Friday 12 June 2015

ஐந்து உள்ளாடைகளை உடுத்திகொண்டு டுபாயிலிருந்து வந்த பெண் கைது

ஐந்து உள்ளாடைகளை உடுத்திகொண்டு டுபாயிலிருந்து வந்த இலங்கை பிரஜையொருவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்கப்பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
அவர், தனது உள்ளாடைகளில் 5கோடி ரூபாய் பெறுமதியான 10கிலோகிராம் தங்க பிஸ்கட்டுகளை மறைத்துகொண்டு வந்துள்ளார்.
வத்தளை பிரதேசத்தைச்சேர்ந்த 31 வயது பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கணக்காளர் என்றும் வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு தடவைகள் டுபாய்க்கும் இலங்கைக்கும் இடையில் பயணம் செய்கின்றார் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என சுங்கப்பிரிவினர் அறிவித்துள்ளனர்.
இன்றைக்கு நான்கு நாட்களுக்கு முன்னர் டுபாய்க்கு சென்றிருந்த சந்தேகநபரான அந்த பெண் பைல்ய் டுபாய் விமான சேவைக்கு சொந்தமான எப்.இஸட் 557 இலக்க விமானத்திலேயே அவர், இன்று அதிகாலை 1.10க்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
தங்கம் கடத்தல் தொடர்பில் நீண்டநாட்களாக முன்னெடுக்கப்படும் விசாரணையின் ஒரு கட்டமாகவே இவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்ய முடிந்துள்ளது என்றும் சுங்கப்பிரிவினர் அறிவித்துள்ளனர்.
இந்த தங்க பிஸ்கட்களை இரண்டு பொதிகளாக பொதிசெய்து அவருடைய உடம்பில் அந்தரங்க பகுதியில் மறைத்து வைத்து, அந்த தங்க பிஸ்கட்டுகள் தெரியாதவகையில் ஐந்து உள்ளாடைகளை உடுத்திகொண்டு வந்துள்ளதாக சுங்கப்பிரிவினர் அறிவித்துள்ளனர்.
ஒவ்வொன்றும் 100 கிராம் நிறைகொண்ட தங்க பிஸ்கட்டுகளில் ஒரு பொதியில் 18 தங்க பிஸ்கட்டுகளும் ஏனைய பொதியில் 82 தங்க பிஸ்கட்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் தனக்கு டுபாயில்  இனந்தெரியாத நபரொருவர் வழங்கியதாகவும் 50ஆயிரம் ரூபாய் குத்தகை அடிப்படையிலேயே தங்க பிஸ்கட்டுகளை கொண்டுவந்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் சந்தேகநபர் வழங்கும் வழமையான மறுமொழி இதுவென்று சுங்கப்பிரிவினர் தெரிவித்தனர்.

No comments: