Wednesday 9 December 2020

அரசு முஸ்லிம்களை பழிவாங்கவே உடல் தகனம் முடிவை எடுத்துள்ளது– அப்துல் ஹலீம்


முஸ்லிம்களைப் பழிவாங்கவே அரசு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடலை தகனம் முடிவை எடுத்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீம் தெரிவித்தார்.

இவ் விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் முடிவுகளும் ஆதாரமற்றவை எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்றுப் புதன்கிழமை ஊடகங்களுக்கு அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலை தகனம் செய்யும் விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவினர் ஒரு சந்தர்ப்பத்தில் உடல்களை அடக்கம் செய்ய இணக்கம் தெரிவித்திருந்தபோதிலும் பின்னர் மாறுபட்ட கருத்தை வெளியிடுகின்றனர்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய ஏதுவாக மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தைத் தேர்வு செய்து தர தயாராகவிருக்கின்றோம்.

ஆகவே இதனை நியாயமான கோரிக்கையாகக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் அரசாங்கம் அனைத்து மதத்தினரையும் சமமாக மதிக்கவேண்டும்- என்றார்.

No comments: