Friday 1 April 2016

தேனீக்களைப்போல் மாணவர்கள் எப்போதும்சுறுசுறுப்பான...

மாணவர்கள் எப்போதும்  தேனீக்களைப்போல் வாழ வேண்டும். தேனீக்கள் கட்டுப்பாடானவை, சுறுசுறுப்பானவை, ஒழுக்கமுடையவை ஒரே தொழில் செய்பவை தேனுள்ள மலர்களையே தேடிச் செல்பவை.
மாணவர்களும் அவற்றைப் போல ஒழுக்கமும் கட்டுப்பாடும் சுறுசுறுப்பும் கொண்டவர்களாக  செயற்பட வேண்டும் என பாண்டிருப்பு நாவலர் அறநேறிப் பாடசாலையின் தலைவர் கலாபூஷணம்  வ.ஞானமாணிக்கம் தெரிவித்தார். திருவள்ளுவர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(27) பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.  இங்கு தலைமையுரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்;து  உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, இன்று உலகெங்கும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில், இந்துக் கலாசாரத் திணைக்களமும் நாடளாவிய ரீதியில் அறநெறிப் பாடசாலைகள் தோறும் வள்ளுவப் பெருமானுக்கு விழா எடுத்துப் பெருமைப்படுத்துகிறது. அந்தவகையில், எமது பாடசாலையும் விழா எடுத்துக்கொண்டாடி வள்ளுவப் பெருமானை கௌரவிக்கிறது. உலகத்துக்கே பொது நீதி சொன்னவர் வள்ளுவர். கல்வி,கேள்வி, அறிவுடமை, அரசியல், ஊக்கமுடமை, ஒழுக்கம்,சீலம்,பெரியொரைப் பேணல் அனைத்திலும் அவர் காட்டிய நீதி வழியைப் பின்பற்றிச் செல்வோமேயானால், உலகில் எந்தப் பிரச்சினைகளுக்கும் இடமே இருக்கமாட்டாது. ஆகவே மாணவர்களும் அறநெறி வழியில் வாழவேண்டும் என்றார்

No comments: