Monday 14 December 2015

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முருகன் ஆலயத்துக்கு பிரதேச செயலாளர் விஜயம்

நாட்டில் தற்போது பெய்துவரும் பருவமழையினால் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீ விஜயாராமய பௌத்த விகாரையிலுள்ள முருகன் ஆலயத்தை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பிரதேச செயலக அதிகாரிகளுடன் இன்று (14) நேரில் சென்று பார்வையிட்டார்.


விகாரையின் பிரதம குரு சங்கைக்குரிய தேவகொட சோரத தேரரின் வேண்டுகோளின் பேரில் அங்கு சென்றிருந்த அவர், மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு சேறும் சகதியுமாகக் காட்சியளித்த முருகன் ஆலயத்தைப் பார்வையிட்டதுடன், அதன் பழைமை வாய்ந்த கூரை மற்றும் சுவர்கள் பழுதடைந்து இடிந்து விழக்கூடிய நிலையிலிருப்பதைக் கண்ணுற்றதுடன் விகாரையின் பிரதான சமையலறை மற்றும் அங்கு வந்து செல்கின்ற யாத்திரிகர்களின் குளியலறை என்பவை நீர் வழிந்தோட வழியின்றி வெள்ளத்தில் மூழ்கியிருப்பதையும் அவதானித்தார்.


அதனையடுத்து விகாரையின் பிரதம குருவானவரோடு பேசிய அவர், இந்நிலை தொடர்பாகத் தமது அதிகாரிகளினூடாக புத்தசாசன அமைச்சுக்கு எழுத்துமூலம் அறிவித்து காலக்கிரமத்தில் இதற்கான தீர்வினைப் பெற்றுத்தர தான் நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டார்.








No comments: