எமதுஊர்

சர்வ உலகங்களுக்கும் தயாபரனாக விளங்கும் ஈஸ்வரன் இல்லாத இடமேஇல்லை. எனினும் இம்மண்ணுலகில் ஆயிரமாயிரம் ஆலயங்களில் இருந்தும் அருள்பாலித்து வருகின்றார். அப்படியிருந்தும் தாமாகவே சில புனிதத்தலங்களில் தோற்றுவித்தும் எழுந்தருளியிருக்கிறார். அப்படிப்பட்ட ஒருதலந்தான் இலங்கை நாட்டின் கிழக்கே எழில்கொஞ்சும் இயற்கை வனப்புமிக்க பனங்காடு என்னும் பதியில் ஸ்ரீ பாசுபதேசுவரர் என்னும் திருநாமத்தோடு இலிங்க மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் திருத்தலமாகும்.


அக்கரைப்பற்று பனங்காடு மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலய உற்சவப் பெருவிழா

பனங்காடு தினகரன் நிருபர் ஆர்.நடராஜன்  077538141

உலக பரம் பொருளாம் சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சமயம் சைவசமயமாகும் ”நமசிவாய என்னும் சொல்லின் முழுவடிவம் சிவபெருமான்” இதை ஞானசம்பந்தர் தனது திருவாக்கில் “நாதன் நாமம் நமசிவாயவே…”என்று தேவாரபாடலில் பாடியிருப்பது நோக்கத்தக்கது.

சிவனே முழுமுதற் கடவுள். அவரது நமசிவாய மந்திரத்தினை ஓதினால் இன்னல்கள் தீரும்
திருநாவுக்கரசு நாயனாரை கல்லில் கட்டி கடலில் வீசியெறிந்தபோது அவர் சிவனை மனதினில் நிறுத்தி “சொற்றுனை வேதியன் ஜோதிவானவன்…”எனும் பாடலை பாடி மீண்டார்

இவ்வாறான பல அற்புதங்களையும் உலகையே தனது ஒற்றைக்கால் பெரிவிரலின் கீழ் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் ஈசனின் அற்புதங்கள் பல நிறைந்த ஆலயம்களுள் ஒன்றான

அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பனக்காடு கிராமத்தில் சிவகடாட்சம் மிக்க அருள் மிகு மாதுமை உடனுறை ஸ்ரீ  பாசுப தேசுவரர் தேவஸ்த்தானம் ஒன்றாக்கும்


இவ்வாலயம் ஈழத்தின் கிழக்கு பகுதியில் கன்னகி
வழிபாடு ஆரம்பமாவதற்கு முன்னரே தோற்றம் பெற்றதாக சரித்திரவியலாளர்கள் கூறுகின்றனர்

ஆரம்பத்தில் இங்கு ஜயனார் ஆலயம் அமைக்கப்பட்டு வழிபாடுகளில் மக்கள் ஈடுபட்டு வந்துள்ளனர் இதற்குச் சான்றாக இவ் வாலயத்திற்கு முன்னால் உள்ள நெற்காணிகள் ஜயனார் வெளி எனவும் அண்மித்த குளம் ஜயனார் குளம் எனவும் இன்று வரை பேசப்படுகின்றது

இவற்றுக்கு சற்றேறக்குறைய  நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவிலிருந்து முப்பெரும் சித்தர்கள் இலங்கை மண்ணிற்கு வருகை தந்திருந்தனர்  இவர்களில் ஒருவரே கிழக்கு காரைதீவில் சமாதியடைந்த சித்தானைக்குட்டி சுவாமிகள் (சித்தர்)ஆகும்.

இவர் தனது வழிபாட்டின் நிமிர்த்தம் பனங்காட்டிற்கும் வருகை தந்திருந்தார்.

இந்த சித்தானைக்குட்டி சுவாமிகள் இந்த ஜயனார் ஆலயத்தில் பல வாரங்கள் மாதங்கள் தங்கி ஊர் மக்களுடன் உனவருந்தி இன்புற்று நன்மை தீமைகளில் பங்கு கொண்டிருந்தார்.

ஊர் பெரியவர்கள் பிற்பகல் வேளைகளில் சித்தருடன் ஆலயத்தின் வெளி வீதியில் தங்கி அளவளாவது வளக்கமாகவும் இருந்து வந்தது

சித்தர் ஒரு நாள் இவ்  ஜயனார் ஆலயத்திற்கு அருகில் உள்ள ஓர் இடத்தினை தனது கால் பெருவிரலினால் கோடிட்டு அடையாளப்படுத்தி இந்த இடத்தில் ஒரு சிவாலயம் அமையும் இது காலத்தின் போக்கில் தெண்கையிலாயமாகத்திகழும் என்று அன்றுரைத்தார்

அத்துடன் இவ்விடத்தில் சிவாலயம் அமைக்குமாறும் இதனால் நல்ல அறிவுள்ள அழகான செல்வம்மிக்க சந்ததி உருவாகும் எனவும் அருளுரைத்தார்,

இவரது சித்த வாக்குப்படி ஊர்மக்கள் ஒன்றினைந்து முடிவெடுத்து தெண் இந்தியாவிலிருந்து சிர்ப்பாச்சாரிகளை வரவழைத்து சிவாலயம் அமைப்பதற்கு ஏற்ற இடம்,  நிலையத்தினையும் வடிவினையும் திட்டமிட்டனர் இன்று மூலமூர்த்தி அமைந்திருக்கும் இடம் சித்தர் கோடிட்டுக்காட்டிய இடமே ஆகும்என இவ் ஆலய வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன


ஜயனார் வழிபாடு இக் கிராமத்தில் இருந்த போது பிறக்கின்ற குழந்தைகள் கறுப்பானவர்களாகவும் அழகிழந்தவர்களாகவும் வறுமையில் வாடியதாகவும் வரலாற்றுடன் முதியவர்களும் இன்றும் கதை சொல்வதை கேட்கமுடிகின்றது

இதன் பின்னர் சித்தானைக் குட்டி சித்தர் காலத்தில் சிவன் ஆலயம் அம்மன் ஆலயம் போண்றதனைக்கட்டி வழிபடலாயினர் பல ஆண்டுகள் கழிந்த பின்னர் கிழக்கின் மரபுப்படி ஆறு  குடிகளாக ஒன்று சேர்ந்து வண்ணக்குமார் சபை என்ற ஒரு நிருவாகக் கட்டமைப்பினை ஏற்படுத்தி ஆலயத்தினை பதிவு செய்து புதியஆலயம்  அமைக்கும் பனியில் ஈடுபட்டனர். இவ் ஆலய கட்டுமானப் பணியானது ஊர்மக்கள் பிரதேச அமைப்புக்கள் நண்கொடையாளர்கள் மற்றும் அரசின் உதவியும் கிடைக்கப் பெற்றிருந்தமை சிறப்பாகும்

”பாரூரும் பனங்காட்டூர்ப் பவளத்தின் படியானைச்
சீரூரும் திருவாருச் சிவன் பேர் சென்னியில் வைத்த
ஆரூரன் அடித்தொண்டன் அடியன்சொல் அடிநாய்சொல்
ஊருரன் உரை செய்வார் உயர் வானத்து உயர்வாரே….”
என சுந்தரர் தேவாரம் பாடலில் இவ் ஆலயத்தின் சிறப்பினை பாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


இவ் ஆலயத்தின் முதலாவது மகா கும்பாபிஷேகம் 1963ஆம் ஆண்டு ஆவனித் திங்களில் இடம் பெற்றது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பாபிஷேகம் இடம் பெற வேண்டுமென்பதற்கு அமைய பல இடர்பாடுகளுக்கு மத்தியில் 1981இல் பாலஸ்தானம் செய்யப்பட்டது

நாட்டின் போர் சூழலுக்கு மத்தியிலும் 1988ஆம் ஆண்டு விபவ வருடம் ஆவணித்திங்கள் 29ம் நாள் (14.09.1988) நாவாலியூர் பிரமஸ்ரீ சாமி விஸ்வநாதக் குருக்களால் மகாகும்பாபிஷேகம் இடம் பெற்றது


அம்பாரை மாவட்டித்திலே அழகிய பல அற்புதங்கள் நிறைந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்கள் பல உள்ளன ஆயினும் அனைத்திற்கும் சிகரம் வைத்தால்போல் அழகிய சிற்பக்கலையுடன் சகலவித பரிவார மூர்த்திகளுடனும் இரு தள விமானங்களுடன் விளங்கும் ஒரோ ஒரு சிவாலயம் என்ற பெருமை இத்தலத்திற்கே உரியது .

தற்போது இவ்வாலயம் பல வெளிநாட்டு தனவந்தர்களின் நண்கொடைகள் ஊர் மக்களின் மங்களிப்பின் மூலம் செப்பனிடப்பட்டு தலைநகரில் உள்ள ஆலயத்திற்கு இனையான ஒரு சிவத்தலமாக காட்சி தருகின்றது


ஒரு ஊரின் பெருமையினையும் கல்வி, செல்வம்,வீரம் போன்றவற்றை எடுத்துக்காட்டுவது ஆலயம் என்பதை இத்தலம் நிருபித்து தலைநிமிர்ந்து காட்சி தருகின்றது கடந்த பத்து நாட்கள் திருவிழா இடம் பெற்று 23.03.2016 புதன்கிழமை பங்குனி உத்தரத்தில் தீர்தோற்சம் இடம் பெறுகின்றது

இவ் ஆலய விழாக்கள் அனைத்தினையும் ஆலய பிரதம குருவும் மகோட்சவ குருவுமான ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ அ.மூர்த்தீஸ்வரக் குருக்களினால் நடாத்திவைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது 






No comments: