Saturday 27 December 2014

பிரதேச கலை இலக்கிய விழா 2014


கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் தினைக்களமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இனைந்து நடாத்தும் பிரதேச கலை இலக்கிய விழா இன்று(27) சனிக்கிழமை காலை 09.00மணிக்கு கலாச்சார மண்டபத்தில் பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன் தலைமையில் இடம் பெறுகி்ன்றது








பிரதேச கலை இலக்கிய விழாவில் பல்துறை சார்ந்தோர்களான கா.தேவசிகாமணி-(முறிவுவைத்தியம்) சி.குழந்தைவடிவேல்-(ஆன்மீகம); ப.தங்கவேல்-(பூசகர்;) இ.நடராஜன்-(ஊடகம்) வ.அமராவதி-(சமூகசேவை) ஆகியோர்கள் பிரதேச செயலாளர் வே.ஜெகதீசனால் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளதை  காணலாம் 

Friday 26 December 2014

சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கான 10 ஆம் ஆண்டு நினைவஞ்சலி..

news by-- .வரதராஜ்

அம்பாறை மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வானது தம்பிலுவில் பெரிய

முகத்துவாரத்தில் அமைந்துள்ள சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் தூபியின் முன்னால் 2014.12.26


வெள்ளிக்கிழமை காலை 9.05 மணியளவில் இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பின் பதிவாளரும்

ஆசிரியருமான எஸ்.வரதராஜ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பின்

ஆலோசகரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான கலாநிதி எஸ்.குணபாலன் அவர்களும்

அக்கரைப்பற்று, தம்பட்டை பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் என 50 இற்கும் மேற்பட்டோர்

இந் நிகழ்வில் கலந்து கொண்டணர். இப் பகுதியில் பெய்து வருகின்ற அடைமழை மத்தியிலும் சுனாமியால் உயிர்

நீத்தவர்களை நினைவு கூறும் வகையில் பூக்கள் மற்றும் ப+மாலை அணிவித்து தூபிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டமை

சிறப்பம்சமாகும்.

Wednesday 24 December 2014

தொடர்சியாக பெய்துவரும் அடைமழையின் தாக்கத்தினால் அம்பாரை மாவட்டத்தின்


 திருக்கோவில் பிரதேசத்தில்---
 சின்னத்தோட்டம், பாலக்குடா, காயத்திரிகிராமம், வினாயகபுரம் , மூனையூர் பகுதிகளும்
 Displaying 26012013(047).jpg 
Displaying SN850776.jpg

Displaying 11012011(002).jpg
ஆலையடிவேம்பு பிரதேசத்தில்---
 பெரியகுளம், வாச்சிக்குடா, கோளாவில் சுனாமி வீட்டுப்பகுதி ,தீவுக்காலை, நாவட்காடு, பனங்காடு வட்டமடு பகுதிகளும்

 அக்கரைப்பற்று , அட்டாளச்சேனை , இறக்காமம் , நிந்தவூர் , காரைதீவு ,ஒலுவில் , பாலமுனை , பொத்துவில் பாகுதிகளிலும் தொடர்சியாக தற்பொழுதும் மழை பெய்து வருகின்றதுடன் பல விவசாய காணிகளும் 
 வெள்ள நீரில் மூழ்கி உள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை   குறிப்பிடத்தக்கது


 இதே நேரம் கிராமசேவை அதிகாரிகள் , சிவில் பாதுகாப்புக்குளுக்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்



குறிப்பாக ஆதிவாசிகள் கிராமமான  அளிக்கம்பை பகுதிக்கான  பிரதான  போக்குவரத்து பாதையான சாகாமம்-அக்கரைப்பற்று வீதியின் மொட்டையாகல் பகுதியில் வீதிக்கு மேலாக வெள்ளம் வடிந்தோடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

Monday 8 December 2014

இரத்ததான நிகழ்வு

கிழக்கு பிராந்திய  சத்திய சாயி நிலையங்களினால்  ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு
Displaying SN850451.JPG

Displaying SN850444.jpg
 அம்பாரை மாவட்டத்திற்குட்பட்ட காரைதீவு திருக்கோவில் அக்கரைப்பற்று மற்றும் ஆலையடிவேம்பு சாயி நிலையங்களின் ஒருங்கினைப்பில்  (29)சனிக்கிழமை காலை-09.00மணிக்கு ஆலையடிவேம்பு சத்திய சாயி மண்டபத்தில் இடம் பெறுகின்றது