Saturday 15 March 2014

அக்கரைப்பற்று – 8/3 மற்றும் அக்கரைப்பற்று – 9 கிராமசேவகர் பிரிவுகளுக்கான நடமாடும் சேவை”


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ‘கிராமம் கிராமமாக – வீடு வீடாக’ அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள அக்கரைப்பற்று – 8/3 மற்றும் அக்கரைப்பற்று – 9 கிராமசேவகர் பிரிவுகளுக்கான இணைந்த நடமாடும் சேவையானது இன்று 14-03-2014, வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று – 9, ஸ்ரீ தம்மரதன சிங்கள வித்தியாலயத்தில் நடைபெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் காலை 9.00 மணியளவில் தேசியக்கொடியேற்றி இந்நடமாடும் சேவையினை ஆரம்பித்துவைத்தார். தொடர்ந்து பிரதேச செயலாளர் மற்றும் கிராமசேவை உத்தியோகத்தர் ஏ.தர்மதாச ஆகியோர் உரையாற்றியதுடன், அக்கரைப்பற்று – 8/3 மற்றும் அக்கரைப்பற்று – 9 பிரிவுகளுக்கான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இருவரும் தத்தமது பிரதேசம் தொடர்பான விளக்கவுரையினை வழங்கினார்கள்.

அதனைத்தொடர்ந்து மேடையேற்றப்பட்ட கலை, கலாசார நிகழ்வுகளில் தமது திறமைகளை வெளிப்படுத்திய சிறார்களுக்கு பிரதேச செயலாளர், கிராமசேவை உத்தியோகத்தர்கள் ஏ.தர்மதாச மற்றும் பி.முரளிதரன், உதவிப் பொலிஸ் பரிசோதகர் வை.விஜயராஜா, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வை.இதயதினேஸ் மற்றும் கே.கௌசல்யா ஆகியோர் பரிசில்களை வழங்கிவைத்தார்கள்.

இந்நடமாடும் சேவையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்திப் பிரிவுக்கான உத்தியோகத்தர்களுடன் பொலிஸ் மற்றும் ஏனைய அரச பொதுத்துறை சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று இரு கிராமசேவகர் பிரிவுகளையும் சேர்ந்த பொதுமக்களுக்கான சேவைகளை வழங்கினர். இதன்போது அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஹாஜா முஹைதீன் அவர்களும் பங்கெடுத்தமை சிறப்பம்சமாகும்.

அத்தோடு இந்நடமாடும் சேவையுடன் இணைந்தவகையில் குறித்த கிராமசேவகர் பிரிவுகளைச் சேர்ந்த இளைஞர் கழக அங்கத்தவர்களால் அக்கரைப்பற்று – 8/3, பாவேந்தர் சனசமுக நிலைய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிரமதான நிகழ்வானது பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.இதயதினேஸின் மேற்பார்வையுடன் நடைபெற்றது.

மேலும் கிராமத்திற்குக் கிராமம் நடமாடும் சேவையின் வாச்சிக்குடா கிராமசேவகர் பிரிவிற்கான அடுத்த நடமாடும் சேவையானது எதிர்வரும் 18-03-2014, செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று – 7/2, விபுலானந்தா மாணவர் இல்லத்தில் நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
 —  (42 photos)

No comments: