Tuesday 26 September 2017

கிழக்கின் எழுச்சி கண்காட்சியின் இறுதி நாள்

(சப்னி அஹமட்)

கிழக்கு மாகாண விவசாய அமைச்சினால் கிழக்கின் எழுச்சி கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வு 2017.09.24 கல்முனை உவெஸ்லி உயர் பாடசாலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாஹமக, விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துறைராஜசிங்கம், கிழக்கு மாகாண கல்வியமைச்சர் தண்டாயுதபானி, கிழக்கு மாகாணசபையின் தவிசாளர் சந்திராச கலபதி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுடன் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

அங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர்:
கிழக்கு மாகாண விவசாய அமைச்சு மூலம் இப்பிரதேசத்தின் விவசாய அமைச்சு சிறந்த முறையில் சேவையாற்றி வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் விவசாயத்துறை 50% மக்கள் பாவனையாக இருக்கின்றது. இவ்வாறன மக்களின் அத்தியாவசிய தேவையாக உள்ளதால் இவற்றுக்கு நாம் முன்னிரிமை வழங்க வேண்டும்.

இதற்காக எதிர்வரும் காலங்களில் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் அதிகமான நிதிகளைகளை ஒதுக்கி விவசாயத்துறையை மேம்படுத்த முன்வர வேண்டும் என்று கூறினார்.



இதன் போது அங்கு பண்ணையாளர்கள் தங்களது திறமைகளை வெளிக்கொண்டு வந்தமை பாராட்டுக்குரியது. அவர்களுக்கு சிறந்த சாதனை விருதுகளும் வழங்கி  கெளரவிக்கப்பட்டது.






haran

No comments: