Saturday 14 July 2018

22 ஆம் திகதி வரை திறந்திருக்கும்.



கதிர்காமம் முருகன் ஆலயத்திற்கான பாதயாத்திரையினை நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் மேற்கொண்டுவருகின்றனர். கதிர்காமம் கொடியேற்றம் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் ஆரம்பமாகியது.
இந்நிலையில் உகந்தை மலை முருகன் ஆலயத்திலிருந்து காட்டுப்பாதை ஊடாக பக்தர்கள் பாதயாத்திரையில் ஈடுபட்டுவருகின்றனர். கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை கடந்த 4 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. இப்பாதை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை திறந்திருக்கும்.


முதல் நாள் 1780 பேர் பயணம் செய்தனர். கடந்த 4ஆம் திகதியிலிருந்து இன்று 14 ஆம் திகதி 3 மணி வரை 19ஆயிரத்து 645 பேர் காட்டுப்பாதை ஊடாக கதிர்காமம் நோக்கிச் சென்றுள்ளனர். உகந்தை மலை ஆலய கொடியேற்றம் 13 ஆம் திகதி நடைபெற்றது. இக் கொடியேற்றத்தை பார்த்துவிட்டு அன்று காட்டுப்பாதையில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டபக்தர்கள் கதிர்காமம் நோக்கி பயணித்ததாக உகந்தமலை ஆலய வண்ணக்கர் திசநாயக்க சுதுநிலமே தெரிவித்தார். 

கடந்தவருடம் 25 ஆயிரம் பக்தர்கள் சென்றுள்ளனர். இவ்வருடம் அதிகமான பக்தர்கள் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை இன்னும் ஒன்பது தினங்கள் திறந்திருக்கும். பக்தர்கள் 24 ஆம் திகதி மாலை காட்டுப்பாதை மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காட்டுப்பாதை ஊடாகச்செல்பவர்களுக்கு இராணுவம், வனஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் பாதுகப்பு வழங்குவதோடு குடிநீர் உட்பட சகல வசதிகளும் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றுடன் கதிர்காமம் காட்டுப்பாதையால் சுமார் 19,645 பக்தர்கள் பயணம் Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka
haran

No comments: