Sunday 1 March 2020

சமுர்த்தி 25 பயானிகளுக்கு காஸ் சிலிண்டர்

haran
(வி.சுகிர்தகுமார்) 
புதிய அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்றதன் பின்னர் சமுர்த்தி பயனாளிகளுக்கான பல்வேறு நலனுதவித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமானது சமுர்த்தி பயனாளிகளின் வாழ்கை நிலையினை உயர்த்தும் பொருட்டு சமுர்த்தி வங்கிகளினூடாக எரிவாயு சிலின்டர்கள் மற்றும் எரிவாயு அடுப்புக்களையும் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.


இதற்கமைவாக அரசுடன் இணைந்து செயற்படும் லிற்றோ காஸ் நிறுவனம் அம்பாரை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு வடக்கு வங்கியில் முதற் கட்ட நடவடிக்கையினை இன்று ஆரம்பித்தது.

ஆலையடிவேம்பு வடக்கு வங்கியின் முகாமையாளர் கே.அசோக்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் கே.லவநாதன் கலந்து கொண்டு திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.

கேணிக்கரை பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜையினை தொடர்ந்து திட்டத்தின் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் மற்றும் லிற்றோ காஸ் நிறுவனத்தின் பிராந்திய விற்பனை முகாமையாளர் ஏ.எம்.முகமட் சர்ஜீன் உள்ளிட்டவர்கள் அரசாங்கத்தின் இத்திட்டத்தின் நோக்கம் பற்றி மக்களுக்கு தெளிவு படுத்தினர்.

இத்திட்டத்தினூடாக சமுர்த்தி வங்கியானது சமுர்த்தி பயனாளிகளுக்கு 10ஆயிரம் ரூபா கடனை வழங்கி அதனை மாதந்த அடிப்படையில் அறவீடு செய்வதுடன் லிற்றோ காஸ் சிலின்டர் மற்றும் காஸ் அடுப்புஇ இணைப்பு கருவி உள்ளிட்ட பொருட்கள் 9559 ரூபாவிற்கு வழங்கப்படுகின்றது.

நிகழ்வில் முதற்கட்டமாக 25 பயானிகளுக்கு காஸ் சிலிண்டர் உள்ளிட்டவை இன்று வழங்கப்பட்டதுடன் குறித்த வங்கி பிரிவிற்குட்பட்ட 500 பயனாளிகளை இலக்காக கொண்டு இதத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





சமுர்த்தி வங்கிகளினூடாக எரிவாயு சிலின்டர்கள் மற்றும் எரிவாயு அடுப்புக்கள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை ! Rating: 4.5 Diposkan Oleh: Dicksith

No comments: