Monday 1 April 2019

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் ஊடாக 15 இலட்சம்

haran


கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் ஆலய பணிமனைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது


கம்பெரலிய வேலைத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பல ஆலயங்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

இதற்கு அமைய மட்டக்களப்பு மாவடத்தில் உள்ள 15 கிறிஸ்தவ ஆலயங்களின் புனரமைப்பு மற்றும் நிர்மான பணிகள் இடம்பெற்று வருகின்றன

மட்டக்களப்பு கூழாவடி புனித அந்தோனியார் ஆலய பணிமனைக்கான அடிக்கல் மற்றும் மட்டக்களப்பு மாமாங்கம் சகாயபுரம் தூய சதாசகாய அன்னை ஆலயத்திற்கான நுழை வாயில் மண்டபத்திற்கான அடிகல் நாட்டப்பட்டது

பாராளுமன்ற உறுப்பினர் ஞா .ஸ்ரீநேசனின் நிதி ஒதுக்கீட்டின் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் ஊடாக 15 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரண்டு ஆலயங்களுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது

இந்நிகழ்வில் மட்டக்களப்பு கூழாவடி புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் மட்டக்களப்பு மாமாங்கம் சகாயபுரம் தூய சதாசகாய அன்னை ஆலய பங்கு மக்கள் ,அருட் சகோதரிகள் ,அருட் தந்தையர்கள் கலந்துகொண்டனர்















No comments: