Saturday 30 January 2016

பனங்காட்டில் இடம்பெற்ற தேசிய விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி வார இறுதிநாள் நிகழ்வுகள்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைகளுக்கமைய ஜனாதிபதியின் செயலகமும் விளையாட்டுத்துறை அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து நாடு தழுவிய ரீதியில் கடந்த திங்கள் (25) முதல் இன்று (30) வரை ஏற்பாடு செய்திருந்த தேசிய விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி வாரத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்று (30) காலை இடம்பெற்றன.


Friday 29 January 2016

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் விசேட கிரிக்கெட் சுற்றுப்போட்டி

தேசிய விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி வாரத்தையொட்டி ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று (29) காலை அக்கரைப்பற்று, பனங்காடு பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.


Thursday 28 January 2016

வயல் வெளிக்குள் குடைசாய்ந்தது

சம்மாந்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பிரதான வீதியில் கட்டாக்காளி மாடொன்று, வீதியின் நடுவில் திடீரெனப் பாய்ந்ததால் கல்முனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பட்டா ரக லொறியொன்று, இன்று வியாழக்கிழமை (28) காலை கட்டுப்பாட்டை இழந்து வயல் வெளிக்குள் குடைசாய்ந்தது.

Tuesday 26 January 2016

ஆலையடிவேம்பில் இளைஞர்களின் உடல், உள ஆரோக்கியம் தொடர்பான கருத்தரங்கு

ஜனாதிபதி செயலகமும் விளையாட்டுத்துறை அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து நாடு தழுவிய ரீதியில் ஜனவரி, 25 முதல் 30 வரை ஏற்பாடு செய்துள்ள தேசிய விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி வாரத்தையொட்டிய மூன்றாம் நாள் நிகழ்வாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளைஞர்களின் உடல், உள ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு இன்று (27) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


ஆலையடிவேம்பில் இடம்பெற்ற தேசிய விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி வார நிகழ்வுகள்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைகளுக்கமைய ஜனாதிபதியின் செயலகமும் விளையாட்டுத்துறை அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து நாடு தழுவிய ரீதியில் ஜனவரி, 25 முதல் 30 வரை ஏற்பாடு செய்துள்ள தேசிய விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி வாரத்தைச் சிறப்பிக்கும்வகையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டாம் நாள் நிகழ்வுகளான பாரம்பரிய மற்றும் கரப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டிகள் இன்று (26) காலை அக்கரைப்பற்று, ஸ்ரீ தம்மரதன சிங்கள மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றன.

Monday 25 January 2016

ஆலையடிவேம்பில் சிறுதொழில் முயற்சியாளர்களுக்காக நடாத்தப்பட்ட அறிவூட்டல் கருத்தரங்கு

இளைஞர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் அம்பாறை மாவட்ட சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் நடாத்தப்பட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்திச் சேவைக்கான ஒருநாள் ஆரம்ப அறிவூட்டல் கருத்தரங்கு இன்று (25) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


Sunday 24 January 2016

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய வார நிகழ்வுகள்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யோசனைக்கமைய நாடு தழுவிய ரீதியில் ஜனவரி 25 - 30 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய வாரம் மற்றும் விசேட தினம் என்பவற்றைச் சிறப்பிக்கும்வகையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆரம்பநாள் விசேட நிகழ்வுகளான நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி என்பன இன்று (25) காலை இடம்பெற்றன.

Saturday 23 January 2016

ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி!

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சுகிர்தராஜனின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி!

திருமலையில் கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 10ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி

Friday 22 January 2016

பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் புதிய மடத்துக்கான அடிக்கல் நடும் வைபவம்

ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள வரலாற்றுத் தொன்மைமிக்க அக்கரைப்பற்று, பனங்காடு, பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள மடத்துக்கான அடிக்கல் நடும் வைபவம் ஆலயத் தலைவர் கந்தவனம் கார்த்திகேசு தலைமையில் இன்று (22) காலை ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.


காரைதீவைச் சேர்ந்த மாணவி சாதனை

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற  "International UCMAS Abacus & Mental Arithmetic Competition– 2015" எனும் சர்வதேச போட்டியில் காரைதீவைச் சேர்ந்த

Thursday 21 January 2016

வயலிலிருந்து சடலம் மீட்பு...

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் சந்தியை அண்டியுள்ள வயலிலிருந்து வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலத்தை 

Wednesday 20 January 2016

கொள்ளை ஐவர் கைது

அம்பாறை  அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அன்மைக்காலமாக நடைபெற்றுவரும் கொள்ளைச் சம்பவங்கள்  தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து 
கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பு பட்டதாக சந்தேகிக்கப்படும் ஐவர் 

பொதுவான அடிப்படைக் கட்டணம்

தொலைபேசி வழங்குநர்களில், சிறிய நிறுவனங்களுக்கு போட்டித்தன்மைக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்பொருட்டு, இலங்கையின் தொலைபேசி வழங்குநர்களுக்கான பொதுவான அடிப்படைக் கட்டணத்தை ஏற்படுத்துவதற்கு,

Tuesday 19 January 2016

வாழ்வாதார உதவியாக கோழிக்குஞ்சுகள் வழங்கிவைப்பு

கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகளை வாழ்வாதார உதவியாக வழங்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று (20) காலை இடம்பெற்றது.

ஆலையடிவேம்பில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

ஆலையடிவேம்பு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இவ்வருடத்திற்கான முதலாவது கூட்டம் அதன் தலைவரும், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான கவிந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் இன்று (19) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கடல் ஆமை..25,000 ரூபாய்



கடல் ஆமை மற்றும் ஆமை இறைச்சி, முட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இரண்டு பேருக்கு தலா 25,000 ரூபாய் படி

Monday 18 January 2016

ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி!

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சுகிர்தராஜனின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி!

திருமலையில் கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 10ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில்

விபத்தில் ஒருவர் பலி


அம்பாறை, அட்டாளைச்சேனை கோணாவத்தை பெரிய பாலத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில்  அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர்

புதிய அரசியலமைப்பு மக்களின் கருத்து..

புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்காக பொது மக்களின் கருத்துக்களை உள்வாங்கும் நடவடிக்கையின்  முதற்கட்டம்,

கண்ணி வெடி மீட்ப்பு..

கார்த்தி...

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள பாதையிலிருந்து 10 கிலோகிராம் நிறையுடைய நிலக்கண்ணி வெடியொன்று

Friday 15 January 2016

பனங்காடு ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலயத்தில்..

தைத்திருநாள் மற்றும்  ஜயப்ப சுவாமியின்  மகரஜோதியினை முன்னிட்டு   (15)  

Thursday 14 January 2016

தித்திக்கும் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

அனைத்து இனைய பாவனையாளர்களுக்கும் 

எமது panakadu.com நிறுவன தித்திக்கும்  
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்


இனையப் பக்கத்தில் உங்களது படங்களுடன் வாழ்த்துக்களைத் தெரிவிக்க கீழுள்ள comment ல் TIPE செய்யுங்கள் அல்லது  sms (or) MMS ஊடாக  send +94 777 51 42 79 இலக்கத்திற்கு உங்கள் புகைப் படம் + வாழ்த்துக்களை   அல்லது

 email – haran139@gmail.com (or) panankadu.com@gmail.com ஊடாக அனுப்பலாம் 

Wednesday 13 January 2016

ஆலையடிவேம்பில் முன்பள்ளி ஆசிரியைகளுக்கான கொடுப்பனவுகளும் பெண் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளும் வழங்கிவைப்பு

சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் உதவியோடு ஆலையடிவேம்பு பிரதேச முன்பள்ளி ஆசிரியைகளுக்கு மாதாந்தக் கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வும், கணவனை இழந்த விதவைகள் மற்றும் பெண் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கும் வைபவமும்

Tuesday 12 January 2016

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளர் அறிமுக நிகழ்வு

மலர்ந்துள்ள புதுவருடத்தையொட்டி ஆலையடிவேம்பு பிரதேசத்தில் செயற்பட்டுவரும் பொது அமைப்புக்களின் வருடாந்த ஒன்றுகூடலும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்கு நியமனம் பெற்றுள்ள உதவிப் பிரதேச செயலாளரை அவ்வமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு அறிமுகம் செய்துவைக்கும் வைபவமும்

இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு...

தற்போது எமது அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை ஒழுங்கானதொரு கட்டமைப்பின் கீழ் கொண்டுவந்து இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றது'

பனங்காடு பாலம் அருகில் துப்பரவு நடவடிக்கை...

பனங்காடு பாலம் அருகில் துப்பரவு நடவடிக்கை


Saturday 9 January 2016

அவசர தொலைபேசி அழைப்பு இலக்கங்கள் ..

அவசர தொலைபேசி அழைப்பு இலக்கங்கள் ..



"பகிந்து கொள்ளுங்கள் உதவியாய்  தெரியப்படுத்துங்கள் "

சட்ட விரோதமாக மண் ஏற்றி கைது ...

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை சம்புநகர் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி சட்ட விரோதமாக

Friday 8 January 2016

குறும் திரைப்படம்...

வவுனியா மதுராநகர் பகுதியினைச் சேர்ந்த இளம் குறும் திரைப்பட இயக்குனரும் நடிகருமான 21 வயது நிறம்பிய

புகைப்படப் பிடிப்பாளர்களே வாரீர்..?

வொய்ஸ் ஒவ் மீடியா...

மட்டக்களப்பில் ஊடகக் கற்கைநெறிகளை நடத்திவரும் வொய்ஸ் ஒவ் மீடியா ஊடகக் கற்கைகள் நிறுவகம், இளம் புகைப்பட படைப்பாளிகள் மற்றும் பத்திரிகை புகைப்படப்பிடிப்பாளர்களுக்கான

கைக்குண்டு மற்றும் மோட்டார் குண்டு மீற்ப்பு

கார்த்தி..


 அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்திலுள்ள  மயானத்துக்கு அருகிலிருந்து கைக்குண்டு மற்றும் மோட்டார் குண்டு உள்ளிட்டவற்றை 

Thursday 7 January 2016

நல்லாட்சியின் ஒருவருடப் பூர்த்தியை முன்னிட்டு ஆலையடிவேம்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வுகள்

இலங்கைத் திருநாட்டின் ஏழாவது ஜனாதிபதியும், நிறைவேற்று அதிகாரமுடைய ஆறாவது ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட பூஜை வழிபாடு, தேசிய மரநடுகை வைபவம் மற்றும் கல்விக்கான உதவி வழங்கும் நிகழ்வுகள் என்பன ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று (8) காலை இடம்பெற்றன.

திறப்புவிழா எப்போது...?

ச.அகலிகா..

திறப்புவிழா எப்போது...?

திறப்பு விழாக் காணக் காத்திருக்கும் வவுனியா புதிய பஸ் நிலையம்.  
வவுனியாவில் புதிய பஸ்நிலையத்திற்கான வேலைகள் பூரணப்படுத்தப்பட்டும் இன்னும் மக்கள் பாவனைக்குத்  திறக்கப்படவில்லை.  வவுனியா மாவட்டத்தின் புதிய பஸ் நிலையத்துக்கு  2014.01.07 திகதியன்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா மாவட்ட முகாமையாளர் ஆர்.ஆர் கபரகமவால்   அடிக்கல் நாட்டப்பட்டது.  

Wednesday 6 January 2016

வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு உலர் உணவு..

கிழக்கு மாகாணத்தில் மீண்டும் அடை மழை பெய்ய ஆரம்பித்துள்ளதைத் தொடர்ந்து வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு உலர் உணவுகளை உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு

Monday 4 January 2016

ஆலையடிவேம்பில் வாழ்வாதார உதவியாக கோழிக்குஞ்சுகள் வழங்கிவைப்பு

திவிநெகும திணைக்களத்தின் 2015 ஆம் ஆண்டுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் வேலைத்திட்டத்தின்கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகளும் கோழித்தீனும் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இன்று (04) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் திவிநெகும உதவிபெறுகின்ற, கோழி வளர்ப்பைத் தமது வாழ்வாதாரமாகக் கொண்ட 15 பயனாளிகள் தலா 42 கோழிக்குஞ்சுகள், கோழித்தீன், கோழிகளுக்கான தீன் பாத்திரம் மற்றும் நீர்ப் பாத்திரம் என்பனவற்றைப் பெற்றுக்கொண்டனர்.


இந்நிகழ்வில் பிரதேச செயலாளரோடு உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா, தலைமையக முகாமையாளர் கே.நேசராஜா, கணக்காளர் கே.கேசகன், கருத்திட்ட முகாமையாளர் திருமதி. அருந்ததி மகேஸ்வரன் மற்றும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களான கே.பி.இராசஸ்ரீ மற்றும் எஸ்.பாக்கியராஜா ஆகியோர் குறித்த பயனாளிகளுக்கான குறித்த வாழ்வாதார வழங்கிவைத்தனர்.






Saturday 2 January 2016

Friday 1 January 2016

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற புதுவருட ஆரம்ப நிகழ்வுகள்

மலர்ந்துள்ள 2016 ஆம் ஆண்டைச் சிறப்பிக்கும்வகையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புதுவருட விசேட நிகழ்வுகள் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இன்று (01) காலை சிறப்பாக இடம்பெற்றிருந்தன.


பிரதேச செயலக வளாகத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமான வைபவங்களில் பிரதேச செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.


அதனைத்தொடர்ந்து அரசாங்க நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் 24/2015 ஆம் இலக்க அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கைக்கு அமைவாகப் பிரதேச செயலாளர் தேசியக்கொடியை ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நாட்டுக்காக உயிர்நீத்த தேசிய வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் இணைந்து புதுவருட உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து பிரதேச செயலாளரின் புதுவருட விசேட உரை அங்கு இடம்பெற்றது.

அதனையடுத்து இடம்பெற்ற புதுவருடச் சம்பிரதாயக் கைவிசேடம் பெற்றுக்கொள்ளும் நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தம்மிடையேயும் பிரதேச செயலாளரோடும் புதுவருட வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டதோடு அவரிடமிருந்து ஆசீர்வாதத்தையும் கைவிசேடத்தையும் பெற்றுக்கொண்டனர்.