Sunday 10 August 2014

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி (திவிநெகும)



வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி (திவிநெகும) திணைக்களத்தின் ஆறாம் கட்ட வேலைகளை ஆரம்பித்தல் தொடர்பாக பிரதேச செயலகத்தின் கிராமமட்டங்களில் பணிபுரியும் கள உத்தியோகத்தர்களைத் தெளிவூட்டும் கருத்தரங்கொன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நேற்று (06) காலை நடைபெற்றது. 
பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில்  உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.ரி.கிருபைராஜா, திவிநெகும தலைமையக முகாமையாளர் கே.நேசராஜா, கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாச ஆகியோரும் கலந்துகொண்டனர்.
“எங்கள் வீட்டுத்தோட்டத்திலிருந்து எங்கள் மரக்கறிகள்” என்ற தொனிப்பொருளில் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் பயனாளிகளுக்கு மரக்கறிக் கன்றுகள் வழங்கல், விதைகள் மற்றும் பழமரக்கன்றுகள் உட்பட நடுகைப்பொருட்களை வழங்குதல் என்பன தொடர்பில் ஒவ்வொரு கிராமமட்டத்திலும் முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்வரும் ஒக்டோபர், 20 ஆந்திகதியன்று ஜனாதிபதியின் தலைமையில் இதற்கான ஆரம்ப விழாவினை நடாத்துதல் என்பன தொடர்பாக இக்கருத்தரங்கில் விரிவாக ஆராயப்பட்டன.


இந்நிகழ்விற்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்கிராம உத்தியோகத்தர்கள்வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.

No comments: