Thursday 20 September 2018

ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை)பழைய மாணவர் சங்க பொது கூட்டம்

 

அம்பாறை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண கல்லூரி (தேசிய பாடசாலை)யின்  பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் முகமாக விசேட அங்குரார்ப்பண பொது கூட்டம்    அதிபர்   திருமதி  க.சோமபாலா   தலைமையில்  இடம் பெறவுள்ளது.


கடந்த பல வருடங்களாக மிகப் பெரும் குறைபாடாக காணப்பட்ட   பழைய மாணவர் சங்கம் இல்லாமையினால் பாரிய வேலைகளை செய்யமுடியாமல் பாடசாலை சமூகம் மிகவும் சிரமத்தின் மத்தியில் செயற்பட்டு வருகின்றது
எனவே   இதனை கருத்தில் கொண்டு  பழைய மாணவர்களை வருகின்ற 24திகதி திங்கடகிழமை பாடசாலை கேட்போர்  கூடத்தில் ஒன்று சேருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது  

அன்றைய தினம்  சமூகத்திற்கும் பாடசாலைக்கும் இடையிலான உறவினை கட்டியெழுப்பும் முகமாக புதிய நிர்வாக சபை தெரிவு ,எதிர்கால நிகழ்விகள் ,திட்டங்கள் , பாடசாலையின் ஆரோக்கியமான அபிவிருத்தி விடையங்கள் தொடர்பாகவும்  கலந்துரையாட திடடமிடப்பட்டுள்ளது 

அன்புக்குரிய பழைய மாணவர்களுக்கு இச் சிறந்த சந்தர்ப்பத்தினை பயன் படுத்தி அனைவரது ஒத்துழைப்பினையும்  வழங்குமாறும் வருபவர்களது பதிவினை உறுதிப்படுத்த கீழ்வரும்  077 37 49 633 அல்லது 0777 51 4279 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு குறும் செய்தி அனுப்பிவைக்குமாறு  ஏற்பாட்டுக் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது 



haran

No comments: