Sunday 5 November 2017

கௌரவிக்கும் நிகழ்வு

                 (ஜெ.ஜெய்ஷிகன்)
வாகரைக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட கண்டலடி அருந்ததி வித்தியாலயத்தில் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.



கண்டலடி புளியங்கன்றடி கல்வி அபிவிருத்திக் குழுத் தலைவர் சு.சிவசுதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி கலந்து கொண்டார்.


மேலும் அதிதிகளாக கோறளைப்பற்று வடக்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.பரமேஸ்வரன், கண்டலடி அருந்ததி வித்தியாலய அதிபர் எஸ்.மோகனசுந்தரம்,  வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச பிரமுகர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
கண்டலடி புளியங்கன்றடி கல்வி அபிவிருத்தி குழு நடாத்திய கௌரவிப்பு நிகழ்வில் 2016, 2017 ஆண்டுகளில் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு கண்டலடி அருந்ததி வித்தியாலய மாணவி சி.ஜினுஸ்கா (166 புள்ளிகளையும்), கண்டலடி அருந்ததி வித்தியாலய மாணவி அ.மதுசியா (156 புள்ளிகளையும்) ஆகியோர் இம்முறை ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளனர்.
வாகரைப் கல்விக் கோட்டமானது கடந்த கால யுத்த சூழலால் பாதிக்கப்பட்ட கோட்டமாக காணப்படுவதுடன், மாணவர்களின் கல்வி மட்டம் தற்போது படிப்படியாக உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










haran

No comments: