Monday 28 July 2014

புதிய தூய செபஸ்தியார் ஆலயத்திற்கான அடிக்கல்

ஆலையடிவேம்பு தீவுக்காலை கிராமத்தில் புதிய தூய செபஸ்தியார் ஆலயத்திற்கான அடிக்கல்லினை வெள்ளிக்கிழமை(25) மட்டு அம்பாறை மறை மாவட்ட அதிவந்தனைக்ககுரிய ஆயர் ஜோசப் பொண்னையா ஆண்டகை நடுவதனையும் ஆலய பங்குத்தந்தை அண்டனிஜெயராஜ் உடன் கலந்து கொண்ட கிராம மக்களையும் படத்தில் காணலாம்




Saturday 26 July 2014

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று (26) சனிக்கிழமை


நல்லூர் கந்தசுவாமி கோவில் மன்னார் திருக்கேதீஷ்வரம் திருகோணமலை
கோனேஸ்வரம் ஆகிய வரலாற்றுடன் தொடர்புடைய ஆலயம்களாக இருப்பது போல் மட்டக்களப்பு தமிழர் வரலாற்றில் முதன்மையாக கருதப்படுவது திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயமாகும்

Displaying SN852924.jpg
Displaying SN852965.jpg
Displaying SN853046.jpg

கிழக்கின் வடக்கே வெருகல் தொடக்கம் தெற்கே கூமுனை வரையுள்ள திருப்படை கோவில்களில் முதன்மையானதும் பண்டைய அரசர்களின் மதிப்பும் மானியமும் சீர்வரிசைகளும் பெற்றுவந்த இவ் ஆலயம் இலங்கையினை ஆட்சிசெய்த சிங்கள மன்னர்களாலும் சோழ பாண்டியராலும் கண்டி நாயக்க மன்னராலும் திருப்பனிகள் இடம் பெற்று வந்துள்ளது.


இத்தனை சிறப்புக்கள் பொருந்திய திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தினை முதல் முதலில் கற்கோவிலாக நிர்மாணித்த மன்னன் இலங்கை முளுவதனையும் ஆட்சி செய்த மனு மன்னன் என்றா எல்லாளன் ஆவான் இதனை கல் வெட்டுக்கள் செப்பேடுகள் தொல்லியல் ஆய்விச்சான்றுகள் உறிதி செய்கின்றன.


இவ்வாறு மகிமை பெற்ற இவ்வாலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று(26) சனிக்கிழமை காலை சமுத்திரத்தீர்தோற்சவமாக இடம் பெறுகின்றது



இவ் உலக வாழ்விற்கு உருத்தந்த தந்தைக்கு தர்ப்பனம் செய்வதற்கு மிகச் சிறப்பான நாளாக இந்து ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ளது .பிதிர்கடன் செய்யவும் நீராடவும் கங்கைகளுக்கு சமமாக சமுத்திரம்களும் பொருந்தும் எனவும் சமுத்திர நீராடலே சிறந்தது எனவும் வேதநூல்கள் கூறுகின்றன.

Monday 21 July 2014

கிழக்கு மாகாணசபையின் புதிய ஆளுந்தரப்பு உறுப்பினராக அண்மையில் பதவியேற்ற கே.புஸ்பகுமார் அவர்களை வரவேற்று, ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி தொடர்பாகக் கலந்துரையாடும் நிகழ்வு

கிழக்கு மாகாணசபையின் புதிய ஆளுந்தரப்பு உறுப்பினராக அண்மையில் பதவியேற்ற இனியபாரதி எனப்படும் கே.புஸ்பகுமார் அவர்களை வரவேற்று, ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி தொடர்பாகக் கலந்துரையாடும் நிகழ்வு இன்று (18) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

Displaying 20140718_110147.jpg
Displaying 20140718_110640.jpg
Displaying 20140718_113828.jpg
Displaying 20140718_110820.jpg
பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் பங்குபற்றியதுடன், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக மாகாணசபை உறுப்பினர் கே.புஸ்பகுமார் சம்பிரதாய முறைப்படி மாலையிட்டு வரவேற்கப்பட்டதுடன், பிரதேச அபிவிருத்தி தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போது பிரதேச செயலாளர், வாழ்வின் எழுச்சி (திவிநெகும) அபிவிருத்தித் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களால் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய உட்கட்டுமான அபிவிருத்தி வேலைகள் தொடர்பான தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இதன்போது உரையாற்றிய மாகாணசபை உறுப்பினர் கே.புஸ்பகுமார், ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி தொடர்பில் தாம் சேவையாற்றத் தயாராவுள்ளதாகவும், அதற்கு மக்களின் ஒத்துழைப்பைப் பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டதோடு வறுமைக்கோட்டின்கீழ் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதே தற்போது தனக்குள்ள பெறும் சவாலாகும் எனவும் குறிப்பிட்ட அவர், இப்பிரதேசத்தில் குடிசைகளில் வாழுகின்ற வருமானம் குறைந்த மக்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Wednesday 9 July 2014

கல்வி நிருவாக சேவைக்கு பதவி உயர்வு பெற்றதனை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வில் ...

க்கரைப்பற்று இராமகிருஷ்னா மிஷன் மகாவித்தியாலய அதிபர் திரு.டேவிட் அமிர்தலிங்கம் தலமையில் 








ஆலையடிவேம்பு கோட்டக்கல்வி அதிகாரியும் திருக்கோவில் வலயக்கல்விஅலுவலக பிரதிக்கல்விப்பணிப்பாளருமான திரு, வி குனாளன் அவர்கள் கல்வி நிருவாக சேவைக்கு பதவி உயர்வு பெற்றதனை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வில் அதிதிகள் மாலை அணிவித்து
அழைத்துவரப்படுவதனையும் பொன்னாடை போர்த்தி கெளரவிப்பதனையும் கலந்து கொண்ட பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களையும் படத்தில் காணலாம் 


Friday 4 July 2014

அக்கரைப்பற்றில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹைஏஸ் ரக வாகனமொன்று வவுனியா நொச்சிமோட்டைப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து மரமொன்றுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஹைஏஸ் ரக வாகனம் இன்றுமுற்பகல் 11.30மணியளவில் வவுனியா ஓமந்தையை அண்மித்துள்ள நொச்சிமோட்டைப் பகுதியில் வளைவொன்றில் திரும்பிய போது வேகக் கட்டுப்பாட்டினை இழந்து மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், அதில் பயணித்த பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். இந்த விபத்தின்போது படுகாயமடைந்து மூவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


???????????????????????????????
???????????????????????????????
???????????????????????????????
???????????????????????????????
???????????????????????????????
???????????????????????????????

Thursday 3 July 2014

உகந்தை முருகன் ஆலய கும்பாபிஷேகம் 04.07.2014

என்.ஹரன்

பானமைப் பற்று உகந்தை மலை முருகன் ஆலய மகா கும்பாபிசேகம் ஆனி உத்தரமான  ஜுலை மாதம் 04ம்திகதி வெள்ளிக்கிழமை (04.07.2014) கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத் தலைவரும் கும்பாபிஷேக குருவுமான சிவஸ்ரீ..கு.சீதாராம் தலமையிலான குருமார்களால் இடம் பெற முருகனின் அருள் பாலித்திருப்பதாக ஆலய செயலாளர் கு.சிறி.பஞ்சாச்சரம் தெரிவித்தார்.

இவ் ஆலயமானது 2001ல் ஆலய திருப்பனிச்சபைத்தலைவர் கே.என்.தர்மலிங்கம் வண்னக்கர் முத்துபண்டா ஆகியோர் தலமையிலான நிர்வாக சபையினரால் குட முளுக்கு செய்யப்பட்டு 2013 நந்தன வருடம் 25ம் நாள் அதாவது - 07.03.2013 பாலஸ்த்தாபனம் செய்யப்பட்டது





கதிர்காமம் பாதயாத்திரை அடியார்களுக்கு உகந்தையில் மலேரியா இரத்தப் பரிசோதனை

என்.ஹரன்

வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வனப்பகுதியூடாக செல்லும் அடியார்களுக்கு மலேரியா இரத்தப் பரிசோதனை உகந்தைதிருத்தல பகுதிகளில் தற்போது இடம் பெற்று வருகின்றது .

இலங்கை மலேரியா தடை இயக்கத்தின் (டெடாபொத்துவில் பிரதேச காரியாலயத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த குருதிப்பருசோதனை நிகழ்வானது கடந்த 20ம்திகதி வனவெளிப்பாதை திறக்கப்பட்டது முதல் பொத்துவில் பொறுப்பதிகாரி எல்.அருள்னேசன் தலமையிலான சுகாதார பணியாளர்களால் தற்போது மேற்கொள்ளப்படுகின்றது .

இலங்கையில் இருந்து மலேரியா நோய்த்தொற்றினை முற்றாக ஒளிக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக பாதயாத்திரை அடியார்களுக்கு இக் குருதிப்பருசோதனையானது இடம் பெறுவதாகவும் மலேரியா நோய்த்தொற்றினை இனம்கானுவதற்கும்கட்டுப்படுத்துவதற்குமான குருதிப்பருசோதனை நிகழ்வில் இதுவரை சுமார் ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு மேற்கோள்ளப்பட்டு உடனுக்குடன் அவர்களது குருதிச்சோதனை முடிவுகளும் வழங்கப்படுவதாகவும் பொத்துவில் பொறுப்பதிகாரி எல்.அருள்னேசன் தெரிவித்தார்.







Tuesday 1 July 2014

பிரதேச அபிவிருத்தி வங்கியின் கல்முனை கிளையின் 21 வது ஆண்டு நிறைவு நிகழ்வுகள்

பிரதேச அபிவிருத்தி வங்கியின் கல்முனை கிளையின் 21 வது ஆண்டு நிறைவினை
முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் வங்கி கிளையில்  முகாமையாளர் என்.எம்.ஸியாத்
தலைமையில் சிறப்பான முறையில் இடம்பெற்றன.


இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் வரவேற்கப்பட்டு மதகுருமாரின் ஆசிர்வாதம்
இடம்பெறுவதனையும், அன்றையதினம் விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்ததான
நிகழ்வில் வங்கி ஊழியர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு இரத்ததானம்
செய்தமையினையும், நிகழ்வில் கலந்துகொண்ட வாடிக்கையாளர்களில் ஒரு
பகுதியினரையும், இவ்வங்கிக்கிளை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதன்
வாடிக்கையாளராக இருந்துவரும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனால் அதன்
முகாமையாளர் என்.எம்.ஸியாத்திடம் விசேட நினைவுச்சின்னம்
வழங்கிவைக்கப்பட்டமையும்  படங்களில் காணலாம்.

Displaying 20140625_094529.jpg Displaying SAM_2133.JPG

Displaying SAM_2052.JPG  Displaying SAM_2132.JPG