Sunday 29 March 2020

நாம் தவறிழைத்தால், நமது சமூகமுமே தண்டிக்கப்படும்.

(படுவான் பாலகன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளைய தினம்(30) காலை 6மணியிலிருந்து 2மணி வரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ள நிலையில் மக்கள் அனைவரும் மிக அவதானமாகவும், அறிவுபூர்வமாகவும் சிந்தித்து தமக்குத் தேவையான அத்தியாவசிய கருமங்களை மேற்கொள்ளுமாறு அரசதரப்பினர் தொடர்ச்சியாக வேண்டிக்கொண்டுள்ளனர்.



நாட்டில் பல்வேறு செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்தாலும், இன்னமும் ஒருசிலர், அவற்றினை விளங்கிக்கொள்ளாது, வீதியிலே நடமாடுவதும் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படுகின்ற போது, விதிமுறைகளை மீறி செயற்படுவதும் கவலையளிக்கின்றது.

நாளைய தினம் அத்தியாவசியமான பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவே ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்றதே தவிர, நாட்டில் கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்று நின்றுவிடவில்லை. இதனால் தேவையான இடங்களுக்கு, தேவையானவர்கள் மாத்திரம் சென்று, ஒவ்வொருவருக்கும் இடையிலான இடைவெளிகளைப் பேணி, கைகளை சவர்க்காரமிட்டு கழுவுவதுடன், சுகாதார திணைக்களத்தின் அறிவுரைகளையும் பின்பற்றவும்.


நாம் தவறிழைத்தால், நமது சமூகமுமே தண்டிக்கப்படும்.




No comments: