Thursday 14 June 2018

பெரியக்களப்பு ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டம்

(நடராஜன் )........

பாரிய ஆர்ப்பாட்டம்

ஆலையடிவேம்பு பெரியக்களப்பு ஆக்கிரமிப்புக்கு எதிராக மீனவர்கள் வீதிமறியல் போராட்டம்



அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச   சபை எல்லைக்குட்பட்ட பெரியக்களப்பு பிரதேசத்தில் அரச காணி என  பெயர்ப்பலகை நடப்பட்டுள்ள பகுதியில் அமைந்துள்ள மீனவர் ஒய்வு மண்டபத்தினையும்  அண்டிய பகுதியினையும் தனியார் ஒருவர் அத்துமீறி முற்கம்பிவேலி அடைந்துள்ளதால் இதனை கண்டித்து அதனை உடனடியாக அகற்றி மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாது பாதுகாக்குமாறும் இப் பெரியக்களப்பு பகுதியினை  ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்குமாறும்  கூறி மிகப்பெரும் வீதிமறியல் போராட் டம் மீனவர் அமைப்பின் பிரதிநிதிகளால்   சாகாமம் - அக்கரைப்பற்று வீதியினை மறித்து தீவுக்காலை பகுதியில் நடாத்தப்பட்டது 
இன்று காலை முதல் முன்னெடுக்கப்படட இவ் ஆர்ப்படடத்தினால்  மூன்று  மணிநேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது 
இந்த நேரத்தில் வருகை தந்த  ஆலையடிவேம்பு பிரதேசசபை  தவிசாளர்  க.பேரின்பம் மற்றும்  பாராளுமன்ற உறுப்பினர் கவித்திரன் கோடிஸ்வரன்கருத்து தெரிவிக்கையில் 


இந்த பெரிய களப்பு நில அக்கிரமிப்பு சம்பந்தமாக நான் கடந்தவாரம் பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றினை ஆற்றியுள்ளேன் இதற்கு சரியான உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென கருதுகின்றேன் 

கடந்த 2001.09ம் மாதம் 10ம் திகதி அடிக்கல் நா ட்டப் பட்டு  2002ல்  திறக்கப்பட்ட இந்த மீனவர் ஒய்வு மண்டபம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன் களப்பின் ஒருபகுதி அடைக்கப்பட்டிருப்பது குற்றமான தண்டிக்கத்தக்க செய்யலாகும். 

 அரசின் பணத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தினை உடைத்தெறிவது என்பது பாரதூரமான குற்றமாக உள்ளத்துடன் பொலிஸார் இது தொடர்பில் முறையான நடவடிக்கை எடுக்காதிருப்பது கவலையளிக்கின்றது மீனவர் சங்கத்தினால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தும் சட்டநடவடிக்கை எடுக்கதவறியமை வேதனையளிக்கின்றது ,அத்துடன் பிரதேச செயலாளர் இவ்  விடயத்தில் அசமந்தமாக இருந்ததே இன்று நடக்கும் போராட் டத்திற்கு காரணம் என நான் நினைக்கின்றேன்  
மிகவிரைவில் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் இப்பகுதி  களப்புகளுக்கு எல்லையிடும் பணியினை முன்னெடுக்கவுள்ளதால் இதைப்பற்றி அதிகம் பேசவேண்டிய தேவையில்லை .எல்லைப்படும் போது இப்பிரச்சினை நிரந்தரமாக  மாற்றம் பெறும் என தெரிவித்தார் 

எனினும் ஆர்ப்பாட்டக்காரர்களால் களப்பின் எல்லையிடப்பட்டிருந்த வேலிகள் உடைத்தெறியப்படடமை குறிப்பிடத்தக்கது.

No comments: