Monday 9 October 2017

சொற்கணை விவாதப் போட்டி


(துறையூர் தாஸன்)

மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றத்தால் நடாத்தப்படும் சொற்கணை  விவாதப் போட்டியின் அம்பாரை மாவட்டத்திற்கான தேர்வுப் போட்டி கடந்த சனிக்கிழமை கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில்,ஐந்தாவது தடவையாக, இம்முறை இடம்பெற்றது.


மொறட்டுவை பல்கலைக்கழக பொறியியல் பீட இணைப்பாளர் விக்கினேஸ்வரன் சுசிலன் தலைமையில் இடம்பெற்ற இப் போட்டியில் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை,உவெஸ்லி உயர் தரப் பாடசாலை, காரைதீவு சண்முகா மகாவித்தியாலயம், சாய்ந்தமருது மஹ்மூத் மகளிர் பாடசாலை, கல்முனைக்குடி அல் அஸ்ரக் மகா வித்தியாலயம், மற்றும்  அக்கரைப்பற்று மத்திய கல்லூரி ஆகிய ஆறு பாடசாலையைச் சேர்ந்த அணிகள் போட்டியாளர்களாக இதில் பங்குபற்றினர்.

அக்கரைப்பற்று மத்திய கல்லூரிக்கும் கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலைக்கும் இடம்பெற்ற அரையிறுதி விவாதப்போட்டியில் அக்கரைப்பற்று மத்திய கல்லூரி முதலாம் இடத்தினையும், கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை இரண்டாம் இடத்தினையும் சாய்ந்தமருது மஹ்மூத் மகளிர் பாடசாலை மூன்றாம்  இடத்தினையும் சுவீகரித்துக்கொண்டது.

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையைச் சேர்ந்த பா.கனிஸ்கன் தலைமையிலான ஜே.ஜஸ்ரின் ஹர்ஷன்,கி.முகேஸ் ராஜ்,தி.நஜிந்தன்,மற்றும் நி.ஜதுர்ஷன் ஆகியோரை பாடசாலையின் அதிபர் சகோதரர் சந்தியாகோ மற்றும் ஆசிரியர் திருமதி சு.மதிசூதனன் ஆகியோர் வழிநடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
haran

No comments: