Sunday 5 November 2017

அவசரகால மின்தடை

haran
அவசரத் திருத்த வேலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் ஒருவாரத்துக்கு பாகுதி நேர மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் அம்பாறை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.


நாளை 6ஆம் திகதி திங்கட்கிழமை, அக்கரைப்பற்று மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட அக்கரைப்பற்று தேசிய பாடசாலை வீதி, சின்ன பள்ளிவாசல் வீதி மற்றும் இங்கினியாகல பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட ஹிங்குரான, சீனித்தொழிற்சாலை மற்றும் அம்பாறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட நியூகுண, வரிப்பத்தான்சேனை ஆகிய பிரதேசத்தில் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின் தடைப்படும்.

7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, பொத்துவில் மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட கோமாரி, ஊரணி, லாபுகல மற்றும் இங்கினியாகல மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட ஹிங்குரான, சீனி தொழிச்சாலை பிரதேசம், அம்பாறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட உஹண நகர பகுதி மற்றும் வீரகொட மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட வீரகொட ஆகிய பிரதேசங்களில் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின் தடைப்படும்.

8ஆம் திகதி புதன்கிழமை, அக்கரைப்பற்று மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட ஆலம்குளம் மற்றும் அம்பாறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட பியன்கல இருந்து கொனகொல்ல ஆகிய பிரதேசங்களில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5 மணிவரையும் மின் தடைப்படும்.


9ஆம் திகதி வியாழக்கிழமை, இங்கினியாகல மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட ஹிங்குரான, சீனித்தொழிற்சாலை மற்றும் அம்பாறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட அம்பாறை வைத்தியசாலை வீதி, ஹாட்ரி இருந்து கொட்டவெஹர ஆகிய பிரதேசங்கிளில் காலை 8.30 தொடக்கம் மாலை 5 வரையும், மின் தடைப்படும்.

10ஆம் திகதி வெள்ளிக்கிழமை, அக்கரைப்பற்று மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட அக்கரைப்பற்று நகர பகுதி, கல்முனை வீதி பிரதேசத்தில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5 மணி வரையும் மின் தடைப்படும்.

11ஆம் திகதி சனிக்கிழமை, இங்கினியாகல மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட ஹிங்குரான, சீனித்தொழிற்சாலை மற்றும் அம்பாறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட அம்பாறை வைத்தியசாலை வீதி மற்றும் தெகியத்தக்கண்டிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட தெகியத்தக்கண்டிய இருந்து கஜுவத்தை ஆகிய பிரதேசங்கிளில் காலை 8.30 தொடக்கம் மாலை 5 வரையும், மின் தடைப்படும்.

12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, அம்பாறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட உதயகிரியாய இருந்து கொனாகொல்ல மற்றும் அக்கரைப்பற்று மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட அக்கரைப்பற்று நகர பகுதி, கல்முனை வீதி மற்றும் வீரகொட மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட 12ஆம் கொலனி கிராமம் ஆகிய பிரதேசங்களில் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின் தடைப்படுமெனவும் அவர் மேலும் அறிவித்துள்ளார்.

No comments: