Tuesday 20 October 2015

பயிர்செய்கைத் திட்டம்

ஏற்றுமதியினை முதன்மையாகக் கொண்ட பயிர்செய்கைத் திட்டம்



ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயாகமகேயின் ஏற்பாட்டில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினது ஆலோசனைக்கு அமைய உள்நாட்டு ரீதியான நுகர்ச்சி பயிர் செய்கைத் திட்டம் அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவில் 300 பயிர் செய்கை குடும்கங்களுக்கான பயிற்சித்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று (18) ஞாயிற்றுக்கிழமை  ஜக்கிய தேசியக்கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஜெயாகரின் ஏற்பாட்டில் கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது

இவ் நிகழ்வில் சிறிய வெங்காயம் வெள்ளை எள்ளு பிஞ்சு மிளகாய் போன்றவற்றினை உற்பத்திசெய்தல் பராமரிப்பு முறைகள் உள்நாட்டு வெளிநாட்டு  சந்தைவாய்ப்பு  தொடர்பில் பிரதேச உற்பத்தியாளர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர்

இப் பயிற்சி நொறியில் ஆலையடிவேம்பு பிரதேச திவினெகும முகாமைத்துவப் பனிப்பாளர் நேசராஜா உடன் அமைச்சரின் இனைப்பாளர் வினோகாந் பிரதேச சபை செயலாளர் திருமதி கமலநாதன் மற்றும் விவசாய போதனாசிரியரும்  கலந்து கொண்ட்டிருந்தனர் 

No comments: