Friday 7 March 2014

ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்த்தான திருக்கொடியேற்ற பெருவிழா பிரமோட்சவம்

அக்கரைப்பற்று பனங்காடு அருள்மிகு மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்த்தான திருக்கொடியேற்ற பெருவிழா பிரமோட்சவம்
கொடியேற்றம் 08.03.2014
திரிபுரதகனத் திருவிழா  10.03.2013
தெப்பத் திருவிழா 11.03.2014
பாசுபதாஸ்த்திரத் திருவிழா 13.03.2014
மாம்பழத் திருவிழா 14.03.2014
திருவேட்டைத் திருவிழா 15.03.2014
சங்காபிஷேகம் 16.03.2014
நகர் வலம்  16.03.2014
தீர்த்தோற்சவம் 17.03.2014
சண்டேசுவர் திருவிழா 17.03.2014
பூங்காவனத் திருவிழா 18.03.2014
வைரவர் பூசை 19.03.2014
சிவநேயச் செல்வர்களே!
சர்வ உலகங்களுக்கும் தயாபரனாக விளங்கும் ஈஸ்வரன் இல்லாத இடமேஇல்லை. எனினும் இம்மண்ணுலகில் ஆயிரமாயிரம் ஆலயங்களில் இருந்தும் அருள்பாலித்து வருகின்றார். அப்படியிருந்தும் தாமாகவே சில புனிதத்தலங்களில் தோற்றுவித்தும் எழுந்தருளியிருக்கிறார். அப்படிப்பட்ட ஒருதலந்தான் இலங்கை நாட்டின் கிழக்கே எழில்கொஞ்சும் இயற்கை வனப்புமிக்க பனங்காடு என்னும் பதியில் ஸ்ரீ பாசுபதேசுவரர் என்னும் திருநாமத்தோடு இலிங்க மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் திருத்தலமாகும்.

இத்தலத்தின் வருடாந்த திருக்கொடியேற்றப் பெருவிழா நிகழும் விஜய வருடம் மாசி மாதம் 24ம் நாள் சனிக்கிழமை (08.03.2014) பூர்வபக்க சப்தமித் திதியும் ரோகிணி நட்சத்திரமும், அமிர்த யோகமும் கூடிய பகல் 10.00 மணியளவில் வரும் சுபவேளையில் ஆரம்பமாகும்.

07.03.2014 வெள்ளிக்கிழமை மாலை விநாயகவழிபாடு, அனுக்ஞை, கிராமசாந்தி, பிரவேசபலி, வாஸ்துசாந்தி போன்ற பூர்வாங்க கிரியைகள் நடைபெறும். தினமும் பகல் இரவுத் திருவிழாக்கள் ஒன்பது தினங்கள் நடைபெற்று 19.03.2014 வெள்ளிக்கிழமை வைரவர் பூசையுடன் இனிது நிறைவுறும். இவ்விழாக்கள் அனைத்திலும் யாவரும் கலந்து அருள்பெற்றுச்செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

உற்சவகால ஒழுங்குகள்…!
அனைவரும் வருக இறையருள் பெறுக


No comments: