கொட்டியுள்ளது.

குளவி கொட்டுக்கு இலக்காகிய 6 பெண் தொழிலாளர்ளும் இரண்டு ஆண் தொழிலாளர்களும் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரண்டு ஆண்களும் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியதுடன் ஏனைய 6 பெண்களும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

#கொழும்பு பங்குச் சந்தை 30 நிமிடங்களுக்கு இடைநிறுத்தம்

Riya
கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை இன்று (23) மதியம் 1.28 தொடக்கம் 30 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

S&P SL20 சுட்டெண் 147 புள்ளிகள் அல்லது 5% சரிந்த காரணத்தால் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் அனைத்து பங்கு விலைச்சுட்டெண் 307 புள்ளிகளால் சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Friday 12 February 2021

1000 ரூபாய் வேதன அதிகரிப்பை ஏற்கோம் - சிறுதோட்ட உரிமையாளர்கள் அறிவிப்பு



பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நாளாந்த வேதன அதிகரிப்பை வழங்குவதற்கு, வேதன நிர்ணய சபை மேற்கொண்ட தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, சிறுதோட்ட உரிமையாளர்கள் சங்கமும், தனியர் தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கமும் அறிவித்துள்ளன.

தொற்றுக்குள்ளான மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு


கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளகல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு மாவட்ட ரீதியில் பரீட்சை நிலையங்களை அமைப்பதற்கு பரீட்சை திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது.

2020 ம் ஆண்டிற்கான இலங்கையின் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனங்களின் விருது வழங்கல் விழாவில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா 'லீடர்ஷிப் வித் டிஸ்டிங்க்ஷன்'



பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (10) நடைப்பெற்ற 2020 ம் ஆண்டிற்கான இலங்கையின் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனங்களின் விருது வழங்கல் விழாவில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா 'லீடர்ஷிப் வித் டிஸ்டிங்க்ஷன்' (மேம்பாட்டிற்கான தலைமைவம்) என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

Tuesday 9 February 2021

இந்தியாவில் உள்ள பள்ளி மாணவர்கள் தயாரித்த 100 மிகச் சிறிய செயற்கைக் கோள்கள்


 

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் தயாரித்த 100 மிகச் சிறிய செயற்கைக் கோள்கள் உலக சாதனை முயற்சியாக ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

 

ராமேஸ்வரத்தில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஸ்பேஸ்ஜோன் இந்தியா மற்றும் தனியார் நிறுவனம் ஆகியவை இணைந்து மாணவர்களுக்கு செயற்கைக் கோள்களை உருவாக்கும் பயிற்சியை கடந்த 6 மாதங்களாக அளித்து வந்தன.

Tuesday 2 February 2021

8,500 பயிற்சி பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

அரச சேவையில் மேலும் 8,500 பயிற்சி பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் மீள குடியமர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

யாழ்ப்பாணத்தில் உள்ளக இடம்பெயர்வுக்குள்ளாகி நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள காணியில்லாத மக்களை துரிதமாக மீள குடியமர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

விசேட போக்குவரத்து ஒழுங்கு

       73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் ஒத்திகை நடவடிக்கைகளினால் கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் இன்றும் (02) விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


கிளிநொச்சியில் நேற்று (01) ஆர்ப்பாட்டம்

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறு கோரி கிளிநொச்சியில் நேற்று (01) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ரஞ்சன் ராமநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

 நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

தமது நாடாளுமன்ற ஆசனம் இழக்கப்படுவதை தவிர்க்கும் வகையில், இடைக்காலத் தடையுத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவின் பிரதிவாதிகளாக, நாடாளுமன்ற செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

Monday 1 February 2021

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையந்த மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்த முக்கிய அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடையந்த மாணவர்களை வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் தேசிய பாடசாலைகளுக்கு இணைத்து கொள்ளும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த நடவடிக்கைகள் ஒரு மாத காலத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் போராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் இன்று (01) கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்

வட மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த காலங்களில் தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட போதும் இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கடந்த வருடம் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தில் ஏற்பட்ட சில தவறுகள் காரணமாக சுமார் 60 வரையான தொண்டராசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Wednesday 27 January 2021

இலங்கையின் முதல் சைகை மொழி அறிக்கையாகும்.

இலங்கையின் முதல் சைகை மொழி பத்திரிகையாளர் சுரங்கா உதாரி சமீபத்தில் காலியில் கடலோரப் பகுதி குறித்த அறிக்கையுடன் அறிமுகமானார். உதாரி மாசுபாட்டைக் கையாண்டார், இது ஒரு பிரச்சினையாக இருந்தது, இது இலங்கையின் முதல் சைகை மொழி அறிக்கையாகும். சுரங்கா உதாரி காது கேளாதவராக பிறந்தார், ஆனால் பத்திரிகையை நேசித்தார்.

Sunday 24 January 2021

கல்முனை மனித உரிமை பிராந்திய இணைப்பாளராக ஏ.சி. அப்துல் அஸீஸ்



 
அம்பாறை மாவட்டம் கல்முனையில் இயங்கி வரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஏ.சி. அப்துல் அஸீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய இடமாற்றம் பெற்று வந்த இவர் கல்முனை கிட்டங்கி பிரதான வீதியிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய நிலையத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளராக சுமார் 20 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றிய நிலையில் அங்கு அடிப்படை மனித உரிமை மீறல் சம்மந்தமாக பிரச்சினைகளை புலனாய்வு செய்து விசாரணை செய்து அதன் அடிப்படையில் தீர்வுகளை வழங்கியுள்ளதுடன் தற்போது கல்முனைக்கு இடமாற்றம் பெற்றுள்ளார்.

தற்போது கல்முனை பிராந்தியத்தில் அரச நிர்வாக நிறைவேற்று அதிகாரிகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் முறைப்பாடுகளை ஆணைக்குழு விசாரணை செய்து தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவும் பரிந்துரைகளை முன்வைக்கவும் 1996 ஆம் ஆண்டில் 21ஆம் இலக்க இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சட்டத்திற்கு அமைவாக அதிகாரம் வழங்கப்பட்டு மக்களின் மனித உரிமைகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்ற ஒரு அரச நிறுவனம் என்பதை கருத்திற் கொண்டு மக்கள் இத்தகைய முறைப்பாடுகளை செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு உரிமை மீறல்கள் தொடர்பில் முறையிட விரும்புபவர்கள் பிராந்திய காரியாலய தொலைபேசி இலக்கமான 0672229728 இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.

இதேவேளை முன்னதாக கல்முனை பிராந்திய இணைப்பாளராகப் பணியாற்றிய அப்துல் லத்தீப் இஸ்ஸதீன் தற்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டடக்களப்பு பிராந்திய இணைப்பாளராக இடமாற்றம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Saturday 23 January 2021

விடுமுறைக்கு வீடு சென்ற வாழைச்சேனை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் விபத்தில் பலி

மோட்டார் சைக்கிள் – டிப்பர் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று (23) மாலை மரண மடைந்துள்ளளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு


அண்டார்டிகாவில் சிலி விமானப்படை தளம் அமைந்துள்ள கடலோர பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அறிவிக்கப்பட்ட கொரோனா அபாய நிலையையும் கடந்த இலங்கை

நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையானது உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அபாய நிலையாக அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தானம் குறிப்பிட்டுள்ள 5 தசம் 5 வீதம் எனும் எண்ணிக்கையை நாடு கடந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.



எனவே நாடு அபாய கட்டத்தை அடைந்துள்ளதை உணர முடிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது அடையாளம் காணப்படும் தொற்றாளர்கள், மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என சுகாதார தரப்பு கூறுகின்றது என அவர் கூறியுள்ளார்.

எனினும் தற்போது பதிவாகும் கொரோனா தொற்றாளர்களுக்கும் குறித்த இரு கொத்தணிகளுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என அவர் கூறினார்.

அத்துடன் மேல் மாகாணத்தில் இருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த நாடு தவறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாடு மிக மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் 2000 ஐ கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

கிழக்கு மாகாணத்தில்  கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2134 ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரையான காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் 13 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது 

Friday 22 January 2021

தேர்தல் இடாப்பிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசாரணை

இடம்பெயர்ந்த 7,727 பேரின் பெயர்கள் தேர்தல் இடாப்பிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசாரணை

இம்முறை தமிழில் தேசிய கீதத்தை இசைத்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை


தமிழில் தேசிய கீதத்தை இம்முறையேனும் இசைத்து இன நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணி வலியுறுத்தியுள்ளது.

முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனத்தினால் 3 வாகனங்கள் சேதம் - இருவர் காயம்


முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனத்தினால் ஏற்பட்ட விபத்தில் வீதியில் சென்ற 3 வாகனங்கள் சேதமடைந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் கட்டையடி பகுதியில் வெள்ளிக்கிழமை(22) இரவு இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றது.


குறித்த விபத்தின் போது பிரதான வீதியால் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டி கார் என்பவற்றை குறுக்கு வீதி ஒன்றின் ஊடாக பயணம் செய்த முச்சக்கரவண்டி பிரதான வீதியினை குறுக்கறுக்கும் போது மோதி சேதப்படுத்தியது.

இவ்விபத்தில் குறித்த முச்சக்கரவண்டியின் சாரதி பிரதான வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்ற இளைஞனும் காயமடைந்துள்ளனர். 

Thursday 21 January 2021

வலப்பனை பகுதியில் நில அதிர்வு


நுவரெலியா  வலப்பனை பகுதியை அண்மித்த பிரதேசங்களில் இன்று அதிகாலை 1.8 ரிக்டர் அளவிலான நில அதிர்வு  ஏற்பட்டுள்ளது.

கோவிட் -19: அமெரிக்க தடுப்பூசி விநியோகத்திற்கு அமேசான் உதவுகிறது


புதிய ஜனாதிபதி ஜோ பிடனுக்கு எழுதிய கடிதத்தில், அமெரிக்காவில் கோவிட் -19 தடுப்பூசிகளை விநியோகிக்க அமேசான் முன்வந்துள்ளது.

நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டேவ் கிளார்க் எழுதிய கடிதத்தில், ஈ-காமர்ஸ் நிறுவனமான "இந்த முயற்சியில் உங்களுக்கு உதவ தயாராக உள்ளது" என்று கூறியுள்ளது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய ஆணைக்குழு நியமனம்

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய ஆணைக்குழுவொன்று  நியமிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதி எச் எம் எம் நவாஸ் தலைமையில் கடந்த 20 ஆம் திகதி முதல் செயற்படும் வகையில்ஜனாதிபதியினால்  இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.


நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களை


அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடத்திற்கமைவாக நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களை பாடசாலைகளில் பயிற்சி ஆசிரியர்களாகவும், ஏனைய திணைக்களங்களுக்கு பயிற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவும் இணைத்துக் கொள்வதற்கான நியமனக் கடிதங்கள் இன்று (21) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.

பிளாஸ்டிக் தடை


ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியிலான பொருட்களை தடை செய்யும் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் விழா

தேசிய பொங்கல் விழாவிற்கு இணைவாக அரச அலுவலங்களிலும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

Sunday 3 January 2021

67 வயதான ஆண் ,மரணமடைந்துள்ளார்.


ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த, 67 வயதான ஆண் ஒருவர், வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையில் இருந்து, தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவுக்கு (IDH) மாற்றப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.