Saturday 2 March 2019

கல்வியும் ஆன்மீக விழுமியங்களும் பயிற்சிநெறி

மாணவர்களின் கல்வியும் ஆன்மீக விழுமியங்களும் பயிற்சிநெறி 







ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில்  பிரதேச மாணவர்களுக்கான விழுமியக் கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்     ஓர் அங்கமாக விசேட செய்முறை பயிற்சி எதிர்வரும் 25ம் திகதி இடம்பெறவுள்ளது 


பாடசாலை மாணவர்களின் எதிர்கால வாழ்வியலில் சுபிட்ஷத்தை  மலரச் செய்வதில் சில ஆக்கபூர்வமானதும் அவர்களின் வாழ்நாள் வரைக்கும் பயன்படக்கூடியதுமான கல்வி மற்றும் ஆன்மீக  செயற்பாடுகளினை இனம் கண்டு நடைமுறைப்படுத்துவதன்  பிரதான நோக்கமாகக் கொண்டு அகில இலங்கை இந்து மாமன்றம் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில் வளவளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த கலாநிதி தமிழருவி பேராசிரியர் வே. சங்கரநாராயணன் அவர்களின் பங்குபற்றலுடன் மிகவும் சிறப்பான முறையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்ற தலைவர் கனகரத்தினம் தெரிவித்தார் 

மேலும் மாணவர்களது கல்வி தொடர்பான  பணி மகத்தானது மாணவர்களின் வாழ்வியல் பாடசாலை கல்வியுடன் வாழ்க்கைக்கான அறநெறிகளினையும் கற்பதன் மூலமே சமூகத்தில் நல்லொழுக்கமுள்ள ஆன்மீக விழுமியங்கள் மேம்பட்ட ஆளுமையுடன் வாழ்ந்து சாதனைகளை உருவாக்க கூடியவர்களாக சமூகத்தில் அவர்களை சிறந்த ஆனந்தமாக வாழ வைப்பதே குறிக்கோளாகக் கொண்டு இவ் நிகழ்ச்சித்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்haran

No comments: