Monday 13 May 2019

நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் ! 
2nd update 

குருநாகல் வன்முறை சம்பவங்களால் நாடு முழுவதும் இன்று இரவு 9 மணி தொடக்கம் நாளை காலை 4 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவிப்பு. ஏற்கனவே ஹம்பஹா, வடமேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



மறு அறிவித்தல் வரும்வரை வடமேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

குருநாகல் – ஹெட்டிபொல பகுதியில் பொதுச்சொத்துக்கள் சேதம்: ஊரடங்கு அமுல்

குருநாகல் – ஹெட்டிபொல நகரில் சற்றுமுன்னர் ஏற்பட்ட பதற்றநிலையை அடுத்து அங்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் உடன் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் அங்கு சில குழுக்களினால் கடைகள், பொது சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் பிற்பகல் 2 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருப்பினும் அப் பகுதிகளில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்களின் சில கடைகள் உட்பட பள்ளிவாசல்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், சம்பவ இடத்தில் படையினர், பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் ! முஸ்லிம் கடைகள் , பள்ளிவாசல்களில் தாக்குதல் ! Rating: 4.5 Diposkan Oleh: Team

No comments: