Monday 22 April 2019

அவசர நிலை அமுலுக்கு

haran


அவசர நிலை அமலுக்கு வந்தால் ஜனாதிபதிக்கு மேலும் அதிகாரங்கள் வழங்கப்படும். கூடவே போலிஸாருக்கும் அதிகாரங்கள் அதிகரிக்கும்.



குறிப்பாக தேவைப்படும் ஒருவரை நீதிமன்ற உத்தரவின்றியே கைது செய்து, குறிப்பிட்ட காலம் வரை அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யாமல் போலிஸார் தடுத்து வைக்கமுடியும்.

தேவைப்படும் இடத்தில் துப்பாக்கி பிரயோகம் செய்யவும் போலிஸாருக்கு அதிகாரம் இருக்கும்.

பாதுகாப்பை பலப்படுத்த இராணுவத்தினரும் ஏனைய பாதுகாப்பு படையினரும் சேவையில் ஈடுபடுத்தப்படலாம்.

தேவையான இடங்களில் திடீர் சோதனைச் சாவடிகள்கூட அமைக்கப்படலாம்.

பொது இடங்களில் ஆட்கள் கூடுவது மட்டுப்படுத்தப்படும். இது ஆர்ப்பாட்டங்கள் கலவரங்கள் உருவாவதை தடுக்க உதவும்

கலவர நேரங்களில் வன்செயலில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவும் போலிஸாருக்கு அனுமதி வழங்கப்படலாம்.

தேவையான இடங்களில் ஊடரங்கு சட்டங்களை பிறப்பிக்க முடியும்.

நிலைமையை முடிவு செய்ய தேவையான அதிகாரங்கள் அரசாங்க அதிபருக்கும் (நீதிபதி ) மஜிஸ்ட்ரேட்டுக்கும் வழங்கப்படும்.

ஊடகங்கள் மீது கட்டுப்பாடு கொண்டுவரமுடியும். தேவைப்படின் தணிக்கையும் அமலுக்கு வரலாம்.

குறிப்பாக சமூக ஊடகங்களே வன்செயலை பரப்ப பெரும் காரணமாக கருதப்படுவதால், அவற்றை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அப்படியான தவறுகளை செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள். பொதுவாக நிலைமையை மிகைப்படுத்தி காண்பிப்பது, வெறுப்புணர்வுப் பிரச்சாரம் ஆகியவற்றுக்கு இங்கு சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது




No comments: