Wednesday 30 September 2015

தமிழ்ப் பட்டதாரிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்...

மூன்றம்சக் கோரிக்கையை முன்வைத்து அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ்ப் பட்டதாரிகள் கிழக்கு மாகாணசபைக்கு முன்பாக நேற்று புதன்கிழமையிலிருந்து சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.



 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கவேண்டும், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கு வேலை வழங்கவேண்டும், அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும் ஆகிய கோரிக்கைகளே முன்வைத்தே இவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ்ப்; பட்டதாரிகள் அமைப்பின் தலைவர்.எம்.திலீபன் தெரிவிக்கையில், 'கடந்த 05 மாதங்களுக்கு முன்னர் இம்மாகாணசபைக்கு முன்பாக 02 தடவைகள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் இதன்போது, கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கு அவரின் செயலாளர்; ஏற்பாடு செய்திருந்தார். இந்நிலையில், கூடிய விரைவில் தீர்வு காண்பதாக முதலமைச்சரும் வாக்குறுதி அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, கவனயீர்ப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.

 இந்நிலையில், 05 மாதங்கள் கடந்துள்ளபோதிலும், இதுவரையில் எமக்கு எந்த நியமனங்களும் வழங்கப்படவில்லை. இனிமேலும், முதலமைச்சரை நம்புவதற்கு நாங்கள் தயாரில்லை. எனவே, இதில் மத்திய அரசாங்கம் தலையிடவேண்டும். எமக்கு உடனடித் தீர்வு கிடைக்கும்வரை இந்த  உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்;' என்றார்.

பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது...

14 மற்றும் 15 வயது மகள்கள் இருவரை  பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது 


அம்பாரை ஆலையடிவேம்பு பிரதேச பிரிவிலுள்ள புளியம்பத்தை கிராமத்தில் இரு சிறு பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 31 வயதுடைய தந்தை ஒருவரை பொதுமக்கள் நய்புடைப்பு செய்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் நேற்று (30) புதன்கிழமை இரவு  இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார்  தொரிவித்தனார் 


இதுபற்றி தொரியவருவதாவது மீள்குடியேற்ற கிராமமான புளியம்பத்தை கிராமத்திலுள்ள குறித்த 14 வயது 15 வயது பிள்ளைகளின்  சகோதரனுக்கு சுகயீனம் காரணமாக தாயார்  வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் இரு பெண் பிள்ளைகளும் தனிமையில் இருந்த நிலையில் தந்தையால் சம்பவதினமான புதன்கிழமை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அயலவார்களுக்கு தொரியவந்ததையடுத்து தந்தையாரை இரவு  கிராமத்து பொதுமக்கள் பிடித்து நய்புடைப்பு செய்த பின்னார் பொலிசாரிடம் ஓப்படைத்தனார் 


இதனையடுத்து பொலிசார் அவரை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனார் 
 
இதேவேளை குறித்த தந்தை பாதிக்கப்பட்ட ஒரு மகளை கடந்த 6 வருடங்களுக்க முன்னார்  பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள நிலையில் அவ் சிறுமியை சிறுவார்  இல்லம் ஒன்றில் அரசசார் பற்ற நிறுவனம் ஒன்றினால் சோர்க்கப்பட்டு அங்கு இருந்து வந்த நிலையில் மீண்டும் தாயாருடன் இருந்து வரும் நிலையிலேயே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின்  ஆரம்ப விசாரணையில் தொரியவந்துள்ளது
 
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட வரை இன்று  வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக்கப்படவுள்ளதாக அக்கரைப்பற்று  பொலிசார் தொரிவித்தனார்

சின்னமுகத்துவாரம் பகுதியில் விபத்து..




திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பட்டை சின்னமுகத்துவாரம் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியும் பார ஊர்தி ஒன்றும் இன்று புதன்கிழமை பிற்பகல் நேருக்க நோர்  மோதியதில்  விபத்து இடம் பெற்றது
இவ் விபத்தில் பஸ் வண்டியில்  பிரஜானம் செய்த 5பேர்    படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார     வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்  
 இது தொடர்பான மேலதிக விசாரனைகளை  திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்  

‘பிள்ளைகளை உயிர்போல் காப்போம்’

தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘பிள்ளைகளை உயிர்போல் காப்போம்’ என்ற தொனிப்பொருளிலான சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கெதிரான விழிப்புணர்வு ஒன்றுகூடல் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் கே.பிரபாகரன் தலைமையில் இன்று (30) காலை 10.00 மணிக்கு சாகாம வீதி, ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றது.






இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் கலந்து சிறப்பித்ததுடன், ஆரம்ப உரையை நிகழ்த்திய பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் குறித்த நிகழ்வு இடம்பெறுவதற்கான காரணம் குறித்துத் தெளிவுபடுத்தினார்.
அடுத்து இடம்பெற்ற பிரதம அதிதியின் உரையில், பெண் பிள்ளைகளின் பெற்றோர் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்தோடு செயற்படவேண்டுமெனக் குறிப்பிட்டதோடு இந்நிகழ்வில் வழங்கப்படும் துண்டுப்பிரசுரங்களை மாணவர்கள் வீட்டிலுள்ள தமது பெற்றோருக்கும் அயலவர்களுக்கும் கொடுத்து அவர்களையும் படிக்கச்செய்யவேண்டும் என தெரிவித்ததோடு, ஆசிரியர்கள் பெண்பிள்ளைகள் தொடர்பில் விசேட கவனமெடுத்துச் செயற்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அதனைத்தொடர்ந்து குறித்த விழிப்புணர்வு வேலைத்திட்டம் தொடர்பாக அச்சிடப்பட்ட விசேட துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம் இடம்பெற்றதுடன், ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வுகளில் ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகளிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகளும், பிரதேச இளைஞர் கழக உறுப்பினர்களும், ஆலையடிவேம்பு பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இளைஞர்களுக்கு சுற்றுலாத்துறை தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன்....

சுவாட் நியுஸ்....
சுற்றுலாத்துறை வளர்ச்சிப் போக்கினை கருத்தில் கொண்டு இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் WUSC அமைப்பின் நிதி உதவியோடு விடுதி ஊழியர் பயிற்சி நெறியானது எமது சுவாட் அமைப்பினால் 21.09.2015ம் திகதி பொத்துவில் அருகம்பை பிரதேசத்தில் சுவாட் அமைப்பின் ஸ்தாபகர் திரு.ச.செந்துராசா அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது

விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.



மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில்  செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.



செவ்வாய்க்கிழமை மாலை 6.30மணியளவில் மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் புதுக்குடியிருப்பு வளைவு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இதில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். காயமடைந்தவர்களில் மேலும் ஒருவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வேகமாகச்சென்ற மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டியில் மோதியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Tuesday 29 September 2015

இலஞ்சம் பெற்ற இருவர் கைது

அம்பாறை மாவட்டத்திலுள்ள கமநல சேவை மத்திய நிலையமொன்றில் கடமையாற்றிவந்த முகாமைத்துவ உதவியாளர் ஒருவரும் விவசாய அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவரும் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் திங்கட்கிழமை (28) மாலை  இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விவசாயி ஒருவரிடமிருந்து 8,000 ரூபாவை இலஞ்சமாக பெறும்போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் கூறினர்

குடி நீர் கிடைக்குமா ...?

   சாந்தன்...... 
குடி நீர் என்பது இறைவன் தந்த வரம் அதிலும் பொத்துவில் 
குண்டு மடு இன்ஸ்பெக்டர் ஏத்தம் ஹிதயா புரம் இந்த மக்களுக்கு நிலத்தடி நீர் 

கிடைப்பதே அரிது நாலு வ௫டங்களுக்கு முன் இம் மக்களுக்கு அரசாங்கத்தால் பாரிய 

குடி நீர் வசதி ஒன்௫ செய்து கொடுக்கப்பட்டது மக்களும் தங்களுடைய பல நாள் கணவும்

 உண்மையானது என்று சந்தோசத்தில் இ௫ந்தனர் ஆனால் அது நிலைக்கவில்லை உரிய 

நேரத்தில் தேவையான நீர் வ௫வதில்லை சில நேரங்களில் இரண்டு நாட்களுக்குப் 

பிறகும் வ௫வதில்லை இப்பேது இலவு காத்த கிளிபோல் காத்தி௫க்கின்றனர் 

குடிப்பதற்கும் நிர் இல்லாமல் இது உரியவர்களிடம் சென்றடைய வேண்டும் 

சிறுவர்களும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப் படுகின்றனர்


சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து தீர்வினைப் பெற்றுத்தருமாறும் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர் 

Monday 28 September 2015

 திருக்கோவில் யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு..

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீவள்ளிபுரம் கிராமத்தைச் சேர்ந்த இராசையா ஜீவன்குமார் (வயது 22) என்ற இளம் குடும்பஸ்தர், இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி மரணமடைந்துள்ளார்.   இவரும் மற்றுமொருவரும் விறகு வெட்டுவதற்காக காட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது, அங்கு நின்ற காட்டு யானை மேற்படி குடும்பஸ்தரை தாக்கியுள்ளது. இந்நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் இவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். இவருடன் சென்ற மற்றைய நபர் பாதுகாப்பாக தப்பிவந்துள்ளார்.   இந்தச் சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Sunday 27 September 2015

யானையின் தாக்குதலுக்குள்ளாகி வீடு சேதம்

அம்மாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசசெயலக பிரிவு சாந்திபுரம் கிராமத்தில் இரவு(26) உட்புகுந்த காட்டு
யானையின் தாக்குதலுக்குள்ளாகி வீடு சேதம்மடைந்துள்ளது

தொடர்சியாக இப் பகுதி காட்டு யானைகளின்  தாக்குதலுக்குள்ளாகி வருவதினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து மின்சார  யானை தடுப்பு  வேலி ஒன்றினை அமைத்துத்தருமாறும் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர் 

மஹாலய பஹ்ஷம் இன்று

இந்துக்களின் வாழ்வியலுடன் தொடர்புடைய தென்புலத்தார் என்று சொல்லப்படுகின்ற பிதுர்களை நினைத்து அவர்களுக்காக வருடா வருடம் புரட்டாதிமாத தேய்பிறை பிரதமையில் ஆரம்பமாகி அமாவாசை வரையான 14நாட்களும் எமது சந்நிதியில் மரணித்து மூண்று தலைமுறையினை நினைத்து கொடுக்கப்படுகின்ற தான தர்மங்கள் எமது வாழ்வில் மிகப் பெரிதான நல் வாழ்விற்கு வழி வகுக்கும்

மகா-ளயம் என்பது பிதிர்கள் பூமிக்கு வரும் நாள் என்று பொருள் படும் பிதிர்களான எமது தாய் தந்தையர் உட்பட எமது மூதாதையர்களை நினைத்து மாதம் தோறும் அமாவாசையில் தர்ப்பனம் தானம் செய்ய முடியாதவர்கள் இந்த மஹாலய பஹ்ஷ காலத்தில் தானம்களை செய்வதால் பன்னிரண்டு மாதம்களிலும் செய்த பலன் உண்டாகும் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றது

பிதுர்களை நாம் சாந்தப்படுத்தும் போது இப் பிறப்பின் நாம் செய்யூம் சகல காரிங்களும் விக்கினம்கள் இன்றி நன்றாக நடப்பதுடன் எமது சந்ததி வாழையடி வாழையாக இப் புவியில் வாழ்வாதற்கு வழி கோலும் என்று சொல்லப் பட்டிருக்கின்றது 

காணாமல் போனவர் எலும்புக் கூடாக மீட்ப்பு

அம்பாறை, மல்வத்தை, மல்லிகைத்தீவு காட்டுப் பகுதியிலிருந்து  சனிக்கிழமை காலை எலும்பு கூடொன்று மீட்கப்பட்டுள்ளது. 

கடந்த ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதி காணாமல்போனதாகக் கூறப்படும் மகாலிங்கம் வேலாயுதம் (வயது 50)என்பவரின் எலும்புக்கூடே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பபெற்ற தகவலொன்றினையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த எலும்பு கூடை மீட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் வீட்டை விட்டுச் சென்று காணாமல் போயிருந்த மல்வத்தை 1 தம்பிநாயகபுரத்தைச் சேர்ந்த தனது கணவரே என எலும்புக் கூட்டில் அணிந்திருந்த ஆடைகளை வைத்து அவரது மனைவி அடையாளம் காட்டினார். 
பரிசோதனைக்காக எலும்புக் கூடு அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 

Tuesday 22 September 2015

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தினை முன்னிட்டு

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தினை முன்னிட்டு இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஜெகதீசன் தலைமையில் இரானுவத்தினர் சிவில் அமைப்புக்கள் செயலக உத்தியோகத்தர்கள் பாடசாலை மாணவர்கள்  சகிதம் அக்கரைப்பற்று முதல் தம்பட்டை வரையான 05 கிலோமீட்டர் தூர  கடற்கரை பகுதிகளினை இன்று காலை  சுத்தம் செய்கின்றனர்







Monday 21 September 2015

உலக சமாதான தினம் இன்று கொண்டாடப்படுகின்றது

சமாதானத்திற்காக கைகோர்த்து அனைவரினதும் சுயகெளரவத்தினையும் காப்போம் எனும் தொனிப் பொருளில் மத்திய கல்வி அமைச்சு இன்று பாடசாலைகளில் இதனை அனுஷ்டித்து வருகின்றது



இதன் ஒரு அங்கமாக அம்பாறை  அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ன மிஷன் வித்தியாலய அதிபர் டேவிட் அமிர்தலிங்கம்  பாடசாலை மாணவர்கள் மற்றும்  ஆசிரியர்களுக்கு இது தொடர்பாக உரையாற்றுவதை கானலாம் 

Friday 18 September 2015

ஆலைடிவேம்பு சிந்தாமனி ஆலய சந்தியில் தற்போது இடம் பேற்ற விபத்து...

ஆலைடிவேம்பு சிந்தாமனி ஆலய சந்தியில் தற்போது இடம் பேற்ற விபத்து





கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய தீர்த்தோட்சவம்...

கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய தீர்த்தோட்சவம்...

மரணதண்டனை அடுத்த வருடம் முதல் அறிமுகப்படுத்தப்படும் ?


நாடாளுமன்றம் இணங்கினால் மரணதண்டனை அடுத்த வருடம் முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காலியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

 குற்றவியல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான யோசனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார். தேசிய போதைப்பொருள் தடுப்பு செயலணி, காலி நகர சபை மண்டபத்தில் நடத்திய தேசிய வேலைத்திட்டத்தில் இணைந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

கொடதெனியாவில் 5 வயது சிறுமி படுகொலைச் செய்யப்பட்டதன் பின்னர், மரணதண்டனையை நிறைவேற்றுமாறு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு முன்னரும் இவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.  அபிவிருத்தி அடைந்த பல நாடுகளில் மரணதண்டனை நடைமுறையில் இருக்கின்றது என்றும் ஜனாதிபதி கூறினார்.

Thursday 17 September 2015

இல்லாதவர்' எனும் அத்தாட்சிப்பத்திரம்....

காணாமல் போயுள்ளோக்கான மரண அத்தாட்சிப்பத்திரத்தை உறவினர்கள் ஏற்க மறுக்கும் பட்சத்தில் 'இல்லாதவர்' எனும் அத்தாட்சிப பத்திரத்தை வழங்கும் அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகரித்துள்ளது.
மரணம் அடைந்தவர்களை பதியும் அதிகாரம் 1951 ஆண்டின் 17ஆம் இலக்க சட்ட ஒழுங்கின்படி பதிவாளர் நாயகம் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால், இயற்கை மரணமல்லாது வேறு காரணங்கள், பயங்கரவாத செயல்கள், கலவரம், இயற்கை அனர்த்தங்களால் மரணம் ஏற்பட்டு உடல்கள் கிடைக்காத போது இந்த திணைக்களத்துக்கு மரணத்தை பதிவு செய்யும் அதிகாரம் இல்லை. 

இதனால் இந்த பிரச்சினைக்குத் தீர்வாக 2010ஆண்டு 19 இலக்க சட்டம் (தற்காலிக ஒழுங்கு) கொண்டுவரப்பட்டது

விபத்தில் காயம்

அம்பாறை, திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில்  வியாழக்கிழமை நண்பகல் வானும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் கிராம அலுவலர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்; தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த கிராம அலுவலர் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 

Tuesday 15 September 2015

இலண்டன் பிரஜை சடலமாக மிடப்பு


சாந்தன் ...
பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகம்பே பாலத்தினுள் ஆணின் சடலமொன்று  செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது. 

மீட்கப்பட்ட  சடலம் ஹிக்கடுவையைச் சேர்ந்த இலண்டன் பிரஜையான விசாந்த சுப்பரமணியம் (வயது 24) என அடயாளம் காணப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த நபர் திங்கட்கிழமை பொத்துவில் அறுகம்பையிலுள்ள  சுற்றுலா விடுதியொன்றின் இரண்டாம் இலக்க அறையில் இவர் தனியாகவே தங்கியிருந்துள்ளார். 

தங்கியிருந்த அறையிலிருந்து கைக் கடிகாரம் ஒன்றும் இலங்கைப் பணம்  வங்கி விசா கிரடிற் கார்ட்டும் மீட்கப்பட்டுள்ளதாகவும்  கண்டெடுக்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மின்னேற்றல்..

வாகனங்களை மீள் மின்னேற்றம் செய்வதற்கு அவசியமான உபகரணங்கள் மற்றும் மின்னேற்றல் கட்டமைப்பை அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் ஸ்தாபிக்கத் திட்டமிட்டுள்ளதாக கனியவள மற்றும் எரிவாயுத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
மின் பாவனையை மாத்திரம் கொண்ட வாகனங்களுக்கு தற்போது அதிக கேள்வி நிலவுவதால் இந்த திட்டம் அமுல்படுத்தவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 
மின்னை மீள் நிரப்பும் நிலையங்களின் உபகரண கட்டமைப்பு நாடளாவிய ரீதியாக இல்லாமையினால் நுகர்வோர் நெருக்கடியை எதிர்நோக்குவதாக அமைச்சர் தெரிவித்தார். 
இதேவேளை, எதிர்காலத்தில் மோட்டார்சைக்கிளின் பாவனையை குறைத்து, துவிச்சக்கரவண்டியின் பாவனையை அதிகரிக்குமாறு அமைச்சர் சந்திம வீரக்கொடி பரிந்துரை செய்துள்ளார்.

Monday 14 September 2015

உணவுப்பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்

.நௌஷாத்...

   SLFP GIZ அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற அமைப்புக்களின் இணையம்ஆகியன இணைந்து எமது கரையோர மாவட்டத்திலுள்ள சிறு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும்அவர்களுடைய உணவு உற்பத்திச் செயன்முறையை முறையாகவும்பாதுகாப்பாகவும் நடைமுறைப்படுத்தும் வகையிலும் உணவுப்பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் என்ற தொணிப் பொருளில் பயிற்சிச் செயலமர்வு செப்டம்பர் 12,13ம் திகதிகளில் சுவாட் கேட்போர் கூட மண்டபத்தில் இணையத்தின் உதவித் தவிசாளர் திரு : V. பரமசிங்கம் அவர்களின் தலைமையிலும், SLFPA நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் : திருநிரஞ்சன் பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டலுடன் நடாத்தியது..





மேலும், இந்நிகழ்வில் SLFPA நிறுவனத்தின் வளவாளர்களான திரு: ரீ.கிருஸ்ணராஜ் ( வவுனியா) மற்றும் .ஜே.எம். இம்றாஸ் ஆகியோரால் உணவுப்பாதுகாப்பு முறைகள் , சிறந்த விவசாய நடைமுறைகள், உணவு நுண்ணுயிரியல் மற்றும் அபாயகரமாகும் உணவுகள் அத்துடன் பொதி செய்தல் மற்றும் உணவு தொடர்பான சட்டங்கள்,தனிப்பட்ட துப்புரவும் கிருமி நீக்கலும், அனர்த்தப் பகுப்பாய்வு முக்கிய கட்டுப்பாட்டுப்புள்ளி ஆகிய தலைப்புக்களில் பங்குபற்றுனர்களுக்கு குழு வேலைப்பாடுகள் மற்றும் விளக்கப்படங்கள் மூலம் விரிவுரைகள் வழங்கப்பட்டது. இதன்போது ஆலையடிவேம்பு பிரதேச பொதுச்சுகாதாரப்பரிசோதகர்கள் உட்பட இணையத்தின் அங்கத்துவ அமைப்புக்களின் பிரதிநிதிகளும், சிறு உற்பத்தியாளர்களும் கலந்து கொண்டு தங்களுடைய பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் இந்நிகழ்வில் பங்குபற்றிய அனைவருக்கும் SLFPA , GIZ அனுசரணையுடனான பெறுமதியான சான்றிதழும் வழங்கப்பட்டது.

Sunday 13 September 2015

தூய ஆரோக்கிய மாதா தேவாலய உட்சவத்தின் நிகழ்வில்

அக்கரைப்பற்று தூய ஆரோக்கிய மாதா தேவாலய வருடாந்த உட்சவத்தின் இறுதினாள் இன்று (13) நிகழ்வில் மட்டு மறை மாவட்ட ஆயர் அதி வன ஜோசப் பொன்னையா ஆண்டகையினால் திருப்பலிப் பூசை ஒப்புக் கொடுக்கப்படுவதையும் கலந்து கொண்டோரில் ஒருபகுதியினரையும் கானலாம்



கோமாரி திருச்சிரளைவாய் ஸ்ரீ முருகன் ஆலய சங்காபிஷேகத்தில்

பொத்துவில் கோமாரி திருச்சிரளைவாய் ஸ்ரீ முருகன் ஆலய கும்பாபிஷேக நிகழ்வினை தொடர்ந்து  பால்காவடியுடன் சங்காபிஷேகத்தில் நிறை கலசம் ஆலய குருவினால்  எடுத்துவரப்படுவதையும் கலந்து கொண்ட பத்தர்களில் ஒருபகுதியினரையும் காணலாம்