Thursday 12 July 2018

கதிர்காம ஆடிவேல் இன்று (13) கொடியேற்றம்

haran
 கதிர்காம ஆடிவேல் இன்று (13) கொடியேற்றம்



இலங்கையின் தென் பகுதியான மொனராகலை  மாவட்டத்தின் தென் எல்லையில் கதிர்காம திருத்தலம் அமைந்துள்ளது .மூவின மக்களும் பக்தியுடன் தரிசிக்கும் புனித பூமியான கதிர்காமக் கந்தனின் வருடாந்த ஆடிவேல்  உற்சவம் இன்று 13ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 27ம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.


கதிர்காமத்தினை தமிழில்கதிர் –ஒளி காமம் –அன்பு நிறைந்த இடம், என்பதுடன் கதிரு எனும் சிங்களச் சொல்லின் மருவு என்று விளக்கி கூறுகின்றனர்  , இருப்பினும் சிங்களத்தில் கதரகம என்று அழைக்கின்றமையும் கேட்க்கக் கூடியதாகவுள்ளது


ஆலய திருக் கொடியேற்றல் நிகழ்வு இன்று காலை கதிர்காமத்தின் பால்குடி பாவா பள்ளிவாசலில் பச்சை நிறத்திலான கொடியினை வைத்து இஸ்லாமிய மதப் பெரியார்கள் பிரார்த்தனையுல் ஈடுபட்டு பின்னர் அதற்கு சந்தனம் பூசி ஆகம முறைப்படி பாரம்பரிய இசையுடன் பள்ளிவாசலை வலம் வந்து உள்ளே பிரார்த்தனை இடம்பெறுவதை தொடர்ந்து அனைத்து மத பெரியார்களுடன் கதிர்காம ஆலய கப்புறாளையுடன் கொடியேற்றப்படுவது வமை.


No comments: