Thursday 13 September 2018

(GCE O/L) பரீட்சைகளின் மீள்திருத்தப்பட்ட பெறுபேறுகள் இணையத்தில்

haran

கடந்த 2017 இல் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தர (GCE O/L) பரீட்சைகளின் மீள்திருத்தப்பட்ட பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய இன்று (10) இரவு குறித்த பெறுபேறுகளை www.doenets.lk எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிடலாம் என, திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. உரிய பெறுபேறுகள் இவ்வாரம் பாடசாலைகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம், 2017 டிசம்பர் 12 ஆம் திகதி முதல் டிசம்பர் 21 ஆம் திகதி வரை க.பொ.த. (சா/த) பரீட்சைகள் இடம்பெற்றன. நாடு முழுவதிலுமுள்ள 5,116 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்ற இப்பரீட்சையில், 6 இலட்சத்து 88 ஆயிரத்து 573 (688,573) பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் விண்ணப்பிந்திருந்தனர்.மை அதன் அடிப்படையில் மார்ச் 28ஆம் திகதி வெளியிடப்பட்டது. அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு, அதற்கான பெறுபேறுகளே தற்போது வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. G.C.E. (A/L) Examination 2017 (After Re-Scrutiny) Enter your Index Number

No comments: