Saturday 16 September 2017

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் திறன் அபிவிருத்தி சந்தை

(க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் திறன் அபிவிருத்தி சந்தை இன்று (15.9.2017) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் ஆசிரியை பிரியங்கனி திசநாயக்க அவர்களின் மொழிவிருத்தி, முகாமைத்துவ ஒழுங்கமைப்பில் அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.


இலங்கை கல்வியமைச்சின் சுற்று நிருபத்திற்கு இணங்க மாணவர்களின் திறனை விருத்தி செய்தல் எனும் செயற்பாட்டின் மூலம் ஒழுங்கு படுத்தப்பட்டு அதிபரின் ஆலோசனை,வழிகாட்டல்களுடன் சிறப்பாக நடைபெற்றது.

தரம்-6 மாணவர்களினால் நடைபெற்றது. சுமார் 135 மாணவர்கள் அருகிச்செல்லும் மரக்கறிகளையும், பழங்களையும் காட்சிப்படுத்தி விற்பனை செய்தார்கள். இதன்போது அறுபதுக்கு மேற்பட்ட பொருட்களை மாணவர்கள் தேடிப் பெற்றுக்கொண்டு வந்து சந்தையை ஒழுங்குபடுத்தி செய்தார்கள்.

அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ், பிரதியதிபர்கள் இராசதுரை-பாஸ்கர், கே.சசிகாந், உப அதிபர் எஸ்.சதீஸ்வரன் ஆகியோர்கள் சந்தையை ஆரம்பித்து வைத்து பொருட்களை கொள்வனவு செய்துவைத்தார்கள். சந்தையில் விற்பனை செய்தார்கள்.  சந்தையில் விற்பனை செய்யப்பட்ட பொருட்களை அதிபர்கள், ஆசிரியர்கள் ஆர்வத்துடனும், மலிவு விலையிலும் கொள்வனவு செய்தார்கள்.













haran

No comments: