Thursday 29 August 2013

வலுவிழந்தோருக்கான வாழ்வாதார கொடுப்பனவு வழங்கல்

(உ.உதயகாந்த்)
“மஹிந்த சிந்தனை” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வலுவிழந்தோருக்கான வாழ்வாதார கொடுப்பனவு வழங்கல் மற்றும் தையல் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த பயிலுனர்களுக்கு சான்றிதழ் வழங்கல் வைபவம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் நவரெட்ணராஜா கலையரங்கில் இன்று 28.08.2013, புதன்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற்றபோது ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன் தனது தலைமை உரையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ் வைபவத்தில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழுகின்ற மாற்றுத் திறனாளிகள் 16 பேர், சமுக சேவைகள் திணைக்களத்தால் மாதாந்தம் வழங்கப்படும் உதவித் தொகைக்கான காசோலைகளை பெற்றுகொண்டதுடன், கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தால் ஆலையடிவேம்பு மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் நடாத்தப்பட்ட ஒரு வருடகால தையல் டிப்ளோமா பயிற்சிநெறியைப் பூர்த்தி செய்த 2011  மற்றும் 2012 ஆம் ஆண்டு பெண் பயிலுனர்கள் 30 பேர் தங்களுக்குரிய சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டனர்.


ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன் அவர்களுடைய தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்திற்கு பிரதம விருந்தினராக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகத்தர் கே.எல்.ஏ.எம்.ரஹ்மத்துல்லா, சமுக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எம்.மொகமட் அமீன், நிகழ்ச்சித்திட்ட உதவியாளர் கே.தெய்வேந்திரன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சி.எம்.ஹனீப், சமுர்த்தி வங்கிச் சங்க முகாமையாளர்களான ரி.பரமானந்தம், திருமதி.கமலப்பிரபா யோகநாதன் ஆகியோர் உட்பட கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.












No comments: