Saturday 23 January 2021

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அறிவிக்கப்பட்ட கொரோனா அபாய நிலையையும் கடந்த இலங்கை

நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையானது உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அபாய நிலையாக அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தானம் குறிப்பிட்டுள்ள 5 தசம் 5 வீதம் எனும் எண்ணிக்கையை நாடு கடந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.



எனவே நாடு அபாய கட்டத்தை அடைந்துள்ளதை உணர முடிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது அடையாளம் காணப்படும் தொற்றாளர்கள், மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என சுகாதார தரப்பு கூறுகின்றது என அவர் கூறியுள்ளார்.

எனினும் தற்போது பதிவாகும் கொரோனா தொற்றாளர்களுக்கும் குறித்த இரு கொத்தணிகளுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என அவர் கூறினார்.

அத்துடன் மேல் மாகாணத்தில் இருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த நாடு தவறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாடு மிக மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: