Wednesday 20 January 2016

பொதுவான அடிப்படைக் கட்டணம்

தொலைபேசி வழங்குநர்களில், சிறிய நிறுவனங்களுக்கு போட்டித்தன்மைக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்பொருட்டு, இலங்கையின் தொலைபேசி வழங்குநர்களுக்கான பொதுவான அடிப்படைக் கட்டணத்தை ஏற்படுத்துவதற்கு,
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

இது, அடுத்த மாதம் (பெப்ரவரி) முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக, அவ்வாணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, அதே வலையமைப்புக்கிடையிலான கட்டணம், ஆகக்கூடிய 50 சதவீதத்தால் அதிகரிக்கப்படுமெனவும், வெவ்வேறு வலையமைப்புகளுக்கிடையிலான கட்டணம், ஆகக்கூடியது 28 சதவீதத்தால் குறைக்கப்படுமெனவும் அறிவிக்கப்படுகிறது. அடிப்படைக் கட்டணத்தை மீள ஆராயுமாறு தொலைத்தொடர்பு வசதி வழங்குநர்கள் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இவ்வாறான கட்டணம் காணப்படும்போது, சிறிய நிறுவனங்கள், பெரிய நிறுவனங்களோடு போட்டி போடக்கூடிய நிலை உருவாகுமெனவும், ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபங்கொட தெரிவித்தார். இலங்கையில், அலைபேசி வசதி வழங்கும் நிறுவனங்கள் ஐந்தும், நிலையான தொலைபேசி வசதிகளை வழங்கும் நிறுவனங்கள் மூன்றும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments: