Monday 7 March 2016

சர்வதேச மகளிர்தினம் மார்ச் 08ம் திகதி இன்று



சர்வதேச பெண்கள் தினம் உலகளாவிய ரீதியில் மார்ச் 08ம் திகதி கொண்டாடப்படுவது சகலரும் அறிந்தவிடயம்.



 இது சமுக அரசியல் பொருளாதார தளங்களில் பெண்கள் நிகழ்த்திய சாதனைகளையும் எதிர்கால நிகழ்கால நோக்கங்களை சாதனைகளையும் எமது தற்கால மற்றும் எதிர்கால சந்ததிக்கு எடுத்துக் கூறும் தினமாக அமைகின்றது


உலகில் புரட்சிகர சிந்தனைகள் தோற்றம் கண்ட 1900களின் ஆரம்பத்திலேயே சர்வதேச பெண்கள்தினம்  அனுஸ்டிக்கப்பட்டுள்ளது என அறியக்கூடியதாகவுள்ளது

உலகில் தொழிற்சாலைகளின் விரிவாக்கம் இதில் இனைத்துக் கொள்ளப்பட்ட பெருமளவான பெண்கள் இவர்களுக்கு அன்று வழங்கப்பட்ட அடக்கு முறைகளுடன் கூடிய ஊதியங்கள் , சாதி வெறி , அடக்குமுறை , ஆண் ஆதிக்கம் , முதலாளித்துவத்தின்  பெண் சித்திரவதை , பாலியல் தேவைக்கு அடிமையாக்குதல் காரணமின்றிய பனிநீக்கம் போன்ற பல காரணங்களால் அன்று  புரட்சி வெடித்தது.

இதன் அடையாளமாக பெண்கள் தமக்கு எதிராக குரல் எழுப்பத் தொடங்கினர்.உலகம் முழுவதிலுமுள்ள பெண்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்துவதற்கான ஒரு தினம் சர்வதேச அளவில் பிரகடனப்படுத்தப்பட வேண்டுமென 1910ல் ”கொப்பன்ஹேகன்” நகரில் கூடிய சர்வதேச உழைக்கும் பெண்கள் மாநாட்டில் ஜெர்மனியைச் சேர்ந்த கிளாரா ஜெட்கின் என்பவர் ஒரு யோசனையினை முன்வைத்தார்.  இங்குதான் சர்வதேச பெண்கள் தினம் உதயமானது
இந்த வரலாற்று தீர்மானத்தினை தொடர்ந்து 1911ஆம் ஆண்டு மார்ச் 19ல் முதலாவது சர்வதேச பெண்கள் தினம் ஜரோப்பா மற்றும் அமெரிக்காவின் பல நகரங்களிலும் அனுஷ்டிக்கப்பட்டது

1917ல் முதலாவது உலகமகாயுத்த காலபகுதியில் ரஷ்யப் பெண்களால் முன்னெடுக்கப்பட்ட சமாதானத்தினைக் கோரும் முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம் மார்ச் 08முதல் 12ம் திகதி வரை நடாதப்பட்டுள்ளது

இவ்வாறு பல நாடுகளில் ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கப்பட்டு வந்த சர்வதேச பெண்கள் தினம் 1975ல் ஜக்கிய நாடுகள் சபையினால் அங்கிகரிக்கப்பட்ட பின்னர் மேலும் இத்தினம் பரவலாக்கப்பட்டு உலகம் முழுவதும் ஒரே தினத்தில் அதாவது இன்றைய மார்ச் 08ல் கொண்டாடப்பட்டு வருகின்றது.

மானிடப் பிறவியிலே ஆனும் பெண்னும் சமமானவர்  ஆண்கள் செய்யும் அத்தனை வேலைகளையும் பெண்களும் செய்ய முடியும் என இன்று நிருபித்து நிற்கின்றது பெண்கள் சமுதாயம்

பெண்களாகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டு மம்மா எனக் கவிபாடிய - கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின்  கவிதையின்  ஆழம் - பெண்களின் பெருமையினையும் சிறப்பையும் காணக்கூடியதாக உள்ளது.

 பெண்ணாணவள் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற நான்கு குணங்கள் கொண்டவள். பெண் மென்மையாணவள் அழகு பொருந்தியவள் கருனை மிக்கவள்  என்றெல்லாம் போற்றுவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை

 இந்த நவீன காலத்திலும் மணித உரிமைச் சட்டம் கடுமையாக பின்பற்றப்படுகின்ற நிலையிலும்
பெண் பெண்சிசுவை கருவிலே கொல்வதும்    தெருவில் வீசி எறிவதும் வைத்திய சாலைகளில் விட்டுச் செல்வது போன்றவைகள்
நடந்தேறிக் கொண்டுதான் இருக்கின்றது.
 இன்றைய உலகிலும் கடந்தகாலம்களிலும் பெண்களின்பங்களிப்பு வீட்டிற்குள்ளும் வெளி உலகிலும் பிரகாசித்துக் கொண்டுதான் உள்ளது .
 இன்றைய நிலையில் பெண் சமுதாயம்  எட்டமுடியாத அடையமுடியாத துறைகள் எதுவும் இல்லை உலகின் முதல் பெண் பிரதமராக அமரர்  சிறிமாவோ பண்டாரநாயக திகழ்கின்ரார் இது போல் பாசத்தின் இருப்பிடமான அன்னை தெரேசா     இந்தியாவுக்கு இந்திராகாந்தி, இரும்பு அரசி மார்கிரட் தட்சர், வின்வெளித்துறையில் வெலண்டினோ தெரஸ்கோவா, இங்கிலாந்தின் மகாராணி எலிசபெத்   இவ்வாறு பலரை  செல்லலாம்    
இன்றைய நவீன   தலைமுறை சமுதாயப் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றம் மனித சமுதாயத்திற்கு பெருமை தருகின்றது .
 ”வீட்டிற்குள் பெண்ணை பூட்டி வைத்த விந்தை மானிடர் தலைகுனிந்தார் “ என கவிபாடிய பாரதியாரின் கனவுகள் இன்று நனவாகி உள்ளது

உலகளவில் இயங்குகின்ற தொழிற்சாலைகள் ,  யாவும் பெண்களின் கைகளிலேயே  தங்கியுள்ளது. பெண்கள் சமுதாயம் இன்றைய  களநிலவரத்தில் முதல் நிலையில் உள்ளதினை அவதானிக்க முடிகின்றது  

 உலகிலுள்ள ஒவ்வொரு நாடுகளின் அரசும் பெண்களுக்கு எதிரான வண்முறைகளை தடுப்பதற்கு பல்வேறு கடுமையான சட்டங்களூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் வன்முறைகள் எதிர்பார்த்தளவிற்கு கட்டுப்படுத்தக் கூடியதாக அமையாதது வேதனைதரும் விடயமே.

இன்று  பாரம் பரிய கலாச்சார மரபுகளையும்,  மத கொள்கைகளையும் , பின்பற்ரறும்  நாடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்  இதிலும் சிறுபராய பாடசாலை சிறார்கள் காமுகர்களின் வெறிக்கு இரையாவது இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.


 பல்வேறு பெண்கள் அமைப்புக்கள் இன , மத , சமய , நிற , பேதம் , கடந்து ஒரு குரலில் போராட்டம்களை இனைந்து தொடர்வதுடன் அந்தந்த அரசுகளிடம் நீதி கோரி குரல் கொடுத்து வருகின்றது , இவ்வாறான போராட்டம்கள் கடந்தகாலம்களில் நாட்டின் ஆட்சியினை முடக்கியிருந்ததையும் காணக்கூடியதாகவுளது 

இலங்கை ஜனனாயக சோசலிச குடியரசின் மனித உரிமைகள் பிரகடனத்தின் உறுப்புரை 17ல் பெண்களது சுயமுயற்சிகள் நாட்டின் நலன் கருதும் அவர்களது நடவடிக்கைகளுக்கு இடையூறு எதுவும் விதிக்கப்படக்கூடாது என்றும் தண்டனைச் சட்டவாக்கங்களும் தொடர்கின்றது நோக்கத்தக்கது

இலங்கையில் பெண்கள் சட்டத்தரனிகள் சங்கம் 1962ல் உருவாக்கப்பட்டிருக்கின்ற நேரம் 1988ல் பால்நிலை சமத்துவம் கருத்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது

இது போல் இலங்கையின் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள உலகின் முதல் பெண் பிரதம மந்திரியின் மகள் கெளரவ சந்திரிக்கா பண்டாரநாயக்க முதல் பெண் ஜனாதிபதியாக 1944ல் தெரிவு செய்யப்பட்டார் இவ்வாறு ஆண்டுகள் மாதம் நாள் ரீதியாக இன்று பெண்களின் முன்னேற்றம் வளர்ச்சி கண்டு வருகின்றது இதற்கு ஏற்புடையது போல் இன்றைய அரசு அரசியலில் பெண்களின் பிரதினிதித்துவத்தினை அதிகரிக்கா நடவடிக்கை மேற்கொண்டு வருவது பெண்ணினத்துக்கு பெருமையானதே ஆகும்

No comments: