Sunday 20 December 2015

ஆலையடிவேம்பில் இடம்பெற்ற இயலாதோருக்கான இலவச உபகரணங்கள் வழங்கும் வைபவம்

கிழக்கு மாகாண சமுக சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுக சேவைகள் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாழ்கின்ற இயலாதோருக்கும், விசேட தேவையுடையோருக்கும் இலவச உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச சமுக பராமரிப்பு நிலையத்தில் இன்று (21) காலை இடம்பெற்றது.


இந்நிகழ்வின்போது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாழும் உடல் வலுக்குறைந்த நடக்கமுடியாத முதியவர்கள் இருவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வண்டிகளும், செவிப்புலன் குறைந்த யுவதியொருவருக்கு கேள்திறனை அதிகரிக்கும் சாதனமும், கட்புலன் குறைந்த வயோதிபப் பெண்ணொருவருக்கு மூக்குக் கண்ணாடியும், விசேட தேவையுடைய ஒருவருக்கு சக்கர நாற்காலியொன்றும் பிரதேச செயலாளரால் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டன.


அடுத்து, வழங்கப்பட்ட உபகரணங்களை செயற்திறனோடு பாவிக்கும் முறைகள் தொடர்பாகப் பிரதேச செயலாளராலும் சமுக சேவைகள் பிரிவு உத்தியோகத்தர்களாலும் அவற்றைப் பெற்றுக்கொண்ட பயனாளிகளுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுக சேவைகள் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.ஏ.சி.எம்.றக்கீப் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான பி.சண்முகநாதன், ஆர்.சிவானந்தம் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.








No comments: