Tuesday 28 March 2017

சிரமதானம்

ஆலையடிவேம்பு பிரதேச செயலகமானது ஆலையடிவேம்பு பிரதேச சபையோடு இணைந்து ஏற்பாடு செய்திருந்த மாபெரும் சிரமதான நிகழ்வொன்று இன்று (28) காலை 7.00 மணி தொடக்கம் பனங்காடு, சாகாம வீதியிலுள்ள சிப்பித்திடல் பொது மயானத்தில் இடம்பெற்றது.

Thursday 16 March 2017

புலமைப்பரிசில்


திவிநெகும திணைக்களத்தின் கல்வி அபிவிருத்திக்கான சிப்தொற கல்விப் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று (15)  மாலை நடைபெற்றிருந்தது.

ஆலையடிவேம்பில் வீதிகளின் புனரமைப்புப் பணிகள் அங்குரார்ப்பணம் செய்துவைப்பு


தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் ஆலையடிவேம்பு பிரதேசத்தின் நாவற்காடு மற்றும் அக்கரைப்பற்று 7/4 கிராம சேவகர் பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்ட 6 கிறவல் வீதிகளைக் கொங்கிரீட் இட்டு செப்பனிடுவதற்கான வேலைத்திட்டங்களை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வுகள் நேற்றும் இன்றும் (15 & 16) இடம்பெற்றன.

Sunday 12 March 2017

இளைஞனின் சடலம் மீட்பு



அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 3ஆம் கட்டை வயல் பிரதேசத்தில், வாடியொன்றின் கீழ், எரியுட்டப்பட்ட நிலையில், இளைஞன் ஒருவரின் சடலம், இன்று (12) காலை மீட்கப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

Saturday 11 March 2017

பாலத்தில் தொங்கிய உழவு இயந்திரம்

 விஜயரூபன் BA..

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்ப பனங்காடு  தில்லையாற்று பாலத்தில்  வேகக்கட்டுப்பாட்டினை இழந்து  விபத்துக்குள்ளான உழவு இயந்திர வாகனம் பாலத்தில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது  இதில் சாரதி

Wednesday 8 March 2017

அனுதினமும் ஆண்களால் கொண்டாடப்பட்டுவரும் தினமாகவே இன்றைய மகளிர் தினம் மாறியுள்ளது. - பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன்


எமது குடும்பச் சூழலில் காலையில் கண் விழித்தெழுவது முதல் அன்றைய நாளைப் பூர்த்திசெய்யும்வரை ஒவ்வொரு ஆணும் அன்றாடம் மகளிர் தினங்களைக் கொண்டாடிக்கொண்டே இருக்கின்றார்கள். காலையில் தனது மனைவி அல்லது தாய், சகோதரியின் கையால் பெறும் தேனீரிலிருந்து தொடங்கி, எமது குடும்பத்தின் அன்றாடக் கடமைகளை நிறைவு செய்து கடைசியாக நித்திரைக்குச் சென்று கண் மூடி உறங்குவது வரை எத்தனையோ கடமைகளை மனங்கோணாமலும், குடும்ப நலனைக் கருத்தில்கொண்டும் பெண்கள் செய்துமுடிக்கின்றார்கள். அவள் வேலைக்குச் செல்பவளாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. தனது கடமைகளிலிருந்து ஒருபோதும் தவறுவதில்லை. அப்படித் தவறினால் எம்மைப்போன்ற ஆண்களின் இப்போதைய நிலைமை அப்படியே தலைகீழாகிவிடும் என்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் தெரிவித்தார்.

Thursday 2 March 2017

எதிர்கால வரட்சி நிலையைக் கருத்திற்கொண்டு குடிநீர் விநியோகத்தை அதிகரித்து வழங்க ஏற்பாடு


ஆலையடிவேம்பு பிரதேச அனர்த்த முகாமைத்துவக் குழுவினுடைய அவசர ஒன்றுகூடலொன்று இன்று (03) காலை அதன் தலைவரும் பிரதேச செயலாளருமான வி.ஜெகதீஸன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

குறைந்த விலையில் தரமான



சந்தை விலையை விட மலிவான விலையில். தரமான பொருட்கள் எங்களிடம் மாத்திரமே...
விற்பனைக்குப் பிந்திய சேவைகளுடன், 
*அனைத்து வகையான CCTV Cemara (full set)
*வாகன பிற்பக்க கமரா (Revaice camera)
*Home Alarm camera
*Office finger print machine
*coil full set..
(Shops orders உம் ஏற்றுக் கொள்ளப்படும்) 
அனைத்தையும் நியாயமான விலையில் பெற்றுக்கொள்ள
அழையுங்கள்
0778361495
0757196520

Wednesday 1 March 2017

பிரதேச அபிவிருத்தி தொடர்பான கூட்டங்களுக்கு சமுகமளிக்காத அரச அதிகாரிகள் மீது பாரபட்சம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும். - க.கோடீஸ்வரன் (பா.உ)


இலங்கையிலுள்ள தமிழர் வாழும் பிரதேசங்களில், அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற ஆலையடிவேம்பு, திருக்கோவில் போன்ற பிரதேசங்களில் இடம்பெறுகின்ற எவ்விதமான அபிவிருத்தி சம்மந்தமான கூட்டங்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டாலும் அரச அதிகாரிகள் சமுகமளிப்பதில்லை. அவை இதுபோன்ற இணைப்புக் குழுக் கூட்டங்களாக இருந்தாலும் சரி. இல்லாவிட்டால் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்களாக இருந்தாலும் சரி. எதுவாக இருந்தாலும் அவர்கள் ஏதாவது காரணங்களைக் கூறிப் புறக்கணித்துவிடுகின்றார்கள். இதன்மூலம் அவர்கள் மறைமுகமாக எமக்கெல்லாம் ஒன்றைச் சொல்லிவிடுகின்றார்கள்.