Tuesday 28 February 2017

மழைவீழ்ச்சி அதிகரிக்கும்

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்புக் காரணமாக, எதிர்வரும் சில நாட்களில், நாட்டின் பல பாகங்களிலும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என, வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 
குறிப்பாக நாளை (02) முதல் 04ஆம் திகதி வரை நாட்டில், மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக, வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 

மேலும், பிற்பகல் 5.30 மணிக்குப் பின்னர், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வானம் இருள் சூழ்ந்து காணப்படும் எனவும் கடற்பிராந்தியங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. 
 இதேவேளை, வடக்கு - கிழக்கு பகுதிகளில் காற்றின் வேகம், 30-40 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படும் என்று கூறியுள்ள வளிமண்டலவியல் திணைக்களம், காலி, திருகோணமலைக் கடற்கரைப் பகுதிகளில், காற்றின் வேகம் 50-55 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படும் என்றும் எதிர்வுகூறியுள்ளது. 
கிழக்கு ஊவா சப்ரகமுவ மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில், சுமார் 50 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி காணப்படும். கடற்பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை அதிகமாகக் காணப்படுவதால், 55-60 கிலோமீற்றருக்கு அதிகமான வேகத்தில் காற்று வீசும் என்றும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.  

haran

No comments: