Friday 6 April 2018

முதலாம் தவணை விடுமுறை இன்று ஆரம்பமாகிறது


அரசாங்க மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கான முதலாம் தவணை விடுமுறை இன்று ஆரம்பமாகிறது.


இந்த விடுமுறையானது, எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி நிறைவடைந்து, அன்று முதல் 2ஆம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகும். கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கு, எதிர்வரும் ஏப்ரல் 11 ஆம் திகதி முதலாவம் தவணை விடுமுறை வழங்கப்படும். இந்த விடுமுறை எதிர்வரும் 18ஆம் திகதி நிறைவடைந்து, அன்றையதினம் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை , 2017ம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தரப் பரீட்சைகளில் முறைக்கேடாக நடந்துக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 969 மாணவர்கள் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்படுகின்றன.பரீட்சைகள் உதவி ஆணையாளர் பிரணவதாஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், பரீட்சைப் பெறுபேறுகளில் திருப்தியில்லாத பாடசாலை பரீட்சாத்திகள், விடைத்தாள் மறுபரிசீலனைக்காக விண்ணப்பிக்க கூடிய நாள் இன்றுடன் நிறைவடைகிறது.

எனினும் தனிப்பட்ட பரீட்சாத்திகள் தங்களது மீள்பரிசீலனை விண்ணப்பங்களை எதிர்வரும் 12ம் திகதிக்கு முன்னர் அனுப்ப முடியும்.

No comments: