Wednesday 9 December 2020

கொரோனா தடுப்பூசியை யாரெல்லாம் ஏற்றிக்கொள்ள கூடாது – ஆய்வு தகவல்.

குறிப்பிடத்தக்க ஒவ்வாமைகள் காணப்படும் நபர்கள் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டாம் என பிரித்தானிய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Pfizer மற்றும் BioNTech நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பிரித்தானியாவில் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டு வருகிறது.



முதியவர்கள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முன்னின்று செயற்படும் ஊழியர்கள் ஆகியோருக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த தடுப்பூசியை பெற்றுக் கொண்ட இருவருக்கு பாதகமான எதிர்விளைவுகள் ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக, பிரித்தானிய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து, குறிப்பிடத்தக்க ஒவ்வாமைகள் காணப்படும் நபர்கள் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தடுப்பூசி காரணமாக பாதிக்கப்பட்ட இருவரும் தற்போது குணமடைந்து வருவதாக பிரித்தானிய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பொதுப் பயன்பாட்டுக்காக கொரோனா தடுப்பூசி விநியோகத்தை அங்கீகரித்த முதல் உலக நாடாக பிரித்தானியா காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments: