Saturday 22 September 2018

41 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு




அம்பாறை, அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையின் உள்ளக வீதி அபிவிருத்திக்காக 41 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழி அமைச்சின்  முயற்சியின் பயனாகவே இந்நிதி பாடசாலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை நிர்வாகமும் பாடசாலை அபிவிருத்தி குழுவினரும் இணைந்து அமைச்சின் இணைப்பாளரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே இத்திட்டத்திற்கான நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன்மூலம், மழைக் காலங்களில் மாணவர்கள் எதிர்கொண்டுவந்த உள்ளக சீரற்ற பாதைப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மழை, வெள்ள அபாய காலங்களில் மாணவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைக்கான தீர்வுக்காணும் விடயம் தொடர்பில், பாடசாலை நிர்வாகமும் பாடசாலை அபிவிருத்தி குழுவினரும் இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் தற்போதே இதற்கான உரிய தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
haran

Thursday 20 September 2018

ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை)பழைய மாணவர் சங்க பொது கூட்டம்

 

அம்பாறை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண கல்லூரி (தேசிய பாடசாலை)யின்  பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் முகமாக விசேட அங்குரார்ப்பண பொது கூட்டம்    அதிபர்   திருமதி  க.சோமபாலா   தலைமையில்  இடம் பெறவுள்ளது.

Thursday 13 September 2018

(GCE O/L) பரீட்சைகளின் மீள்திருத்தப்பட்ட பெறுபேறுகள் இணையத்தில்

haran

கடந்த 2017 இல் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தர (GCE O/L) பரீட்சைகளின் மீள்திருத்தப்பட்ட பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மருத்துவருக்கான மிகச் சிறந்த விருது

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி உலகெங்கிலும் உலக இயன் மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது. இவ் வருடத்துக்கான Chartered Society of Physiotherapist -Sri Lanka  அமைப்பின் உலக இயன் மருத்துவ தினத்தை கொண்டாடும் நிகழ்வு கொழும்பில்  அமைப்பின் தலைமைச் செயலகத்தில்  தலைவர் இயன் மருத்துவர் ஜாலிய உடுவெல்ல தலைமையில் இடம் பெற்ற து

Monday 3 September 2018

புதிய அம்பியூலன்ஸ் வாகனங்கள் ,மக்கள் நன்றி தெரிவிப்பு


வைத்தியசாலைகளுக்கு புதிய அம்பியூலன்ஸ் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் தொடராக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை [02.09.2018] அம்பியூலன்ஸ் வாகனம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

Saturday 1 September 2018



இலங்கையின் தென்மேற்கு கடற் பிரதேசத்தில் 5.2 ரிச்டர் அளவிலான நில நடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நில நடுக்கத்தினால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் வளிமண்டளவியல் திணைக்களத்தின் கடமை நேர வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

"நாட்டில் தென்மேற்கு கடற் பிரதேசத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை . வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மாலை வேலைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். ஏனைய பிரதேசங்களில் மழையற்ற சீரற்ற காலநிலை நிலவும்.

அம்பாந்தோட்டை பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 40 தொடக்கம் 50 கிலோ மீற்றர் வரை காணப்படும். சப்ரகமுவ, காலி மற்றும் மாத்தறை உள்ளிட்ட பிரதேசங்களில் இதே நிலைமை காணப்படும்.

சில சந்தர்ப்பங்களில் கிழக்கு கடல் பிரதேசங்களில் இடியுடன் கூடிய பெய்யும். ஏனைய கடற் பிரதேசங்களில் மழையற்ற சீரான வானிலை நிலவும். எனினும் அம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 45 தொடக்கம் 50 கிலோ மீற்றர் வரையில் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் குறித்த பிரதேச கடற்பகுதிகளில் கொந்தழிப்புடன் காணப்படும்" என்றார்.
இலங்கையின் தென்மேற்கு கடற் பிரதேசத்தில் நிலநடுக்கம் ! Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka
haran